புதன், 18 ஜூன், 2014

வீடியோ கேம்சும் , நம் இன்றைய வாழ்க்கை முறையும் பின் நமது பெண்களும்

நான் சிறு வயதில் இருக்கும் போது எப்போது சமயம் கிடைக்கும், வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் விளையாடலாம் என்று எப்போதும்எண்ணி கொண்டு தான் இருப்பேன் .எல்லா குழந்தையும் என் வயதில் அப்படி தான் இருந்து இருப்பார்கள் .அப்படி விளையாடி விட்டு கை கால் முட்டில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வந்த நாட்கள் உண்டு .அன்று அம்மா வேறு அடி பின்னி எடுத்த பின்பு தான் காயத்திற்கு மருந்து இடுவார்கள் .இன்றும் நெஞ்சில் பசுமையான நிகழ்வுகள் அவை .ஆனால் இன்றைய பெற்றோருக்கு அந்த கவலை கூட இல்லை ,குழந்தைகளை எங்கு வெளியில் விளையாட விடுகின்றனர் இப்போது .அதற்கு சொல்லும் காரணம் சுத்தம் இன்னும் இத்தியாதி இத்தியாதி  என்று .ஆனால் குழந்தை எப்படி விளையாடாமல் இருக்க முடியும் ,அதனால் கவலை பட்ட  பெற்றவர்களையும் பிள்ளைகளையும்  நிறைவு படுத்த வந்தது தான் வீடியோ கேம்ஸ் என்று டிவியில் விளையாடும் விளையாட்டு .என் சிறு பிராயத்திலேயே வீடியோ கேம்ஸ் வந்து விட்டாலும் இன்று வரை நான் விளையாடியது இல்லை .இப்படி குழந்தைகளை வீட்டில் அடைக்க அடுத்து வந்தது  கம்ப்யூட்டர் கேம்ஸ் எனப்படும் கணிணி விளையாட்டு.அதன் அடுத்த வடிவம் மொபைல் கேம்ஸ் எனப்படும் தொலைபேசியில் விளையாடும் விளையாட்டு .நான் பணி செய்யும் இடத்தில் உடன் வேலை செய்யும் அக்கா பையன் எப்போதும் எல்லாம் நேரம்  கிடைக்கிறதோ அப்போது எல்லாம் கணிணியில் விளையாடி கொண்டே இருப்பான் .யார் சொன்னாலும் கேட்க மாட்டான் . இப்போது வரும் கணினி விளையாட்டு பைக் ,கார் எப்படி திருடுவது ,திருடிய வாகனத்தில் கடைக்கு சென்று அங்கு இருக்கும் பொருளை திருடி விட்டு போலீசிடம் மாட்டி கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்ற சொல்லி கொடுத்து கொண்டே...... பட்டியல் நீள்கிறது .மேலும் கை துப்பாக்கி மூலம் எதிரில் வருபவரை எப்படி சுட்டு கொல்வது என்று குழந்தைகள் கற்று கணினியில் சுட்டு தள்ளுகிறார்கள் சக மனிதர்களை.இது மிக கோரமான விடயம் .ஒரு நல்ல வாசகம் உண்டு "குழந்தைகள் மனது மிக மென்மையது  அதை குப்பையால் நிரப்பி விடாதீர்கள் " என்று .இப்படி பட்ட விளையாட்டுக்கள் இணயத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி பயன் படுத்த முடியும்  

 அதோடு நின்றால் கூட பெரிய பிரச்சனை இல்லை இப்போது புதிதாக வந்து இருக்கும் விளையாட்டு தொலைபேசியில் .இந்த விளையாட்டு விளையாட நாம் ட்ச் தொலைபேசி வைத்து இருக்க வேண்டும் என்பது தான் முக்கிய விடயம் .இன்று பணம் இல்லாதவன் கூட ட்ச் தொலைபேசி வைக்கும் நேரம் அதானால் இந்த விளையாட்டு விளையாட மிக எளிது .பெண்ணின் போட்டோ திரையில் வரும் வரும் .அந்த பெண்ணின் போட்டோ மீது எந்த இடத்தில் அழுத்துகிறோமோ அந்த இடத்தில் அந்த பெண்ணின் உடை மறைக்க பட்டு nude திரையில் தோன்றும் .இப்படி ஓவ்வொரு பாகமாக செய்து மொத்த உடலும் இறுதியில் nude ஆக திரையில் தோன்ற செய்வது தான் அந்த விளையாட்டு .

நமது வாழ்க்கை முறை நமை எங்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறது என்று பார்த்தால் பெண்ணுடலை எப்படி கீழ் படுத்தவது என்ற கேவல சிந்தனையில் தான் .என் பையன் நல்லவன் அவன் இப்படி பட்ட தவறு எல்லாம் செய்யமாட்டான் என்று நீங்க சொன்னால் உங்களை விட முட்டாள் உலகத்தில் இல்லை .இன்று இப்படி  விளையாடும் சமூகத்தை உருவாக்கி விட்டு தான் பாலியல் வன்புணர்வை தடுப்பது எப்படி என்று பேசி கொண்டு இருக்கிறோம் இன்று .

முக்கிய குறிப்பு : 
இப்போது ரேபிங் கேம்ஸ் (rape games) வேறு கணினி சந்தையில் கிடைக்கிறது .பெண்ணை எப்படி பூங்கா ,சுரங்கபாதை  ,தனி பங்களா ,யாருமற்ற அலுவலகம் என்று வன்புணர்வு செய்யாலம் என்பதே அந்த கேம் கற்று கொடுப்பது 

ஆம் நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் ? 

சனி, 14 ஜூன், 2014

தோழன்


பயணங்கள் ஒரு மனித வாழ்கையை மாற்றி அமைக்குமா என்றால் ஆம் என்று சொல்லாம் அந்த ஆம் என்ற சொல்லுக்கு உதாரணம் தான் "சே " உலகில் தோழன் என்று சொல்ல பட தகுதி படைத்த ஒரு மனிதன் உண்டு என்றால் அந்த போட்டியில் பெரும்பாலும் முதல் இடமும் "சே " இக்குதான் .

சே குவேரா  அல்லது சே என்று அறிய பட்ட எர்னஸ்டோ குவேரா டி லா செர்னோ அர்ஜென்டினாவில் ரொசாரியோ என்ற இடத்தில் 1928 ஜூன் 14 இல் பிறந்தார் .அவருக்கு சிறு வயதிலே ஆஸ்மா இருந்ததால்  எப்போதும் இருமி கொண்டே இருப்பார் .அவர் தொடக்க கல்வி அவரது பெற்றவர்களளே கொடுக்க பட்டது .சிறுவயதிலே அவருக்கு ஆஸ்மா இருந்தாலும் எல்லா குழந்தைகளையும் போல பணிகளை செய்ய  சே தவறவே இல்லை .சேவின் பெற்றோர் அவரை ஒரு தைரியசாலி ஆகவே வளர்த்தனர் .சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கும் அளவுக்கு வசிதியான குடும்பம் சே உடையது .

சிறுவயதில் ரக்பி விளையாட்டிலும் செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய சே மிக சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் .அவர் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தது .மார்க்ஸ் ,போல்க்னர் ,கைடே,சல்காரி ,வேர்னே ,நேரு ,காப்கா ,காமுஸ் ,லெனின் ,பிரான்ஸ் ,ஏங்கல்ஸ்,வெல்ஸ் ,புரோஸ்ட் ஆகியவர்கள் எழுதிய நூல்களை விரும்பி வாசித்தார் சே . 

அவரது வயது அதிகரித்த போது அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா ,அலெக்ரியா ,இக்கசா,டாரியோ,ஆஸ்டுரியஸ்  ஆகியவர் எழுத்திகளின் மேல் ஈடுபாடு ஏற்பட்டது .புத்தர் அரிஸ்டாட்டில் ரச்ஸல் ,சிக்மெண்ட் பிராய்ட்,நீசே இவர்களின் புத்தகங்களில் தனது கருத்தையும் எழுதி வைத்தார் சே .  

மருத்துவம் படித்து ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சே மருத்தவம் படிக்க சேர்ந்தார் "புவனஸ் அயர்ஸ் " பல்கலைகழகத்தில் .ஒரு வருடம் படிப்பை நிறுத்தி விட்டு தனது நண்பன் அல்பர்டோ உடன் சேர்ந்து தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றி வந்தது அவர் வாழ்வை மாற்றி அமைத்தது .அந்த நேரத்தில் தென் அமெரிக்கா முழுவதும் தொழுநோய் பரவி இருந்தது .அவர் தனது இந்த பயணத்தில் எழுதிய குறிப்புகள் "மோட்டார் சைக்கிள் டயரி " என்ற நூல் ஆக வெளி வந்தது அதே பெயரில் திரைப்படம் ஆகவும் வெளி வந்து விருதுகளும் பெற்றது .

இந்த பயணத்தின் மூலம் தென் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவி இருந்த ஏழ்மை ,பிணி ,அறியாமை ,அடக்குமுறை ,வாக்குரிமை இல்லாமை ,வர்க்க வேறுபாடு இவை  எல்லாவற்றிகும் காரணம் முதலாளித்துவமும் அமெரிக்காவும் தான் என்று சே எண்ணினார் அந்த பிரச்னைக்கு தீர்வாக அவர் தெரிவு செய்தது மார்க்சியம் ,அந்த மார்க்சிய அரசை அமைக்க ஆயுத போராட்ட வழிமுறை ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு வந்தார் சே .பயணம் முடித்து அர்ஜென்டினா திரும்பிய சே மருத்தவ டிப்ளோமா பட்டம் பெற்றார் .

மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய சே இம்முறை பொலிவியா ,இக்வடேர்,பனாமா ,கொச்தரிகா,கெண்டுராஸ் எல்சல்வடோர் ,கவுதமாலா ஆகிய இடங்களுக்கு சென்றார் ,கவுதமாலாவில் மக்கள் ஆட்சி தெரிவு செய்த குடியரசு தலைவர் குஸ்மான் என்பவர் நில சீர்திருத்த முறையில் தனி நபர்களின் பெரும் பண்ணை முறையை ஒழிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார் .அமெரிக்காவுக்கு அது பிடிக்க வில்லை உளவு அமைப்பான சி ஐ ஏ அந்த மக்கள் அரசை கவிழ்க்க தீவரமாக செயல் பட்டு கொண்டு இருந்தது .அப்போது சே அங்க தான் இருந்தார் . அங்கு தான் முதலில் சே ததனது மனைவி கில்டாவை சந்தித்தார் .இவர் இடது சாரி சிந்தனை கொண்ட அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பின் உறுப்பினர் .இவர் மூலம் ஆக சே பல தலைவர்கள் உடன் நட்பு ஏற்பட்டது .சே கம்யுனிஸ்டுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல் பட தொடங்கினார் .ஆனால் கவுதமாலா அரசை அமெரிக்கா சதி செய்து கவிழ்த்தது .அப்போது சே இப்படி எழுதிகிறார் "விவசாயிகளிடம் ஆயுதம் கொடுத்து போரட்டத்தில் ஈடுபட செய்து இருந்தால் அரசு கவிழ்ந்து இருக்காது " என்று அன்றே  சி ஐ ஏ பார்வை சே மீது விழுகிறது ,அன்றில் இருந்து அவர் கொல்ல படும் வரை சி ஐ ஏ அவரை பின் தொடந்து  கொண்டே இருந்தது .

பாடிஸ்டா தலைமையில் இயங்கி கொண்டு இருந்த கியூபாவை விடுவிக்க பிடல் தலமையில் கொரில்லா போரட்டம்  நடந்து கொண்டு இருந்தது .ராணுவ தளம் மென்கடாவை தாக்கி ஆயுதம் கைப்பற்ற சூலை 26 புரட்சி நடந்தது அப்போது தான் .ஆனால்  இந்த போராட்டம் வெற்றி பெற வில்லை ,பிடல் மற்றும் அவர் தம்பி ரவுல் மற்றும் போராளிகள் கைது செய்ய பட்டனர் .15 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டது அப்போது வரலாற்று சிறப்பு மிக்க உரையான  "வரலாறு என்னை விடுதலை செய்யும் " என்ற உரை நிகழ்த்த பட்டது மருத்துவ மனையான நீதி மன்றத்தில் .அதன் பிறகு மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் மற்றும் தோழர்களுக்கு பொது மன்னிப்பு அழிக்க பட்டது . இந்த நேரத்தில் தான் பிடல் குழுவை சேர்ந்த லோபஸ் "சே" வை சந்திக்கிறார் கவுதமாலாவில் .இருவரின் கருத்தும் ஒத்து போகிறது சேவும் தங்கள் உடன் இணைய வேண்டி ரவுல் காஸ்ட்ரோ உடன் பேசுகிறார் லோபஸ் .கியூபா சுதந்திரம் ஜூலை மாதம் ஒரு நள் இரவில் சே -பிடல் சந்திப்பு மூலம் உறுதி செய்ய பட்டது .அப்போது சே இக்கு 27 இம் பிடலுக்கு 32 வயதும் தான் .

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான போரட்டம் விளைவாக 1958 கியூபா  தலைநகர் கவானாவுக்குள் நுழைந்து கியூபாவை போரட்ட குழு தன் வசம் ஆக்கியது .அந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு கியூபாவின் மகன் என்று சே பிடலால் முன் மொழிய பட்டார் .தேசிய வங்கி அதிபர் மற்றும் விவசாய துறை தேசிய தலைவர் என்ற பதவியில் அமர்ந்தார் சே .ரூபாய் நோட்டில் சே என்று கை எழுத்து இடும் அளவுக்கு சே வளர்ந்து இருந்தார் கியூபாவில் .ஆனால் சே என்றுமே தன்னை பெரியவன் என்று எண்ணி கொண்டது இல்லை  விவசாயிகள் உடன் இணைந்து கரும்பு வெட்டியும்  தொழிலாளர் உடன் இணைந்து மூட்டை தூக்கியும் வாழ்ந்தார் சே .ஆனால் சக மனிதன் மீதான அன்பு அவரை நிலை கொள்ள செய்யவில்லை கியூபாவில் . அமெரிக்காவில் சி பி என் தொலைகாட்சி அளித்த நேர்காணலில் அமெரிக்கா ஒரு கழுதை புலி அதன் ஏகாதிபதியத்தை வேரருப்பேன் என்று அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு சே பேசினார் .சே கியூபாவின் குடியுரிமை மற்றும் எல்லா பதவியையும் துறந்து காங்கோ பயணித்தார் .சே பிடலுக்கு எழுதிய கடித்தில் கியூபா உடன் ஆன புரட்சி தொட்பான கடமை முடிந்து விட்டதால் மற்ற நாடுகளில் புரட்சி ஏற்படுத்த தாம் கியூபா மண்ணை மக்களை விட்டு பிரிவதாக எழுதி இருந்தார் .ஆனால் அந்த நொடி ஒரு மிக பெரிய வீரனின் வாழ்கை முடிவுக்கு நாள் குறிக்க பட்டது 

கொரில்லா போரை வழி நடத்தும் நோக்குடன் பொலிவிய பயணம் ஆனார் போலி பாஸ்போட் உடன் .அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அத்துணை அழுத்தம் ஆக இல்லாததாலும் பொலிவியாவின்  ஏழ்மை புரட்சியை தோற்றுவிக்கும் என்று "சே" நம்பியதாலும் அங்கு கொரில்லா போராட்டம் வெற்றி பெற்றால் எல்லா நாடுகளுக்கும் பரவும் என்று "சே" எண்ணினார் .ஆனால் அவர் எதிர்பார்ப்பு வெற்றி பெற வில்லை ,அங்கு நடந்த போராட்டம் தோல்வியை தழுவியது."சே" வை தேடி  சி ஐ ஏ பொலுவிய காடுகளில் நுழைந்து தேடுதல் வேட்டை நிகழ்த்தியது .

தோழர்கள் உடன் யுரோ கணவாயை கடந்து செல்லும் போது வழியில் கண்ட ஆடு மேய்க்கும் ஏழை பெண்ணுக்கு 50 பேசொக்களை தருகிறார் ,அந்த பெண் தான் சே வை காட்டி கொடுக்கிறார் .சி ஐ ஏ அவரை சுற்றி வளைத்து கைது செய்து ஒரு பள்ளிகூடத்தில் வைக்கிறது ,அந்த பள்ளியின் நிலை கண்டு வருந்துகிறார் சே .வாழ்வின் இறுதி நேரத்திலும் சக மனிதன் மீதான அன்பு சே வுக்கு குறையவே இல்லை .இறுதியாக  கோழையே நீ சுடு , நீ சுடுவது சே வை அல்ல ஒரு சாதாரண மனிதனை தான் என்ற இறுதி வாசகம் ஒலிக்க  சே சுட்டு கொல்ல படுகிறார் ,தேசம் இனம் ,மொழி என்ற எந்த பாகுபாடும் பார்க்காது சக மனிதன் மீது கொண்ட பாசத்தால் போராடிய போராளி இந்த மண்ணை விட்டு சென்றான் .

தன் மகத்தான வாழ்க்கையால் சக மனிதன் மீதான அன்பால் தன் வாழ்கையை சக மனிதர்கள் வேண்டி அர்ப்பணம் செய்ததன் மூலம்  கோடிக்காணக்கான மக்களை தன் வச படுத்தியவன் ,வரலாற்றில் என்றும் சேவின் பெயர் நிலைத்து நிற்கும் .ஏன் என்றால் அவன் உயிர் இந்த மண்ணில் இருந்து பிரிந்தது சக மனிதன் மீது கொண்ட அன்பால் மட்டுமே ,இந்த பேருலகை நேசித்த வரலாற்றின் தலைமகன் தான் சே .இப்போது நடக்கும் கொடுமை என்னவென்றால் எந்த முதலாளித்துவத்தை சே எதிர்த்தாரோ அந்த முதலாளித்துவம் அவரை சந்தை படுத்தி கொண்டு இருக்கிறது  அமெரிக்காவில் அங்கு அதிகம் விற்பனை ஆவது சே உருவ படம் பொறித்த டி ஷர்ட் தான் ,ஆனால் வாழ்கையில் சே வின் கொள்கைகள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது  என்பது மிக பெரும் கேள்வி தான் இன்று வரை .எது எப்படி இருந்தாலும் "சே "வரலாற்றின் தலைமகன் என்பதில் மாற்று கருத்து இல்லை  .......



ஞாயிறு, 1 ஜூன், 2014

நாம் மனிதர்களா ?

சக மனுஷி ஐரோம் சர்மிளா சானு 

ஆம் நாம் மனிதர்களா ? எனக்கு எப்போதும் தோன்றும் சிந்தனை இது தான் .இந்த இந்தியா என்ற தேசத்தின் ஆக பெரும்பான்மைவாத மக்களும் மதத்தை பின்பற்றுகின்றனர் .எல்லா மதமும் சக மனிதன் உயிர்கள் மீது அன்பு செலுத்தவே கூறுவதாக தொடர்ந்து சொல்ல பட்டு கொண்டே வருகிறது .உண்மையில் நாம் சக உயிர் மீது அன்பு செலுத்துகிறோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும் ,ஆனாலும் இந்த பெரும் மக்கள் திரளில் வெகு சிலபேர்  தனை மறந்து இந்த சமூகத்தை நேசிப்வர்களாக  இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான் .

இந்த சமூகத்தின் பிரச்சனை தன்னை பாதிக்காவிட்டலும் தன்னையும்  தாண்டி இந்த சமூகத்தின் மீது உள்ள பேரன்பால் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியை ஒதுக்கி விட்டு மனம் உவந்து போராடும் அற்புத மனிதர்கள் தாம் உண்மையில் மனிதர்கள் என்று சொல்ல பட தகுதி படைத்தவர்கள் .அப்படி ஒரு மனுஷி தான் மணிப்பூர் ஈன்று எடுத்து தந்த தங்க மங்கை இரோம் சர்மிளா சானு .

இன்றைய நமது தனிப்பட்ட வாழ்கையில் நல்லவனாக வாழதே, சுயநலவாதி இரு அப்படி இல்லாவிட்டால்  இந்த சமூகத்தில் நீ வாழும் வாழ்கையில் தோற்று போவாய் என்று மீண்டும் மீண்டும் வரும் கால சமூகம் ஆன குழந்தைகளுக்கு இக்கால சமூகம் ஆன நாம் நமது எடுத்துக்காட்ட வாழ்வின் மூலமும் கற்பித்து  கொண்டே வருகிறோம்  .ஆனால் அதே மக்கள் தான் இங்கு மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை என்று குறை வேறு பட்டு கொள்கிறோம் .நமக்குள் இல்லதா ஓன்று எப்படி சமூகத்தில் இருக்கும், நாம் எல்லோரும் இணைந்தது தானே சமூகம் .

 இந்த தேசத்தின் அரசுகள் மணிபூர் மக்கள் மீது கொடுமையாக கொண்டு வந்த "ஆயுத படை சிறப்பு சட்டத்தை "எதிர்த்து  நீண்ட 14 வருடம் கடந்த பிறகும் இன்று வரை தொடர்ச்சியாக அகிம்சை வழியில் தனது உடலை வருத்தி இந்த தேசத்தின் கள்ள மவுனத்தை கலைக்க போராடி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி .ஆனால் இந்த தேசத்தின் பெரும்பாண்மை கூட்டம் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தன் குடும்பத்துடன் குதுகலமாக வாழ்வதால் தானோ என்னவோ ராணுவம் ,துணை நிலை சிப்பாய் கூட யாரையும் கொல்லவும் ,வன்புணரவும் அதிகாரம் கொடுத்து இருக்கும் சட்டத்தை நீக்க சக மனுசியுடன்  எழுந்து போராட தயார் இல்லை  இன்றுவரை .

தொடந்து 14 வருடம் ஆக தற்கொலை முயற்சி செய்தார் என்று வழக்கு பதிய பட்டு நீதி மன்றத்திற்கும் மருத்தவமனைக்கும் மாறி மாறி தன் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி ,ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் .

ஆமாம் உண்மையில் நாம் மனிதர்கள் தானா ?