இன்று உலக புத்தக தினம். ஏழை விவசாய தொழிலாளி மகன் ஆக பிறந்த சேக்சுபியர் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணம் ஆக முறையான கல்வி கற்க முடியாமல் பள்ளியில் இருந்து நிறுத்த பட்டார் .ஆனால் அவர் தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்துக்கு கொடுத்துள்ளார் .இது மிக பெரும் சாதனை அவரின் இயற்கை எய்த நாள் ஆனா 23 ஏப்ரல் உலக புத்தக தினம் ஆக கொண்டாடபடுகிறது
மனிதனின் ஆக சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான் ,வரலாற்றை மாற்றியதில் புத்தகங்களுக்கு இருக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியா .ஒரு நல்ல புத்தகம் மிக சிறந்த நண்பன் .மிக கடினமான நேரங்களில் நமது மனதை சரி படுத்த புத்கம் வாசிப்பது மிக சிரப்பானது.நாம் வாழும் இந்த வாழ்கையில் சக மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ,சக மனிதனை நேசிக்க நமது வாழ்வை சரி படுத்த புத்தக வாசிப்பு மிக முக்கியம்.
ஒரு புத்தகத்தை நாம் வாசிக்கும் போது நமது கற்பனை வளம் கூடி நம் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது .நமக்கு புதிய அனுபவம் ஓவ்வொரு புத்தகம் படிக்கும் போதும் ஏற்படுகிறது .புத்தகம் இல்லாமல் என்னால் வாழவே முடியா .மிக சிக்கலான தருணங்களில் உற்ற தோழர் போல் உடன் வந்துள்ளது .கண் இருப்பதே புத்தகம் படிக்க தானே .
இதுவரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் இனியாவது தொடங்கலாம் தோழமைகளே .அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்று இன்றே புத்தகம் வாங்கி வாசிக்கும் பழக்கம் ஆரம்பியுங்கள் .புத்தகத்தையும் காற்றை போல் சுவாசிப்போம் .
உலகை மாற்றிய அறிவாளிகளின் புத்தகம் மீதான காதல் :
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகம் அருகில் உள்ளதோ அங்கே என்றாறாம்.டாக்டர் அம்பேத்கர்
நான் ஒரு போராளி உடன் பேசி கொண்டு இருக்கிறேன் முடித்து விட்டு வருகிறேன் அதன் பின் தூக்கில் இடுங்கள் என்றார் .
பகத்சிங்
ஓவ்வொரு படம் நடிக்கும் முன் நூறு டாலருக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவர்
சார்லி சாப்ளின்
எங்கே நல்ல புத்தகம் எரிக்க படுகிறதோ அங்கே விரைவில் மனிதர்களும் எரிக்க படுவர் என்றார்
சேகுவேரா
ஒரு புத்தகம் திறக்க படும் போது உலகை நோக்கிய சன்லை திறக்கிறோம் என்றார்
சிந்தனை சிற்பி சிங்காரவேலர்
உலகின் தலைசிறந்த புத்தகத்தை உங்களிடம் இருந்து திருடி செல்பவர் உங்கள் நண்பர்கள் தான் என்றார்
வால்டேர்
ஒரு கோடி கிடைத்தால் நூலகம் அமைப்பேன் என்றார்
காந்தி
தனிமை தீவில் தள்ள பட்டால் புத்தகம் உடன் மகிழ்வாக காலம் கழிப்பேன் என்றார்
நேரு
இங்கு ஒரு புத்தக புழு உறங்குகிறது என்று தனது கல்லறையில் எழுத சொன்னவர்
பெட்ரண்ட்ரஸல்
மனிதனின் ஆக சிறந்த கண்டு பிடிப்பு புத்கம் என்றார்
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்
பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுங்கள் என்றார்
பெரியார்
உண்ணாவிரதம் இருந்து சிறையில் புத்தகம் வாசிக்கும் அனுமதி பெற்றவர்
நெல்சன் மண்டேலா
புத்தகமே பயங்கர போரட்ட ஆயுதம் என்றார்
மார்டின் லூதர்கிங்
புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளியில் தேடுங்கள் என்றார்
எங்கெல்ஸ்
ஒரு நாட்டின் சந்ததியினர் தேடி அடைய வேண்டிய செல்வம் புத்தகம்
கென்றி தோரா
வாழ்வோம் புத்தகங்கள் உடன் மகிழ்வாக
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக