புதன், 26 பிப்ரவரி, 2014

யார் குற்றவாளி

சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும்,  சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.


இந்த கொடூர கொலையில் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு வாதத்தை வைத்து கடந்து செல்வது யாவருக்கும் எளிது ஆனால் இதற்கு பின் இருக்கும் முதலாளித்துவ கம்பெனிகளின் நிலை  மிக முக்கியம் அது  நாம் என்றும் கவனிக்க தவறுவது  .

பொருளாதார மந்தம் ஏற்பட்ட பிறகு கம்பெனிகள் செய்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து லாபம், அதகரிக்க அவர்கள் செய்த காரியம்  நிறுவனத்தின் செலவில் போக்குவரத்து வசதி, இலவச காஃபி, இளைப்பாறும் அறைகள், உடற்பயிற்சி அறைகள் போன்று ஏற்கனவே அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் கேள்விக்கிடமின்றி வெட்டப்பட்டன. ஊதிய உயர்வுகளும், ஊக்கத் தொகைகளும் மறுக்கப்பட்டு வந்தன.ஆனால் இவைகள் எல்லாம் ஊழியரின் உரிமைகள் ஆனால் இவை எல்லாம் மறுக்க படும் போதும் அமைதியாக இருந்து கொண்டே இருப்பது ஒவ்வொரு ஊழியரும் செய்யும் பணி இதற்கு பின்னால் தங்கள் பணி போய் விடும் என்ற பயம் தான் காரணம் .பக்கத்து அறையில் கொலை விழுந்தாலும் எதுவும் பேச கூட முடியா நிலையை உருவாக்கி வைத்து இருக்கிறது நிறுவனங்கள் எல்லாம் ,முதலாளிகள் சேர்ந்து நாஸ்காம் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்,ஆனால் ஊழியர்கள் இன்று வரை தங்களை காத்துகொள்ள தொழிற்சங்க அமைப்பை ஏற்படுத்த வில்லை  அதற்கு கம்பெனிகளும் அனுமதிக்க வில்லை 

மேலும் இப்போது புதிதாக வரும் பணியாளர்களை நிழல் ஊழியர் என்ற முறையில் பணி அமர்த்தி சிறிது அளவே ஊதியம் கொடுக்க படுகிறது .பணி செய்பவர்களுக்கு வேறு வழி இல்லை கடனை வாங்கி தான் படித்து வேலைக்கு வருவதால் கடனை அடைக்க எல்லாவற்றிக்கும் பணிந்து தான் ஆக வேண்டும் 

இப்போது சகோதரி உமா மகேஸ்வரி நம்மோடு இல்லை ஒரு ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர் பணி செய்யும் நிறுவனத்தின் கடமை ,அப்படி பட்ட கடமையில் இருந்து அந்த நிறுவனம் தவறி இருக்கிறது,அந்த நிறுவனத்தை காப்பாற்ற பெண் பாதுகாப்பு இல்லை என்ற ஒற்றை வாதம் முன்வைப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை  .ஓவ்வொரு பத்திரிகையும் மாற்றி மாற்றி எழுதி இந்த கொலை பின்னால் இருக்கும் (அந்த பெண் வேலை செய்த நிறுவனம் )நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை நிராகரித்து இருப்பதை வெளிபடுத்த வில்லை.கடைசியில் இந்த நிகழ்வில் அந்த பெண் தனியாக நடந்து சென்றது தான் கொலைக்கு காரணம் என்று அந்த சகோதரி மேல் பழி போட்டு தப்பித்து கொண்டது தான் வேதனை 

என்ன செய்ய போகிறார்கள் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் ?

என்று அமைய போகிறது தொழிற்சங்கம் ?

எப்படி பணி பாதுகாப்பு ஏற்படுத்த போகிறார்கள் கம்பெனிகள் ?

யார் அது சரியாக செய்கிறது செயல்படுகிறது என்பதை முடிவு செய்வது என்ற எண்ணற்ற கேள்விகளுடன் ....................... 

8 கருத்துகள்:


  1. குற்றவாளி நிச்சயம் நாம் எல்லோரும் தான்.. தனியாக நடந்து சென்ற அந்த பெண்ணையோ, பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுக்கத் தவறிய நிறுவனத்தையோ விட சுய ஒழுக்கம் தவறியவர்களுக்கு இனி இதுபோல் ஒரு குற்றம் நிகழாமல் இருக்கும் வண்ணம் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இலவசங்களுக்கும், சாதி சார்ந்தவர்களுக்கும் பதவியை கொடுக்க மறுத்து மக்கள் பாதுகாப்பை முன்னுறுத்தி வரும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் .உங்கள் (சுய ஒழுக்கம் eஏற்படுத்த தவறி விட்டோம் )கருத்தை ஏற்கும் அதே வேளையில் இந்த முதலாளித்துவதின் பங்கும் விவாதிக்க வேண்டிய விடயம் என்பதை அறிவுருத்தவே இந்த பதிவு ,எளிதாக சொல்ல வேண்டும் என்றால் முதலாளித்துவம் கடவுள் மாதிரி நாம் எல்லாம் பக்தன் (நுகர்வோர்) மாதிரி ,மேலும் இங்கு எல்லா தொகுதி வேட்பாளரும் சாதி ,மதம் பார்த்தே நிறுத்த படுவர் ,ஆண் பெண் சமத்துவம் சொல்லி கொடுக்க படா குடும்பத்தில் இருந்து வெளி வரும் நபர்கள் எப்படி பாதுகாப்பு முன் நிறுத்துவர் .இங்கு பாதுகாப்பு என்பது மிக பெரிய வலை பின்னல் அதில் மதம்,சாதி ,சமூகம் ,முதலாளித்துவம் எல்லாவற்றிகும் பங்கு உண்டு ,அதனால் எல்லாவற்றையும் விமர்சித்து தான் ஆக வேண்டும்

      நீக்கு
  2. அடப்பாவிகளா...? தனியாக சென்றால் கொலை செய்யலாமா...?

    வர வர எங்குமே பெண்கள் வேலைக்கு சென்று சிறிது தாமதமாக வரமுடியில்லை என்பது உண்மை... இவையெல்லாம் எங்கு சென்று முடியுமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

      உங்கள் கவலையே எனக்கும் ,என் கருத்து என்ன வென்றால் ஆண் பெண் சமத்துவத்தை வீட்டில் இருந்து தொடங்குவோம் ,இனியாவது வரும் தலைமுறை ஆவது காக்க படட்டும்

      நீக்கு
  3. முதலாளிகளுக்கு லாபம் தான் முக்கியம் , நமது உயிர் ..............க்கு சமம் ... இதுதான் இந்தியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ,அறம் என்று ஓன்று முதலாளித்துவத்திற்கு இல்லை ,

      அப்படி அறம் இல்லாவிட்டால் இங்கு வாழவே முடியாது என்பது

      நிதர்சனம் .என்ன செய்ய போகிறோம் நாம் என்று தான் தெரியவில்லை

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

      தள அறிமுகம் செய்தது மிகவும் மகிழ்வு

      நீக்கு