புதன், 7 மே, 2014

கல்வி என்ன விபச்சாரமா ?

ஒவ்வொரு கல்வி சாலை திறக்கப்படும் போதும்  சிறை கதவுகள் மூட படுகின்றன என்றான் ஒரு அறிஞன் . இது எவளவு உண்மையான தேவ வார்த்தை .கல்வி சாதி இழிவை போக்கி மனித வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருகிறது என்பதும் நிதர்சனம் இங்கு  .நாம் கல்வி கற்கிறோம் என்பதன் பயனே மனித தன்மையுடன் வாழ செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் .ஒரு நாடு மதிக்கப் படுகின்றது என்றால் அதற்கு காரணம் அந்த நாட்டின் கற்றவர்களின் அளவை பொறுத்தது தான் .

நம் இன்றைய கல்வியின் நிலை என்ன ?மொத்த மக்களும் ஒரே சமமான கல்வியை தான் படிக்கிறோமா ? இங்கு தமிழ் வழி பள்ளிகளும் ,மெட்ரிக் பள்ளிகளும் ,சி பிஎஸ் ஈ பள்ளிகளும்  என்று  பல வழிகளில் கல்வி சொல்லி தர படுகிறது .முதலில் காமராஜர் காலத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சமத்துவம் வேண்டும் என்பதற்காக உடை ,செருப்பு ,மதிய உணவு என எல்லோருக்கும் சமம் ஆக வழங்க பட்டது ,ஒரே முறை கல்வியும் வழங்க பட்டது அதனால் சமத்துவமும் இருந்தது ,


இப்படி நடைபெற்ற சுதந்திர தமிழகத்தின் தொடக்க கால கல்வி அந்த சமத்துவ பாதையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பித்தது இந்தியாவில் அமல் படுத்த பட்ட தாராளம் மயமாக்கல் கொள்கைக்கு பிறகு ,ஆங்கில வழி கல்வி ஒன்றே ஒரே வழி ,அந்த வழியில் கல்வி பெறாதவர்கள் எல்லாம் வேலை பந்தயத்தில் வீழ்ந்து போவர் என்ற பிரச்சாரம் மிக வேகமாக பரப்ப பட்டது ,மக்கள் மெல்ல மெல்ல காசு சம்பாதிக்க வக்கில்லாத தாய் மொழியை படித்து என்ன பிரயோஜானம் என்று என்ன தொடங்கினர் .


இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகள் பணம் உண்டாக்க ஏற்கனவே சமூகத்தை கெடுத்த சாராயம்  காய்ச்சி விற்கும் தொழிலில் இருந்து வெளி வந்து கல்வி சாலை அமைக்கும் தொழிலில் தாங்கள் மது விற்று சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஆங்கில வழி கல்வியை உருவாக்கினர் ,தமிழ் நாட்டின் குக் கிராமத்திலும் கூட ஆங்கில வழி கல்வி சாலைகள் அமைந்தன.அதுவரை நடந்தோ அல்லது அரசு பேருந்தில் தான் கல்வி சாலை சென்று வந்தனர். ஆங்கில கல்வி சாலை ஆரம்பம் செய்த பிறகு எல்லா குக்கிராமத்திலும் பள்ளி பேருந்துகள் சென்று வர தொடங்கியது ,தினமும் சூ அணிதல் , டை கட்டுதல் ,என்று பல வெளி புற அடையாளம் மூலம் ஆங்கில கல்வி மோகம் மிக வேகமா பரவியது .

இந்த நிலையில் அரசு மெல்ல மெல்ல எல்லோருக்கும் கல்வி கொடுக்கும் தனது பொறுப்பில் இருந்து விலக தொடங்கியது .அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு செய்யாமல் இருப்பது  ,காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பது ,எல்லாவற்றிகும் மேல் பெண் குழந்தைகள் படிக்கும்  பள்ளிகளில் கூட கழிவறை கட்ட மறுப்பது மேலும் குடி தண்ணீர் அமைப்பு ஏற்படுத்ததா நிலை என்று அரசு  கல்வி சாலைநடத்தும் தனது பொறுப்பில்  இருந்து வெளியேறி கொண்டு இருந்தது .இதே நேரம் காசு இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்கில கல்விசாலை நோக்கி நடை போட தொடங்கினர் .

தமிழ் நாட்டில் எல்லோருக்கும் சம கல்வி கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு பக்கம் ,எல்லோருக்கும் இலவச கல்வி என்று மறுபக்கம் போரட்டம் இப்படி பட்ட சூழ் நிலையில் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி அமல் படுத்த பட்டது ,இரு  அரசியல் கட்சிகளின் சொந்த சண்டையால் சமசீர் கல்வி அமல் படுத்தவே பல சிக்கல் இங்கு  ,இந்த நிலையில் மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் ரூம் போட்டு யோசித்து பயனாக எல்லோரும் சி பிஎஸ் ஈ முறைக்கு மாறினார் .அதனால் தாங்கள் கல்விச்சாலை தொழில் தடை இன்றி  செழித்து வளர்ந்தது .

இப்படி பட்ட நிலையில் தான் அரசின் மிக முக்கிய பிளான் கல்வியில் இருந்து வெளியேற வகுக்க பட்டது . அது அரசின் மிக சிறந்த திட்டம் என்று விபச்சார ஊடகங்களால் முன் மொழிய பட்டது ,அது எல்லா தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய பட வேண்டும் என்ற அற்புத திட்டம் .பல்வேறு கட்ட தொடர் பேச்சுவார்த்தை பிறகு தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புகொண்டது .இதில் உச்ச காமெடி என்ன வென்றால் பல இடங்களில் 25 சதவீத பிள்ளைகள் கூட அரசு பள்ளியில் இப்போது கல்வி பெற வில்லை ,அப்படி என்றால் அரசு பள்ளிகளை பூட்ட வேண்டியது தானோ ?


இப்படி தமிழ் நாட்டில் கல்வி சென்று கொண்டு இருந்த நிலையில் இரண்டு தினம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்மைப்பு  சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் 25 கோடி அரசு கழிந்த வருடம் தர வேண்டும் அதை தரவில்லை அதனால் இந்த வருடம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெனாவெட்டாக கூறியது .மேலும் அரசுக்கும் தனியார் பள்ளி கூட்டமைப்புக்கு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தையில்  அரசு 25 கோடி தர ஒப்புகொண்டாதல் தனியார் பள்ளிகள் இந்த வருடமும் குழந்தைகளை சேர்க்கும் என்று நேற்று அறிவித்து உள்ளது அதை அரசின் வெற்றி என்று ஊடகம் நீட்டி முழக்கி வாசிக்கிறது .எவனுக்கும் வெட்கம் இல்லை இங்கு .

இந்த 25 கோடி இருந்தால் எத்தனை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு ,ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் இப்படி எத்தனை நன்மைகளை செய்ய முடியும் .ஆனால் அரசுக்கும் அதை குறித்து சிறிது கூட கவலை இல்லை ,கல்விசாலை நடத்த சொன்னால் அது அரசு வேலை இல்லை எல்லா மக்களையும் மடையர்கள் ஆக்கும் குவாட்டர் கடை நடத்துவதே அரசின் வேலை என்று அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது கல்வி விடயத்தில்  . இங்கு இருக்கும் விபச்சார ஊடகம் காசு வாங்கி கொண்டு கூவுகிறது தனியாருக்கு ஆதரவாக .


உண்மையில் எவனுக்கும் குழந்தைகளில் கல்வி குறித்த அக்கறை இல்லை ,இவர்கள் நடத்துவது விபச்சார விடுதிகள் தானே .காசு கொண்டு வந்தால் புணர்ந்து விட்டு போ என்பது மாதிரி காசு கொண்டு வந்தால் மட்டுமே படித்து விட்டு போ என்கிறது இன்றைய பள்ளிகள் .நாமும் தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வி ஒன்றே முன்னேற ஒரே வழி என்று ஆழ் மனதில் பதிந்து வைத்து இருக்கிறோம் .நீங்கள் கேட்கலாம் என்னிடம் பணம் இருக்கிறது  எனக்கு பிடித்த பள்ளியில் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் உனக்கு என்ன என்று .நீங்கள் கேட்பது உங்களை பொறுத்தவரை நியாயம் என்றாலும் ஏறி வரும் கல்வியின் விலையில் அரசு முழுவதும் வெளி வந்த பிறகு நம்மால் படிக்க வைக்க முடியா நிலையில் கல்வி கட்டண கொள்ளை வந்து நிற்கும் காசு கொடுக்க முடிய வில்லை என்றால் படிக்க வேண்டாம் என்பான் தனியார் பள்ளிகள் இன்றே பல இடங்களில் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது ,மேலும் மக்கள் திரள் மீது பல முறையில் இந்த சமத்துவம் இல்லா கல்வி மிக பெரிய பிளவை கொண்டு வரும் ,ஏற்கனவே சாதி மத பிளவில் சம படுத்த முடியா நிலையில் சென்று கொண்டு இருக்கிறோம் ,இன்னும் அதிக பிளவை தாங்கும் சக்தி இந்த மக்கள் திரளுக்கு இல்லை .இங்கு தேவை எல்லோருக்கும் ஒரே மாதரியான சமத்துவ கல்வி அதுவும் அரசே அதை இலவசமாக வழங்க வைக்க போராடுவது தான் ஒன்றே முடிவு  ,அப்படி நாம் இன்று போராட விட்டால் அடுத்த தலைமுறை கட்டண கொள்ளை தாங்க முடியாமல் ரோட்டில் இறங்கி போராடும் ,அப்போது அந்த  தலமுறை மாணவர்கள் சுட்டு வீழ்த்த படும் நடு ரோட்டில் ,உலகின் பல நாடுகளில் கட்டண கொள்ளை எதிரான மாணவர் போரட்டம் இதை தான் தெளிவு படுத்தி உள்ளது .கரம் கோர்ப்போம் ,இன்றே போரடுவோம்  நாளையை வரும் தலைமுறை கல்வி கனவு நலம் ஆகட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக