ஞாயிறு, 1 ஜூன், 2014

நாம் மனிதர்களா ?

சக மனுஷி ஐரோம் சர்மிளா சானு 

ஆம் நாம் மனிதர்களா ? எனக்கு எப்போதும் தோன்றும் சிந்தனை இது தான் .இந்த இந்தியா என்ற தேசத்தின் ஆக பெரும்பான்மைவாத மக்களும் மதத்தை பின்பற்றுகின்றனர் .எல்லா மதமும் சக மனிதன் உயிர்கள் மீது அன்பு செலுத்தவே கூறுவதாக தொடர்ந்து சொல்ல பட்டு கொண்டே வருகிறது .உண்மையில் நாம் சக உயிர் மீது அன்பு செலுத்துகிறோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும் ,ஆனாலும் இந்த பெரும் மக்கள் திரளில் வெகு சிலபேர்  தனை மறந்து இந்த சமூகத்தை நேசிப்வர்களாக  இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான் .

இந்த சமூகத்தின் பிரச்சனை தன்னை பாதிக்காவிட்டலும் தன்னையும்  தாண்டி இந்த சமூகத்தின் மீது உள்ள பேரன்பால் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியை ஒதுக்கி விட்டு மனம் உவந்து போராடும் அற்புத மனிதர்கள் தாம் உண்மையில் மனிதர்கள் என்று சொல்ல பட தகுதி படைத்தவர்கள் .அப்படி ஒரு மனுஷி தான் மணிப்பூர் ஈன்று எடுத்து தந்த தங்க மங்கை இரோம் சர்மிளா சானு .

இன்றைய நமது தனிப்பட்ட வாழ்கையில் நல்லவனாக வாழதே, சுயநலவாதி இரு அப்படி இல்லாவிட்டால்  இந்த சமூகத்தில் நீ வாழும் வாழ்கையில் தோற்று போவாய் என்று மீண்டும் மீண்டும் வரும் கால சமூகம் ஆன குழந்தைகளுக்கு இக்கால சமூகம் ஆன நாம் நமது எடுத்துக்காட்ட வாழ்வின் மூலமும் கற்பித்து  கொண்டே வருகிறோம்  .ஆனால் அதே மக்கள் தான் இங்கு மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை என்று குறை வேறு பட்டு கொள்கிறோம் .நமக்குள் இல்லதா ஓன்று எப்படி சமூகத்தில் இருக்கும், நாம் எல்லோரும் இணைந்தது தானே சமூகம் .

 இந்த தேசத்தின் அரசுகள் மணிபூர் மக்கள் மீது கொடுமையாக கொண்டு வந்த "ஆயுத படை சிறப்பு சட்டத்தை "எதிர்த்து  நீண்ட 14 வருடம் கடந்த பிறகும் இன்று வரை தொடர்ச்சியாக அகிம்சை வழியில் தனது உடலை வருத்தி இந்த தேசத்தின் கள்ள மவுனத்தை கலைக்க போராடி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி .ஆனால் இந்த தேசத்தின் பெரும்பாண்மை கூட்டம் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தன் குடும்பத்துடன் குதுகலமாக வாழ்வதால் தானோ என்னவோ ராணுவம் ,துணை நிலை சிப்பாய் கூட யாரையும் கொல்லவும் ,வன்புணரவும் அதிகாரம் கொடுத்து இருக்கும் சட்டத்தை நீக்க சக மனுசியுடன்  எழுந்து போராட தயார் இல்லை  இன்றுவரை .

தொடந்து 14 வருடம் ஆக தற்கொலை முயற்சி செய்தார் என்று வழக்கு பதிய பட்டு நீதி மன்றத்திற்கும் மருத்தவமனைக்கும் மாறி மாறி தன் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி ,ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் .

ஆமாம் உண்மையில் நாம் மனிதர்கள் தானா ? 





2 கருத்துகள்: