இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பில் செயல் படும் டீஸ்டா செடல்வாட் அவர்களின் நேர்காணல் படித்தேன் .இந்த தேசத்தில் மத கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வில்லை இதுவரை என்று வேதனை உடன் குறுப்பிட்டு இருந்தார் ,மனிதத்தின் ஆதரசுருதியான நீதியை காக்கும் முயற்சியில் தொடந்து பாடு பட்டு வருகிறார் .மத அடிப்படைவாதிகளிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது ,இருப்பினும் சமூக அமைதி மற்றும் நீதிகான போரட்டம் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறார் .
இந்த தேசத்தின் முதல் மத கலவரத்தை ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என்று பிரித்து ஆரம்பித்து வைத்தனர் .அந்த கலவரத்தில் கொல்ல பட்ட மக்கள் எராளம் .வன்புணர பட்டு வீச பட்ட பெண்களும் ரயிலில் கொன்று அனுப்ப பட்ட மக்களும் ஏரளாம். வன் புணரபட்ட பெண்களை ஏற்று கொள்ள கூட இந்த சமூகம் தயார் இல்லை.பெண்கள் கதரும் போதும் துடிக்க துடிக்க வெட்ட படும் போதும் கதறிய கதறல் மட்டும் இந்த உலகத்தை படைத்தான் என்று இந்த தேசத்தின் மிக பெரும்பான்மை மக்கள் நம்பும் செவிட்டு கடவுளுக்கு கேட்கவே இல்லை அது ஏன் என்று தெரியவுமில்லை கல்லுக்கும் இல்லாத ஒருவனுக்கும் எப்படி கேட்கும் ? இந்த தேசத்தின் தந்தை என்று போற்ற படும் காந்தி நான் ஒரு இந்து ,நான் ஒரு முஸ்லிம் ,நான் ஒரு கிறிஸ்தவன் ,நான் ஒரு சீக் நான் எல்லா மதமும் ஆனவன் என்று சொன்னார் ,ஏன் என்றால் அவர் எல்லா மத நூல்களையும் அறிவுபெருமக்கள் மதம் குறித்து எழுதிய பல்வேறு நூல்களை உள்வாங்கி படித்து இருந்தார் ,அவருக்கு முன்னும் பின்னும் இந்த தேசத்தில் எவருமே எல்லா மதமும் எனக்கு ஒன்றே என்று எண்ணியதில்லை ,செயல்பட்டதில்லை .காந்தி மதம் அரசியலில் ஒரு காலம் கலக்க கூடாது மதம் என்பது தனி மனித விடயம் ,நான் சர்வாதிகாரி ஆக இருந்தால் இரண்டுக்கும் இடையே கோடு கிழித்து பிரித்து வைப்பேன் என்றார் ,காந்திக்கு தெரியவில்லை இந்த தேசம் மதவெறியர்களின் தேசம் என்று .அந்த மத வெறிக்கே அவர் உயிரும் பறிக்க பட்டது என்பதே வரலாறு .
அதற்கு பின்னும் மத கலவரம் இன்று வரை நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது ,ஆனாலும் மக்களில் மத அடிப்படை வாதிகள் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறார்கள் .சில கலவரம் பட்டியல்
- குஜராத் வன்முறை 2002
- கோத்ரா தொடருந்து எரிப்பு
- பாபர் மசூதி இடிப்பு
- பாகல்பூர் கலவரம்
- முசாபர் நகர் கலவரம்
- மொராதபாத் கலவரம்
- மும்பாய் கலவரம்
- மண்டைகாடு கலவரம் இன்னும் பல
இன்று வரை நடந்த எந்த கலவரத்திலும் குற்ற செய்தவர்கள் தண்டிக்க பட வில்லை .சுதந்திரம் பெற்ற பிறகு கலவரம் மூலம் அதிக உயிர் இழப்பு ஏற்படுத்திய ஆண்டும் இடமும் ஆட்சி செய்தவர்களும்
எண் | வருடம் | இடம் | உயிரிழப்பு | ஆண்ட கட்சி | முதலமைச்சர் |
1 | 1967 | ஹாதியா ராஞ்சி | 183 | ஜன கிராந்தி தளம் | எம்.பி.சின்ஹா |
2 | 1969 | அகமதாபாத் | 512 | காங்கிரஸ் | ஹிதேந்திரகே தேசாய் |
3 | 1970 | ஜல் காவ் | 100 | காங்கிரஸ் | வசந்தராவ் நாயக் |
4 | 1979 | ஜம்ஷேட்பூர் | 120 | ஜனதா கட்சி | கர்பூரி தாகூர் |
5 | 1980 | மொராதாபாத் | 1500 | காங்கிரஸ் | வி.பி.சிங். |
6 | 1983 | நெலே, அஸ்ஸாம் | 1819 | ஜனாதிபதி ஆட்சி | |
7 | 1984 | பிவந்தி | 146 | காங்கிரஸ் | வசந்ததா பட்டில் |
8 | 1984 | டில்லி | 2733 | காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) | - |
9 | 1985 | அகமதாபாத் | 300 | காங்கிரஸ் | எம்.எஸ்.சோலன்கி |
10 | 1989 | பகல்பூர் | 1161 | காங்கிரஸ் | எஸ்.என்.சிங் |
11 | 1990 | டில்லி | 100 | யூனியன் பிரதேசம் | |
12 | 1990 | ஹைதராபாத் | 365 | காங்கிரஸ் | சென்னா ரெட்டி |
13 | 1990 | அலிகர் | 150 | ஜனதாதளம் | முலாயம் சிங் |
14 | 1992 | சூரத் | 152 | காங் + ஜனதா தளம் | சிமன்பாய் படேல் |
15 | 1992 | கான்பூர் | 254 | ஜனாதிபதி ஆட்சி | |
16 | 1992 | போபால் | 143 | ஜனாதிபதி ஆட்சி | |
17 | 1993 | மும்பை | 872 | காங்கிரஸ் | சுதாகர் ராவ் நாயக் |
18 | 2002 | குஜராத் | 1267 | பி.ஜே.பி. | நரேந்திர மோடி |
மன்னித்து கொள்ளுங்கள் ,நான் பேரரசன் ஆக விரும்பவில்லை அது என் வேலை அல்ல நான் யாரையும் ஆளவோ வெற்றி கொள்ளவே விரும்ப வில்லை முடிந்தால் அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறேன்,யூதர் கருப்பினத்தவர்,வெள்ளையினத்தவர் உதவவே விரும்புகிறேன் . நநாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் நாம் மனிதர்கள் ,இங்கு ஒருவர் அடுத்தவர் மகிழ்ச்சியை ஆதாரம் ஆக கொண்டு தான் வாழ வேண்டும் துன்பத்தை ஆதாரம் ஆக கொண்டு அல்ல .நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியது இல்லை ,இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது என்றார் சக மனிதன் மனிதம் மீதான அன்பை காலம் எல்லாம் தன் படைப்பு வழி சொன்ன சார்லி சாப்ளின் .
ஆனால் நாம் எல்லோரும் நமது மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை ,எனது இறைவன் ஏக இறைவன் .எனது மார்க்கம் மட்டுமே உண்மையான மதம் /மார்கம் என்று எண்ணி கொண்டு தான் வாழ்கிறோம் ,என்ன ஓன்று அடிப்டை வாதிகள் தாங்கள் இறைவன் தான் உண்மையானவன் என்று மத கலவரம் மூலம் அடிக்கடி நிருபிக்கின்றனர்.அனால் சாதரண மனிதர்கள் என்று சொல்ல படுவோர் அதை நிருபிக்க வில்லை ,ஆனாலும் தங்கள் மதம் உண்மை இல்லை என்பதை எந்த மத மக்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . மனிதன் உண்டாக்கிய மதம் மனிதனை பிரித்து வைக்கவே பயன்படுகிறது ,உன்னையும் என்னையும் இந்து ,கிறிஸ்தவன் ,முஸ்லீம் ,சீக் ,புத்தம் என்று பிரித்து வைத்தது இந்த மத அமைப்பு தானே ,இன்று வரை எனறாவது நாம் கேள்வி கேட்டு இருக்கிறோமா ? மனிதர்கள் ஆக அடையாள படுத்த பட வேண்டிய நாம் நாம் ஏன்மதங்களால் பிரிந்து அடையாள படுத்த படுகிறோம் என்று .
இங்கு எல்லோருக்கும் இல்லாத ஒருவன் தேவை பட்டு கொண்டு இருக்கிறான் மனிதம் இருந்து விட்டால் இல்லாத ஒருவன் துணை நமக்கு தேவை இல்லை ,நமது எல்லா நேரத்திலும் உடன் வர சக மனிதம் உள்ள மனிதன் இருப்பான் ,ஆனால் இங்கு அப்படி இல்லையே ,யார் கடவுள் உண்மையானவன் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது ,மத அடிப்படை நாடுகள் அமைய வேண்டும் என்ற குரல் தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர மனிதம் அடிப்படையான நாடுகள் அமைப்போம் என்று குரல் ஒலிக்கவில்லை இங்கு .
இங்கு எல்லா மதமும் ஓன்று தான் என்று சொல்ல பட்டாலும் அது உண்மை இல்லை ,மிக சிறந்த உதாரணம் திருமணம் ,ஆணும் பெண்ணும் இயல்பாக இணையும் நிகழ்வு ,இந்த நிகழ்வில் வேறு வேறு மதம் சார்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒருவர் ஆவது அடுத்தவர் மதத்திற்கு மதம் மாறி தான் திருமணம் செய்ய முடியும் .அது கூட சுலபம் இல்லை ,எப்படி சாதி தூய்மை எல்லா சாதி மக்கள் கலப்பு மூலம் கெட்டு விடும் என்று எண்ணும் சாதி வெறியர்கள் போல தான் மத வெறியர்களும் மத தூய்மை கெட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருகின்றனர் .இதற்கு விதி விலக்காக சில குடும்பங்கள் மொத்த தேசத்திலும் இருக்கலாம் மீதி உள்ள அத்தனை மத நம்பிக்கை ஆளர்களும் மதம் இல்லாமல் போய் விட கூடாது என்றும் அதனால் மனங்கள் இணைய கூடாது என்று அரிவாள் உடன் இடையே நிற்கின்றனர் ,எப்படி சாதி எதிர்த்து மணம் புரிவோர் சாதி வெறியர்களால் கொல்லபடுகிறார்களோ அது போல மதம் எதிர்த்து மணம் செய்வோரும் கொல்ல படுகின்றனர் .
எல்லா மத கலவரத்திலும் ஆண் என்பவன் தனது ஆண்மையை பெண்களை வன்புணர்வு செய்வதன் மூலம் தொடந்து நிரூபிக்க பட்டு கொண்டே வருகிறான் ,பெண்களை வன்புணர்வு செய்வது ஆண்மையா ?மத கலவரம் மூலம் அதிகம் பாதிக்க படுவது சாதரண மக்களும் பெண்களும் தான் .ஆனால் மதம் உடன் அதிகம் பிணைக்க பட்டுள்ளதும் சாதரண மக்களும் பெண்களும் தான்.அவர்கள் முடிவு இல்லாமல் இருக்கிறான் என்று தொடந்து வழிபடும் சர்வ வல்லமை நிறைந்த இறைவன் அவர்கள் கதறும் போது எங்கு போய் இருப்பான் என்று தான் இன்றுவரை தெரியவில்லை .இறைவனை காண வில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும் .ஆனாலும் மக்கள் இன்றுவரை ஓன்றும் செயல்படாமல் கல்லாய் உருவம் இல்லாதவனாய் இருப்பவனை விட்டுவிட தயார் இல்லை ,மதம் இல்லாமல் ஆக்க யாரும் தயார் இல்லை ,மதம் இறைவன் இருப்பதால் தானே மத கலவரம் நடக்கிறது .மதம் இருக்கும் வரை மதத்தினால் கலவரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் .பெண்களும் சாதரண மக்களும் கொடுமை படுத்த பட்டு கொண்டு தான் இருப்பார் .....மதத்திற்கு முடிவு இல்லை என்றல் மத கலவரத்திற்கும் முடிவு இல்லை
மதம் இல்லா உலகு மனிதம் சூழ் உலகு அழகானது ..........................