புதன், 18 ஜூன், 2014

வீடியோ கேம்சும் , நம் இன்றைய வாழ்க்கை முறையும் பின் நமது பெண்களும்

நான் சிறு வயதில் இருக்கும் போது எப்போது சமயம் கிடைக்கும், வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் விளையாடலாம் என்று எப்போதும்எண்ணி கொண்டு தான் இருப்பேன் .எல்லா குழந்தையும் என் வயதில் அப்படி தான் இருந்து இருப்பார்கள் .அப்படி விளையாடி விட்டு கை கால் முட்டில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வந்த நாட்கள் உண்டு .அன்று அம்மா வேறு அடி பின்னி எடுத்த பின்பு தான் காயத்திற்கு மருந்து இடுவார்கள் .இன்றும் நெஞ்சில் பசுமையான நிகழ்வுகள் அவை .ஆனால் இன்றைய பெற்றோருக்கு அந்த கவலை கூட இல்லை ,குழந்தைகளை எங்கு வெளியில் விளையாட விடுகின்றனர் இப்போது .அதற்கு சொல்லும் காரணம் சுத்தம் இன்னும் இத்தியாதி இத்தியாதி  என்று .ஆனால் குழந்தை எப்படி விளையாடாமல் இருக்க முடியும் ,அதனால் கவலை பட்ட  பெற்றவர்களையும் பிள்ளைகளையும்  நிறைவு படுத்த வந்தது தான் வீடியோ கேம்ஸ் என்று டிவியில் விளையாடும் விளையாட்டு .என் சிறு பிராயத்திலேயே வீடியோ கேம்ஸ் வந்து விட்டாலும் இன்று வரை நான் விளையாடியது இல்லை .இப்படி குழந்தைகளை வீட்டில் அடைக்க அடுத்து வந்தது  கம்ப்யூட்டர் கேம்ஸ் எனப்படும் கணிணி விளையாட்டு.அதன் அடுத்த வடிவம் மொபைல் கேம்ஸ் எனப்படும் தொலைபேசியில் விளையாடும் விளையாட்டு .நான் பணி செய்யும் இடத்தில் உடன் வேலை செய்யும் அக்கா பையன் எப்போதும் எல்லாம் நேரம்  கிடைக்கிறதோ அப்போது எல்லாம் கணிணியில் விளையாடி கொண்டே இருப்பான் .யார் சொன்னாலும் கேட்க மாட்டான் . இப்போது வரும் கணினி விளையாட்டு பைக் ,கார் எப்படி திருடுவது ,திருடிய வாகனத்தில் கடைக்கு சென்று அங்கு இருக்கும் பொருளை திருடி விட்டு போலீசிடம் மாட்டி கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்ற சொல்லி கொடுத்து கொண்டே...... பட்டியல் நீள்கிறது .மேலும் கை துப்பாக்கி மூலம் எதிரில் வருபவரை எப்படி சுட்டு கொல்வது என்று குழந்தைகள் கற்று கணினியில் சுட்டு தள்ளுகிறார்கள் சக மனிதர்களை.இது மிக கோரமான விடயம் .ஒரு நல்ல வாசகம் உண்டு "குழந்தைகள் மனது மிக மென்மையது  அதை குப்பையால் நிரப்பி விடாதீர்கள் " என்று .இப்படி பட்ட விளையாட்டுக்கள் இணயத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி பயன் படுத்த முடியும்  

 அதோடு நின்றால் கூட பெரிய பிரச்சனை இல்லை இப்போது புதிதாக வந்து இருக்கும் விளையாட்டு தொலைபேசியில் .இந்த விளையாட்டு விளையாட நாம் ட்ச் தொலைபேசி வைத்து இருக்க வேண்டும் என்பது தான் முக்கிய விடயம் .இன்று பணம் இல்லாதவன் கூட ட்ச் தொலைபேசி வைக்கும் நேரம் அதானால் இந்த விளையாட்டு விளையாட மிக எளிது .பெண்ணின் போட்டோ திரையில் வரும் வரும் .அந்த பெண்ணின் போட்டோ மீது எந்த இடத்தில் அழுத்துகிறோமோ அந்த இடத்தில் அந்த பெண்ணின் உடை மறைக்க பட்டு nude திரையில் தோன்றும் .இப்படி ஓவ்வொரு பாகமாக செய்து மொத்த உடலும் இறுதியில் nude ஆக திரையில் தோன்ற செய்வது தான் அந்த விளையாட்டு .

நமது வாழ்க்கை முறை நமை எங்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறது என்று பார்த்தால் பெண்ணுடலை எப்படி கீழ் படுத்தவது என்ற கேவல சிந்தனையில் தான் .என் பையன் நல்லவன் அவன் இப்படி பட்ட தவறு எல்லாம் செய்யமாட்டான் என்று நீங்க சொன்னால் உங்களை விட முட்டாள் உலகத்தில் இல்லை .இன்று இப்படி  விளையாடும் சமூகத்தை உருவாக்கி விட்டு தான் பாலியல் வன்புணர்வை தடுப்பது எப்படி என்று பேசி கொண்டு இருக்கிறோம் இன்று .

முக்கிய குறிப்பு : 
இப்போது ரேபிங் கேம்ஸ் (rape games) வேறு கணினி சந்தையில் கிடைக்கிறது .பெண்ணை எப்படி பூங்கா ,சுரங்கபாதை  ,தனி பங்களா ,யாருமற்ற அலுவலகம் என்று வன்புணர்வு செய்யாலம் என்பதே அந்த கேம் கற்று கொடுப்பது 

ஆம் நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக