பள்ளிக்கூடம் .
பள்ளிக்கூடம் .
எனக்கு எம் தொடக்க கல்வி ஆசிரியர் என் கையை பிடித்து அ ,ஆ எழுத சொல்லி தந்து மூலம் தொடங்கியது எனது அறிவுலகத்தின் ஏணிப்படி(நம் எல்லோருக்கும் இப்படி தான் இருந்து இருக்கும் கல்வியின் தொடக்கம்) .இப்படியாக வளர்ந்து இறுதியாக பொறியியல் துறையில் கட்டுமான பொறியாளர் ஆக பணி செய்கிற வரை கல்வியின் மூலம் வாழ்கையில் மேன்மை பெற்று இருக்கிறேன் நான் .
நான் பிறந்த போதே எனது ஊரின் அரசு பள்ளியை மூடி இருந்தார்கள் .அதனால் என் ஊர் கிறிஸ்தவ சமயம் பின்பற்றும் மக்கள் நிறைந்த ஊர் ஆக இருந்ததினால் அரசு உதவி பெரும் பள்ளியில் தான் எனக்கான வாழ்க்கை தொடங்கியது (பள்ளிகளை ஏற்படுத்தி எல்லோரையும் படிக்க வைத்த முன்னவர்களை நன்றியோடு எண்ணி கொள்கிறேன் இந்த நேரத்தில் )இப்படியாக பனிரெண்டு வரை சொந்த ஊரிலே படித்து விட்டு பிறகு நாகர்கோவில் சென்று பொறியியல் தொழில் நுட்பம் படித்து விட்டு அதன் பிறகு வேலைக்கு சேர்ந்து சம்பாதித்த பிறகு தொலை தூர கல்வி மூலம் பொறியாளர் (b.tech )படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறேன் .நான் படித்தது முழுவதும் தமிழில் தான் .டியூஷன் போனதே இல்லை இதுவரை .ஆனாலும் நல்ல மதிப்பெண் உடனே தான் தேறி இருக்கிறேன் எல்லா வகுப்பிலும் . அரசு பள்ளிகளின் தீரா காதலன் நான் .தனியார் பள்ளிகளை முழுவதும் எதிர்ப்பவன் .கல்வியை காசுக்கு விற்பது தாய்பாலை விற்பதற்கு சமம் என்ற தமிழகம் கண்ட ஒரே நல்ல முதல்வர் பெரும் தலைவர் காமராஜர் ,உடன் உடன்படுபவன் நான் .....
ஆனால் இன்று என் ஊரில் பெருவாரி மக்கள் தாங்கள் படித்த பள்ளியை வெறுக்கிறார்கள் .தாங்கள் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படித்து வாழ்வில் முன்னேறாமல் இருந்து விடுவர் என்கிறார்கள் கேட்டால் .எனது பள்ளியில் எல்லா வசதியும் இருந்த பிறகும் .மக்கள் தான் படித்த எனது ஊர் பள்ளியை வெறுக்க முக்கிய காரணம் அன்று அவர்கள் படித்த போது காஞ்சி குடிக்க கூட காசு இல்லை அப்படி பட்ட நிலமையில் அபத்பந்தவனாய் இருந்த பள்ளிகூடம் இன்று பணம் அதிகம் வந்த உடன் எச்சில் இலை போடும் குப்பை தொட்டி ஆகி விட்டது .அதனால் தான் படித்த பள்ளியை எவனும் மதிப்பது இல்லை இன்று . அரசு பள்ளி ஆசிரியருக்கு கூட(எனது பள்ளி ஆசிரியர் கூட) தனது பள்ளி மீது நம்பிக்கை இல்லாமல் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர் ;வாங்கும் சம்பளம் அதிகம் அல்லவா ?
இன்று பலர் அரசு பள்ளி சரி இல்லை ஆசிரியர் சரி இல்லை .தமிழ் சரி இல்லை என்று வாதிடுகின்றனர் தனியார் பள்ளிக்கு ஆதரவாக. சமூக நீதி வேண்டுமென்று (உடை முதல் எல்லா சமூக மக்களும் ஒன்றிணைந்து படித்தோமே )நினைத்த என் எம் சமூக தந்தையர் கொண்டு வந்ததே அரசு பள்ளி .தரம் சரி இல்லை ஆசிரியர் சரி இல்லை என்பது இந்த அமைப்பின் பிரச்சனை அதை சரி செய்வதை விட்டு விட்டு தனியார் பள்ளிகளை தான் ஆதரிப்பேன் அவர்கள் தான் சரியா பாடம் நடத்துகிறார்கள் என்பது எல்லாம் சுத்த கம்பக் .நிலவு நாயகன் மயில் சாமி அண்ணாதுரை வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .அரசு பள்ளியும் பாழ் அல்ல அன்னை தமிழும் பாழ்அல்ல அறியா மனமே பாழ் என்பேன்
இன்று அரசு பள்ளியில் படிப்பவர்கள் எல்லோரும் தாழ்த்த பட்ட மக்களும் மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் தான் அதிகம் .நாம் தான் அரசு பள்ளியை காத்து ஆக வேண்டும் .ஏன் என்றால் அது மட்டுமே சமத்தவம் ஏற்படுத்த அமைக்க பட்ட புண்ணிய இடம் .எல்லோருக்கும் படிக்க ஏற்ற இடமாக அரசு பள்ளியை மாற்றுவது நம் ஓவ்வொருவர் கையிலும் தான் இருக்கிறது .முகப்பில் வெறும் வாய் வார்த்தையால் வடை மட்டுமே சுடாமல் செயலில் இறங்கி செய்து ஆக வேண்டும் இதுவே இன்றய நிலையில் மிக முக்கியமான விடயம் .அரசு தான் பணியை செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பது சரி தான் என்றாலும் அரசு செய்யும் முன் நம் அன்னை இறந்து விடுவாள் .தாயை காப்பது தனயன்களின் கடமை அல்லவா .இந்த பதிவு ஏற்கனவே எழுத நினைத்து இருந்தது தோழர்Sathish அவர்களின் ஒரு பதிவை படிக்கும் போது எழுத முடிவெடுத்து எழுதியும் விட்டேன் .
அரசுப்பள்ளிகள் நம் தாய் வீடு .நாம் எல்லோரும் சேர்ந்து அரசு பள்ளிகளை காப்போம் ..வெறும் பதிவு ஓன்று செய்ய முடியாது
செயல் தான் எழுத்தை பேச்சை விட முக்கியம் என்று நானும் உளமார எண்ணுபவன் என்பதால் அரசு பள்ளியை காக்க என்னால் முடிந்த எல்லாவற்றியும் செய்ய போகிறேன் .வாருங்கள் வந்து கை கோருங்கள் ..காப்போம் நமது தாய் வீட்டை ......
அரசுப்பள்ளிகள் நம் தாய் வீடு .நாம் எல்லோரும் சேர்ந்து அரசு பள்ளிகளை காப்போம் ..வெறும் பதிவு ஓன்று செய்ய முடியாது
செயல் தான் எழுத்தை பேச்சை விட முக்கியம் என்று நானும் உளமார எண்ணுபவன் என்பதால் அரசு பள்ளியை காக்க என்னால் முடிந்த எல்லாவற்றியும் செய்ய போகிறேன் .வாருங்கள் வந்து கை கோருங்கள் ..காப்போம் நமது தாய் வீட்டை ......
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக