வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நாமும் பின் நாமும்

(எல்லா )புகைப்பட உதவி -குகிள் ஆண்டவர் 

நாம் இவளவு தானே என்று கண்டிக்காமல் தடை செய்யாமல் விடும் ஓவ்வொரு நிகழ்வும் மிக பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் பின் நாளில் என்பதன் நிகழ்கால உதராணம் பெண்கள் தொடர்சியான வன்புணர்வு ,இப்படி மொத்த படி நிலையும் நாசம் ஆகும் வரை எதோ நமக்கும் இந்த சமூகத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று இருந்து விட்டு இன்று நடக்க கூட சம்பவங்கள் நடந்த பிறகு புலம்பியும் எழுதி தள்ளியும் ஒன்றும் ஆக போவது இல்லை ,நாம் எழுதுவது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது இங்கு இன்றுவரை எல்லாம் குப்பையும் கூட ,இன்றும் நம் வீடுகளில் வண்புணர்வு குறித்து உரையாட தொடங்கி இருக்கிறோமா ? ஆண் பெண் சமத்துவம் பற்றி குழந்தைகளிடம் சொல்லி கொடுக்க ஆரம்பம் செய்து விட்டோமா ? ஆணுக்கு கீழ் தான் பெண் என்று சொல்லும் எல்லா மத நூல் பொய் என்று சொல்லி கொடுத்து விட்டோமா ?ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கையில் ஏற்படும் கவர்சியை இது எல்லாம் இந்த வயதில் கார்மோன் மாற்றம் மூலம் தான் ஏற்படுவது தான் என்று சொல்லி கொடுக்க தொடங்கி விட்டோமா ? ஆணும் பெண்ணும் சமத்துவமாக நட்புடன் பழகும் நிலைமையை சரி என்று இன்று வரை ஓத்து கொண்டு இருக்கிறோமா ?

ஆணும் பெண்ணும் தனி தனி தீவு போல் இன்றும் கல்லூரி ,பள்ளிகள் பிரித்து வைத்து இருப்பதை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறோமா ? ,ஆணும் பெண்ணும் பழகினால் காதல் என்று எண்ணும் கேவல மனநிலை பெற்று இருப்பது சரி இல்லை என்று குடும்பத்தில் விவாதித்து இருக்கிறோமா?,ஆணை (உடல் )பற்றி பெண்ணுக்கும் பெண்ணை (உடல் )பற்றி ஆணுக்கும் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? பெண் உடல் அனுபவிக்கவே என்ற கேவல சிந்தனையை தொடர்ந்து புகுத்தியதும் ,புகுத்தி கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததும் போராடியும் இருக்கிறோமா ?இப்படி பல்வேறு தவறுகளை செய்து விட்டு பெண்
வன்புணர்வு செய்ய படும் போது எழுதி குவித்து கொண்டு இருப்பதால்  ஒன்றும் சரி ஆக ஆக போவதுமில்லை ,கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் ,இனி உள்ள தலைமுறை ஆவது பாதுகாக்க படட்டும் அதனால் ஆண் பெண் சமத்துவத்தை அவர் அவர்  குழந்தைகள் இடம் இருந்து தொடங்குங்கள் ,வாருங்கள் புது உலகம் படைப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக