செவ்வாய், 11 மார்ச், 2014

என் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )

சோர்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் தோழிகள்(தேவதைகள்) வானவனையும் இயல் இசை வல்லபியையும் குறித்து சிந்திக்கையில் மனதில் உடனடி நம்பிக்கை ,மகிழ்வு ஏற்படுவது எப்போதுமான நிகழ்வு ,எனது வாழ்வை குறித்த எண்ணத்தை மாற்றி  என் அளவில் நான் நிறைய மாறி இருக்க  என் இரு தோழிகளும்  ஒரு காரணம் ,நான் பார்த்து வியந்த அருமை தோழிகள் பற்றிய பதிவு தான் இது 

தசை சிதைவு நோயால் பாதிக்க பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி ,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவும் நோக்கில்  ஆதவா ட்ரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நிறுவி நடத்தி வருகின்றனர் .முகப்பின் மூலம் (face book ) தான் எங்கள் அறிமுகம் ஏற்பட்டது ,முதன் முதலில் chat box வழி தான் உரையாட தொடங்கினேன் வானவன் உடன் .இந்த உரையாடல் புத்தகம் ,சமூகம் என்று தொடந்து சென்று கொண்டு இருந்தது .ஏற்கனவே வானவன் மாதேவி மற்றும் இயல் இசை குறித்து எழுத பட்ட கட்டுரைகளை  படித்து விட்டதால் என் மானசிக தோழிகள் மேல் அளவு கடந்த அன்பில் நிறைந்து இருந்தேன் ,பின் ஒரு நாள் தொடர்பு எண் வாங்கி பேச தொடங்கினேன் , நிறைய நேரம் இந்த சமூகமும் புத்தகமும் குறித்து பேசி கொண்டே இருப்போம் .எப்போது நேரில் பார்போம் என்று மனம் ஏங்க தொடங்கியது .அந்த நாளும் வந்தது 
விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன் ,நன் ஏற்கனவே வாக்களித்தபடி என் தோழிகளை சந்திக்கும் அந்த நாளும் வந்தது .நாகர்கோவிலில் இருந்து இரவு தனியார் பஸ் பிடித்து மறுநாள் காலை சேலம் வந்து இறங்கினேன் .தொலைபேசி வழி வானவனை அழைத்தேன் .தொலைபேசியை எடுத்த வானவன் தம்பி நாகராஜை அனுப்புவதாக சொன்னாள் .நானும் என் அண்ணனும் பேருந்து நிலையத்தில் எதிர்புறம் காத்து இருந்தேன் ,தம்பி நாகராஜ் வந்து சேந்தான் ,நலம் வசாரிப்புகள் முடிந்த பின்பு அவன் பைக்கில் பின்புறம் அமர்ந்து கொண்டு என் தேவதைகளை சந்திக்க பயணம் ஆனேன் .என் தேவதைகளின் இல்லம் அடைந்தேன் .முக மலர்வுடன் என்னை வரவேற்று ஜானி எப்படி இருக்க என்றாள் என் தேவதை .அப்போது தான் முதன் முதலில் நேரில் பார்த்த படியால் ஒரு நிமிடம் என்  கண்ணை என்னால் நம்ப முடிய வில்லை. வாழ்வின் ஓவ்வொரு நாளோடும் போட்டி போட்டு கொண்டு என் தேவதைகள்  வாழ்ந்து வருகிறார்கள் ,வெற்றி என்றும் என் தேவதைகள் பக்கமே 






சுவையான காலை உணவு உண்ட பின் பேச ஆரம்பித்தோம் ,ஒரு நாள் முழுவதும் பேசினோம் ஒரு நாள் ஏன் அவளவு வேகமாக நகர்கிறது என்று நினைக்கும் படி நேரம் மிக வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது .உடலால் ஒடுங்கி போய் இருந்தாலும் வார்த்தையால் முக மலர்ச்சியால் அவர்களின் உற்சாகம் என்னுள்ளும் பற்றி கொண்டது .சிறு வயதிலே ஒருவர் அடுத்து மற்றவர் நோய் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவம் பார்த்து என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் இறுதியாக  மாற்று மருத்தவம் நாடி அதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்கலாம் என்று கண்டு இப்போது தனை போல் வாழும் எத்தனையோ மக்களை விடுவிக்க என்றும் போராடி கொண்டு இருகிறார்கள் என் தோழிகள். தங்கள் வாழ்வு முடங்கி விட்டது என்று வீடுகளில் அடைந்து கிடந்த தொடக்க காலத்தில் அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி சமூகம் குறித்து சிந்திக்க செய்ததில் புத்தகங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு .உண்மையில் புத்தகவாசிப்பின் மூலமே இந்த பேருலக்தின் கதவு அவரகளுக்கு திறக்க பட்டதும் ,சமூக சிந்தனை அதிகம் வெளி பட்டதும் ,காந்தியை குறித்து அதிகம் வாசித்து விவாதித்த படியால் மிக எளிமையாக வாழ்வது எப்படி என்று கற்று அதன் படி தான் வாழ்கின்றனர் ,பெரிதாக எதுவும் ஆசைகள் இல்லாவிட்டலும் இந்த சமூகத்தின் நல வாழ்வு மீது பேராசை உண்டு என் தேவதைகளுக்கு எப்போதும் .புத்தகம் என்ன தான் செய்யமுடியும் என்று கேட்பவர்களுக்கு நான் உடனே கை காட்டுவேன் புத்தகம் எதுவும் செய்யும் என்று என் தேவதைகளை நோக்கி 





அடுத்து தேவதைகள் நடத்தும் சிறப்பு மாற்று மருத்துவம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டேன் ,என் தேவதைகள் செய்வது மிக சிறப்பான பணி ,அங்கு மாற்று மருத்தவம் பெற வருபவர்களின் முகத்தில் வாழ்வின் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள் .இந்த பணி தினமும் தொடர்கிறது .மேலும் இப்படி பட்ட சிறப்பு குழந்தைகளின்  வாழ்வின் நலனுக்கு வேண்டி அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள், உபகரணங்கள்  கொடுத்து இருக்கிறார்கள்,சிறப்பு குழந்தைகளை  மகிழுந்து மூலம் கூட்டி வந்து மருத்துவம் பார்த்து பிறகு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கின்றனர் .சிறப்பு குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்வுக்கு வேண்டி அவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு தொடங்கி இருக்கிறார்கள் .பல்வேறு ஊர்களில் மாற்று மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறார்கள் இன்னும் பல்வேறு பணிகள் ,இந்த நோய் ஏற்பட முக்கிய காரணம் சுற்று சூழல் சீர்கேடு அதற்கு எதிராக பல்வேறு போரட்டம் மற்றும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் மாற்று மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டு கொண்ட படியால் இந்த வருட இறுதியில் நடத்தி தர ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் .அநேகமாக டிசம்பர் இறுதியில் நான் பிறந்த மண்ணில்  நடந்த இருக்கிறோம் அதறகான  ஏற்பாடுகளை செய்ய வேண்டும் 



தன் வீட்டின் முன் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து இருக்கிறார்கள் அதில் இருக்கும் எல்லா புத்தகத்தையும் படித்து முடித்து எதை குறித்து கேட்டாலும் விவாதிக்க தயாரக இருப்பது 
என் தேவதைகளின் சிறப்பு. நான் விடை பெரும் மாலை வேளை வந்தது.அதே நேரம் ,என்னை  பேருந்து நிலையம் சேர்க்க ஆட்டோ அழைத்து இருந்தாள் வானா ,ஏற்கனவே தம்பி ....... தனியார் பேருந்தில் முன்பதிவும் செய்து இருந்தான் ,மொத்த மகிழ்வுடனும் பிரிகிறோம் என்ற சோகத்துடனும் விடை பெற்றேன் என் தேவதைகள் வசிக்கும் கூட்டில் இருந்து 

என் தேவதைகளை குறித்து ஏற்கனவே எழுத பட்டுள்ள கட்டுரைகள் 
1.மகத்தான சந்திப்பு
2.ஒளிவிடு ஒளியேற்று
3.ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி
4.வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.


ஒளிவிடு ஒளியேற்று என்று லோகோவில் வைத்து இருப்பதால் தான் என்னவோ எப்போதும் நமக்கு ஒளி தரும் சூரியன் போல் நம்பிக்கையின் கீற்றுகளை பொழிந்து கொண்டே இருகின்றனர். நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியா ஆனால் ஒன்றும் செய்யாவிட்டால் எதுவுமே இங்கு நடைபெறாது என்ற காந்தியின் வரிகள் படி வாழும் என் தேவதைகள் நீங்கள் என்ன செய்தாலும் அது பெரிய விடயம் இல்லை ஆனால் நீங்கள் அதை செய்து ஆக வேண்டும் ,நீங்களே செய்யாவிட்டால் யார் தான் செய்வார்கள் என்பது எத்தனை உண்மை என்பதை என் தேவதைகளை சந்திக்கும் எல்லோரும் கற்று கொள்ளலாம் .ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கும் ஆதவா டிரஸ்ட் முன் பல்வேறு பணிகள் காத்து இருக்கிறது,இதில் நமது பங்களிப்பு என்னவாக இருக்க போகிறது .............இப்போது நம் முன் இருக்கும் பணிகள் 

1. மருத்துவ உதவிகளை மாவட்டம்தோறும் வழங்கவும் நோய் குறித்த விழிப்புணர்வு வழங்கவும் ஒரு முகாம் நடத்த சுமார் 50,000 ரூபாய் செலவாகிறது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

2. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக தற்போது ஒரு வாகனம் வாங்கி இருக்கிறோம். அதற்கு இன்னும் சுமார் 50,000 ரூபாய் பணம் செலுத்தவேண்டியுள்ளது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

3. சிகிச்சை மையத்திற்கான மாத வாடகை ரூபாய் 4,500 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

4. இலவச கணினி பயிற்சி அளிக்க ஆகும் செலவு ரூபாய் 5000 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

5. மருத்துவமனையுடன் கூடிய இல்லம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் வாங்க சுமார் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

உங்கள் தீபங்களில் ஒளிரும் சுடர் போதும் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற!

உங்கள் நன்கொடைகளை " Aadhav Trust" என்ற பெயருக்கு Cheque / DD அனுப்பலாம்.

Bank Name : Canara Bank

SB Account Name: Aadhav Trust

Branch : Suramangalam,

Name : A/c No : 1219101036462

IFSC Code: CNRB0001219

MICR Code: 636015005

தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.


வாழ்நாளில் நீங்கள் என் தோழிகளை சென்று காணா விட்டால் நீங்கள் வாழ்த்த வாழ்கை அர்த்தம் அற்றது என்பதே என்கருத்து .ஒரு முறை சென்று காணுங்கள் வாழ்வை குறித்து உங்கள் எல்லா பதங்களும் அடித்து நொறுக்க படும் .உங்கள் வாழ்வில் நீங்கள் சமூக சிந்தனை உள்ள மனிதன் ஆக மாறி தான் போவீர்கள் ......
விரைவில் என் தேவதைகள் தங்கள் வாழ்கை குறித்து புத்தகம் எழுதுவார்கள் ,அதை படிக்க இப்போதே ஆவல் கொண்டு இருக்கிறேன் ....
தொடர்பு முகவரி 

ஆதவா டிரஸ்ட் 
489-B வங்கி அலுவலர் காலனி 
ஹஸ்தம் பட்டி 
சேலம் -636007
தமிழ் நாடு 
இந்தியா 
தொடர்பு எண் :00919976399403

2 கருத்துகள்:

  1. கலங்க வைத்து விட்டது தோழரே...

    சகோதரிகள் வானவன் மாதேவி என்றும் சிறப்பாக இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

    பதிலளிநீக்கு