திங்கள், 5 மே, 2014

சமத்துவத்தை நேசித்தவன் ................


"உலக தொழிலாளர்களே ஓன்று படுங்கள் 
நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை 
அடிமைதனத்தை தவிர 
ஆனால் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது" 

என்று கூறிய மக்களின் மேதை மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .

பிறப்பும் வாழ்கையும் 

இன்றைய ஜெர்மனியில் ஒரு பகுதியான புருசியாவின் டிரையர் நகரில்  1818 ,மே மாதம் 5ம் தேதி யூத குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் தொழில் செய்த தந்தைக்கு   மூன்றாம் பிள்ளையாக பிறந்தார் மார்க்ஸ் .தன் 17 வயதில் பள்ளி படிப்பை முடித்த மாக்ர்ஸ் சட்டம் பயில பான் பல்கலைகழகம் சென்றார் .வரலாறு ,மெய்யியல் அகிய துறைகளை பெர்லின் பல்கலைகழகத்திலும் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தை யெனா பல்கலைகழகத்தில் பெற்றார் .
1841 பட்டம் பெற்ற மார்க்ஸ் தொடக்கத்தில் இதழியல் துறையில் பணி செய்தார் .ஆனால் அவரின் தீவிர அரசியல் கருத்துகளால் பணியில் தொந்தரவு ஏற்படவே மார்க்ஸ் பாரீஸ் சென்றார் .அங்கு தான் இந்த உலகத்தின்  வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சம்பவம் ஏற்பட்டது .1844 மார்க்ஸ் ஏங்கெல்சை சந்திக்கிறார் .ஒரு தூய நட்பு அப்போது தான் துளிர் விட்டது . இந்த இருவருக்கும் ஆன நட்பே மூலதனம் மற்றும் கம்னியுஸ்ட் அறிக்கை போன்ற வரலாற்றின் போக்கை மாற்றிய நூல்கள் ஏற்பட காரணம் காரணம் ,அந்த தூய நட்பு மார்க்சின் மரணம் வரை அவரை காப்பாற்றவும் செய்தது .

பெர்லின் பல்கலைகழகத்தில் ஆய்வு மாணவர்கள் என்ற சங்கம் நிறுவி வரலாறு மற்றும் பொருளாதர வாதம் பற்றி விவாதம் செய்து வந்தார் மார்க்ஸ் .முதல் நாள் கேட்கபடும் கேள்விக்கு அடுத்த நாள் பதில் தருவார் அவர் பதிலால் எதிர்த்தவர்கள் வாயடைத்து போவர் .படித்து களைத்து உறங்கா விழிகள் ,வாரப்படாத கேசம் ,தாடியை நீவி கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது ,பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது என்று அவரை பற்றி பல்கலைகழகமே பேச வைத்தது.


காதல் என்னும் அற்புத சக்தி 

லூத்விகான்  வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடி பிரமுகர் ,அவர் குடும்பமும் மார்கஸ் குடும்பமும் நட்புடன் பழகி வந்தனர் .அந்த உயர் குடியில் தோன்றிய தங்க மங்கையே ஜென்னி .மார்கஸ் கண்கள் மட்டுமன்று  கேசம், தோல் எல்லாமே கருப்பு நிறம் ஜெர்மானியர் வெருப்புடன் நோக்கும் யூத இனம் வேறு ஆனால் ஜென்னி ரைன் லாந்தின் மிக சிறந்த அழகி பிரபுக்கள் வம்சம் . இவ்விருவரையும் வாழ்வில் இணைத்தது சேக்ஸ்பியர் கவிதைகளே .மார்க்ஸ் எல்லா சேக்ஸ்பியரின் கவிதைகளை மனனம் செய்தவர் . ஜென்னியின் தந்தையும் மார்க்சும் சேக்ஸ்பியரின் கவிதைகளை பற்றி எப்போதும் வியந்து பேசுவர் .இதனால் ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும் .அப்படி கவிதை மார்க்சிடம் இருந்து வீறு கொண்டு எழும் அந்த நிலையில் தான் ஜென்னிக்கு மார்க்ஸ் மீது காதல் அரும்பியது .ஜென்னி அகங்காரம் அற்ற அறிவும் தன்னலம் அற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவம் ஆணின் அழகு என்று எண்ணி இருந்தார் அந்த அழகு மார்க்சிடம் நிறைந்து இருந்தது .இவர்கள் காதல் திருமணத்தில் கை கூட எட்டு வருடம் காத்து இருக்க வேண்டி வந்தது .தன் காதல் தேவதை குறித்து மார்க்ஸ் உலகின் மிக சிறந்த பூ ஓன்று இருக்கும் ஆனால் அது கூட தோற்று போய் விடும் அவள் முன்னால் மேலும் ஒரு எரிமலையின் இதயத்தில் வடா மலர் போன்றவள் ஜென்னி என்றார் .,அப்படி பட்ட பெண் தன் வாழ்வில் வர வேண்டும் என்ற எண்ணம் தன அவர் டாக்டர் பட்டம் பெற மூல காரணம் .




என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல அவனை மறந்து விடு என்று மார்க்ஸ் பெற்றோர் கூறிய வார்த்தைகள் ஜென்னியை துன்பத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில் மார்க்ஸின் காதல் கடிதம் ஜென்னியை அடைந்தது அதை தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள் கண்ணில் நீர் ததும்பியதால் எழுத்துகள் மங்கலாக தெரிந்தது ,கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்தது அதற்கு காரணம் ஆன அற்புத வரிகள் "இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி ,ஜென்னி என்றால் காதல் "

தொழில் 

 பட்ட படிப்பை முடித்து ரைன் கெஜட் பத்திரிக்கை  வேலைக்கு சேர்ந்த பத்து மாதத்தில் அதன் ஆசிரியர் ஆக பொறுப்பு ஏற்றுகொண்டார் .மார்க்ஸ் எழுத்துகள் ஜெர்மானியர் மத்தியில் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சின,பத்திரிக்கை வியாபாரம் எகிற ஆரம்பித்தது .  மார்க்ஸ் இடதுசாரி சிந்தனை படைத்வர் ஆக மாறி கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் தந்தை அவரை குறித்து கவலை கொண்டு இருந்தார் . 1840ல் தத்துவ ஞனி கெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்து கொண்டார் .அவர்களில் மார்க்சின் கருத்துக்கு ஆதரவு கிட்டியது .கிறிஸ்தவ மதம் அறநெறி அற்றது .மனிதனுக்கு விரோதம் ஆன சக்திகள் மனிதனை ஆளுகின்ற மனித தன்மை அற்ற உலகத்தில் உண்டாக்க பட்டதே மதம் என்றார் மார்க்ஸ் .

மோசஸ் கோஸ் என்பவர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் ,அவர் மிகவும் இளம் வயதுகாரர் .அவர் மத்திய கால தத்துவ ஞானத்திற்கு இறுதி அடி கொடுப்பார்.கூர்மையான நகைச்சுவை உணர்வை ஆழமான தத்துவசெறிவுடன் இணைக்கிறார் .ரூசோ ,வால்டேர் ,கோல்பார்க் ,லஸ்லிங்க் ,கெய்னே ,ஆகியோரின் இணைந்த வடிவமே மார்க்ஸ் .மோசஸ் ஏசு நாதர் வருவார் என்று முன் கூட்டி சொன்னது போல் கம்யூனிசப் புரட்சி வர போகிறது என்று முன் கூட்டி சொன்னவர் தான் மார்க்ஸ் என்று எழுதி உள்ளார் . 

புரட்சி 

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் ஒரே வர்க்கம் சேர்ந்தவனே ,அவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்தால் அனைத்து தொழிலாளர் வாழ்வில் மகிழ்வு கிட்டும் என்று கூறியதோடு அல்லாமல் அவர்களை எல்லாம் ஓன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் .அதை பற்றி எழுத அவர் தொடங்கிய பத்திரிக்கை பெயர் "முன்னேற்றம்" அதனால் அந்த பத்திரிக்கை தடையும் செய்ய பட்டது .இதனால் அவர் நாடு கடத்த பட்டார்,அவருக்கு ஒரே வாய்ப்பு அளிக்க பட்டது ,அது மன்னிப்பு கேட்பது ,ஆனால் மார்க்ஸ் அதை செய்ய வில்லை , 

சில நாட்களுக்கு பின் மார்க்ஸ் பெல்ஜியதில் குடியேறினர் அதனால் அந்த அரசு நடுங்க ஆரம்பித்தது  அப்போது மார்க்ஸ் வயது 27 தான் அந்த இளையவரை பார்த்து ஒரு நாடு நடுங்கியது என்றால்   அவரின் எழுத்து சிந்தனை எத்தனை வீரம் உடையது .நீங்கள் பேனாவை தொட்டால் சிறையில் தள்ள படுவீர் என்று எச்சரிக்கை செய்தது அரசு .அந்த நிலமையில் மார்க்சும் எங்கல்சும் இணைந்து பொதுவுடைமை சங்கத்தை உருவாக்கினர் ,இதில் இருந்த தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொண்டனர் . 

லண்டன் மாநகரில் பிரமாண்டம் ஆன முதல் கம்யூனிஸ்டு சங்கம் உருவானது ,தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உற்சாகம் அடைந்தது ,மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரும் மக்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தனர் . 1848 பிப்ரவரி 24 பாரிஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது .மன்னன் லூயி பிலிப் தப்பி ஓடினார் .அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் 
நாட்டு மன்னன் தன் பாதுகாப்பை பல படுத்தி மார்க்சையும் ஜென்னியையும் சிறையில் அடைத்தான் .ஜென்னியை அந்த நாட்டின் தேக விற்பனை செய்யும் பெண் கைதிகளுடன் அடைத்தான் ,அந்த இரவு ஜென்னிக்கு நரகம் ஆக இருந்தது  ,பலமுறை பிரான்சு ,ஜெர்மனி ,இத்தாலி என்று நாடு கடத்த படும் பொது மார்க்ஸ் உதிர்த்த வார்த்தைகள் 

"எல்லா நாடும் என் நாடே 
எல்லா மக்களும் என் மக்கள் 
நானோர் உலக மகன் "

வாழ்வின் சோதனை காலம் 

உலகின் எல்லா மக்களையும் நேசித்ததால் தானே என்னவோ வாழ்கை முழுவதும் சோதனையில் உழன்றார் மார்க்ஸ். வரலாற்று பாதையில் ஜென்னி என்றாவது ஒரு நாள் ஒரு அடி மாறி இருந்தாலும் வரலாறு திசை மாறி இருக்கும்,ஆனால் ஜென்னி தான் நேசித்த பெருமகனின் எண்ணம் ஈடேற தன் வாழ்கையை தந்தார் .பசி அவர் வீட்டில் எல்லோரையும் பிடுங்கி தின்றது .ஜென்னியின் மார்பில் பால் சுரக்காமல் நிற்க தொடங்கியது ,தாய் உண்டால் தானே பிள்ளைகளுக்கு பால் கிடைக்கும் ,ஜென்னியின் மார்பகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்தது,அப்போது ஓயதா அழுகை சத்தம் தான் மார்க்ஸ் ஜென்னியின் வீட்டில் எல்லாம் சக மனிதனை நேசிப்பதற்கு கிடைத்த பரிசு .   

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை கடன் கொடுத்தவர் ஜென்னியின் வீட்டில் இருந்து எல்லா பொருளையும் எடுத்து சென்றனர் அதோடு மூன்று பிள்ளைகளும்  மடிந்தனர் பசியால் .அப்போது ஜென்னி கூறிய வார்த்தை  என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை இறக்கும் போது சவப்பெட்டி வாங்க காசு இல்லை

இப்படி பட்ட காலத்தில் தான் மார்க்ஸ் உலக பொருளாதரம் பற்றி பல தொடர் கட்டுரை எழுதி வந்தார் .1867 செப்டம்பர் 14 மார்க்ஸ் எண்ணும் மண்ணின் மைந்தனின் எழுத்தில் அவன் உழைப்பின்  தியாகத்தில் உருவான மூலதனம் என்ற நூல் புத்தகம் ஆக வெளி வந்தது .அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் ஏங்கெல்சால் கொண்டு வர பட்டது.இன்றும் உலகத்தின் தலைசிறந்த புத்தகத்தில் ஒன்று மூலதனம் ஆகும் .

மூல தனம் நூலின் தேவை :

நமக்கு ஒரு பென்சில் தேவை அதை நாமே சுயமாக உற்பத்தி  செய்ய நீண்ட நேரம் கடின உழைப்பும் தேவை ஆனால் இந்த தொல்லை இல்லாமல் ஒரு விலை கொடுத்து அந்த பென்சிலை கடையில் இருந்து வாங்கி கொள்கிறோம் .நாம் அந்த பென்சிலை வாங்க வில்லை அந்த பென்சிலை தாயரிக்க பயன் படும் உழைப்பிற்க்கு  விலையை கொடுக்கிறோம் .அனால் அந்த பணம் உழைப்பை கொடுத்த தொழிலாளிக்கு கொடுக்க படவில்லை முதல் போட்டதால் முதலாளி மற்றும் வாங்கி விற்கும் வியாபரிக்கு அதன் பலன் கிடைக்கிறது .ஆனால் உழைப்பவன் தன்னை சுரண்டி கொழுக்கும் முதலாளியை கடவுள் என்று எண்ணுகிறான் .ஆனால் வியாபர போட்டியில் முதலாளி பென்சில் விலை குறைபதால் ஏற்படும் நஷ்டம் மீண்டும் தொழிலாளி மீது சுமத்தி மேலும் மேலும் அழுத்துகிறான் .இதை தான் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உலக தொழிலாளர் அனைவரும் ஓன்று பட வேண்டியதன்  அவசியத்தை  தனது நூலின் மூலம்  உலகுக்கு எடுத்துஉரைத்தார் .

இறுதி காலம் 

புகை பிடிப்பதும் பால் கலக்காத காபி குடிப்பதும் மாலை நேர நடை பயிற்சி இவை தான் மார்க்சிற்க்கு  பிடித்த விடயம்.பிச்சை போடாமல் பசியோடு உள்ளவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மனிதர் அவர் .

1881 டிசம்பர் மாதம் ஜென்னி என்ற அற்புத மலர் காலம் எல்லாம் இந்த மண்ணின் மக்களுக்கு வேண்டி சிந்தித்த மார்க்சை தாங்கிய  அந்த பெரும் நெருப்பு அணைந்தது .1883 மார்ச் 14 ல் 
தன் 61 வயதில் மக்களுக்காக எந்நாளும் வாழ்ந்த சிந்தித்த மார்க்ஸ் என்னும் மனிதர்களின் இதயம் தனது மூச்சை தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த படி தன் தந்தை ,மனைவி மற்றும் மகள்களின் புகை படத்தை கையில் வைத்து கொண்டு இந்த உலகத்தை விட்டு அகன்றது .

அவர் 

"யூதனாக பிறந்தார் 

கிறிஸ்தவன்  ஆக வாழ்த்தார் 

மனிதன் ஆக இறந்தார் 

காலங்கள் தோறும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் "



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக