சனி, 12 ஏப்ரல், 2014

வரலாறை உருவாக்கியவர்


மனித குலத்தின் பெரும்பான்மைக்ககாக பாடுபட கூடிய ஒரு செயலை செய்ய நாம் தீர்மானம் செய்து கொண்டால் எவளவு பெரிய சுமையும் நமை வளைத்து விடாது  காரணம் நாம் செய்யும் அந்த செயல் இந்த பெரிய மனித குலத்தின் மீட்பிற்கு வேண்டி இருக்கிறபடியால் .அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்வு முடிவு இல்லாததும் அகங்காரம் அற்றதும் ஆகும்.அந்த மகிழ்வு இந்தமொத்தமக்கள் திரளின்  மகிழ்வு ஆகும் ,அப்படி இந்த மொத்த மக்கள் திரளின் மகிழ்வு சமத்துவம் வேண்டி தன் வாழ்நாள் எல்லாம்  உழைத்த மாபெரும் புரட்சியாளர் இந்தியாவின் ஒரு முகம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (14-04-1891)

பிறப்பு :

இன்றைய மத்தியபிரதேசத்தில் உள்ள "மாவ் " என்னும் ஊரில் ராம்ஜீ மாலோஜி சக்பாலுக்கும் 
பீமாபாயிக்கும் பதிநான்காவது  குழந்தையாக 11-04-1989 அன்று அண்ணல் பிறந்தார் .அவர் தந்தை ராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி செய்து கொண்டு இருந்தார் .

இளமையும் கல்வியும் :

தாழ்த்த பட்ட சாதிகளில் ஒன்றான மகர் சாதியில் பிறந்ததினால்  சிறு வயது முதலே சாதி இந்துகளின் கொடுமைகளை அனுபவித்தார் .1900 ஆண்டில் சத்ராவில் தனது தொடக்க கல்வி பயின்றார் ,அங்கு தாழ்த்த பட்ட மாணவர்கள் தனியே அமர வேண்டும் அவர்கள் யார் உடனும் பேச விளையாட கூடாது .அவர்கள் புத்தகம் குறிப்பேடு ஆகியவற்றை யாரும் தொட மாட்டார்கள் ,கேள்வி கேட்க கூடாது .தரையில் அமர கோணி பை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் ,தண்ணீர் குடிக்க யாராவது ஊற்றினால் மட்டுமே கையால் தண்ணீரை ஏந்தி குடிக்க வேண்டும் ,வடமொழி கற்க தடை ,மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொது தாழ்ந்த சாதி என்று சொல்லி குப்பை கொட்டுவது போல் ரோட்டில் வண்டியில் இருந்து அண்ணலையும் அவர் அண்ணனையும்  கொட்டியது ,இப்படி பல்வேறு கொடுமைகள்,அந்த பிஞ்சு மனதில் தன்னை போல் ஒடுக்க படும் கோடான கோடி மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வைத்தது .இப்படி பல கொடுமைகள் நடந்தாலும் மகாதேவ் அம்பேத்கர்  என்ற பிராமண ஆசிரியர் அண்ணல் மேல் அன்பும் அக்கறையும் எடுத்து கவனித்து கொண்ட படியால் தன் பெயரில் அம்பேத்கர் என்ற தனது பிரமாண ஆசிரியர் பெயரை இணைத்து கொண்டார் அண்ணல் ..


1904 ஆண்டு மும்பையில் குடியேறியது அம்பேத்கர் அவர்களின் குடும்பம் அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலை பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார் அண்ணல் .தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் சாதி இந்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மிக்க மனவேதனை அடைந்தார் .ஆனாலும் 1907 ஆண்டு நடந்த மெட்ரிக் தேர்வில்  வெற்றி பெற்றதன் மூலம் தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த முதல் மாணவர் என்ற பெருமையை பெருமையை பெற்றார் .அர்ஜீன் கோலுஸ்கர் என்ற ஆசிரியர் அண்ணலை பாராட்டி  புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை பரிசளித்தார் ,அந்த புத்தகம் தான் அண்ணலின் பின்நாள் சிந்தனை புரட்சியின் அடித்தளம் .




1908இல் ராமாபாய் அவர்கள் உடன் அண்ணல் திருமணம் நடைபெற்றது .அதன் பின் அண்ணல் கல்லூரி படிக்க பரோடா மன்னர் உதவி செய்ததால் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்த்தார் .அங்கும் சாதி கொடுமைகள் தொடர்ந்தாலும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்பும் அரவணைப்பும் அண்ணலுக்கு கிட்டியது .1912 பொருளாதரம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்ற பின் ஏற்கனவே அளித்து இருந்த வாக்குறுதி படி பரோடா மன்னர் அரசில் பணியில் சேர்ந்தார் .அங்கும் சாதி கொடுமை தொடந்தது ,ஆனாலும் அவர் அறிவு பசி அடங்க வில்லை அடுத்த  ஆண்டு உதவி தொகை பெற்று அமெரிக்கா சென்று பொருளாதரத்தில் எம் ஏ பட்டம் 1915 பெற்றார்.இந்திய லாபபங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு அண்ணலுக்கு கொலம்பிய பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது,அடுத்து 1921 ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவல் ஆக்குதல் என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும் 1923 ஆண்டு ரூபாயின் பிரச்னை என்ற ஆய்வுக்கு டி எஸ் ஈ பட்டமும் பெற்றார் .

அரசியல் மற்றும் சமூக பணிகள் .

மக்கள் பயன் அடையும் விதமாக பீப்பிள் எடிகேசன் சொசைட்டி என்ற அமைப்பை நிறுவி உயர்நிலை பள்ளி ,தொழிற்கல்லூரி ,கலை கல்லூரி ஏற்பட வழி செய்தார் .சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் வழிமுறைகளை  பயில எதிர்கால பிரதிநிதிகளுக்காக ஒரு கல்லூரி தோற்றுவித்தார் . அண்ணலின் கல்வி மற்றும் புத்தக வாசிப்பு ,வெளிநாட்டு பயணம் அவர் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தின .பரோடா சமஸ்தானத்தின் முதலீட்டு ஆலோசகர் ஆகவும் ராணுவ செயலர் ஆகவும் சிறிது காலம் பணி செய்து விட்டு பின் மும்பையில் உள்ள கல்லூரியில் பொருளியல் பேரசிரியர் ஆக பணி செய்தார் .அவரால் தொடர்ந்து ஒரு இடத்திலும்  நிலையாய் இருக்க முடிவதில்லை காரணம் சாதி அடுக்குமுறையின் கோரங்கள்  அதனால் தான் அண்ணல் அந்த சாதியை களைய ஒடுக்க பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் எல்லாம் போரடினார் .

1919 அரசியல் அமைப்பை ஆய்வு செய்ய ஆங்கில அரசு சௌத்பாரோ கமிட்டி நியமனம் செய்தது .அதில் அண்ணலும் ஆங்கில அரசால் அழைக்க பட்டு இருந்தார் .தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதி முறை தேவை என்று உரத்து தன் குரலை பதிவு செய்தார் .தாழ்த்த பட்ட மக்கள் நலன் வேண்டி "மூக் நாயக் " பத்திரிக்கை ஏற்படுத்தி பணி செய்தார் .1920 இல் அரசியலில் நுழைந்தார் .கூட்டம் ,மாநாடு மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .ஒதுக்க பட்ட பாரதம்  பத்திரிக்கையும் நடத்தினார் .1924 ஒடுக்க பட்ட மக்களின் முன்னேற்றம் வேண்டி "பகிஸ்கிருத கிதாகரணி சபா " என்ற அமைப்பை நிறுவி கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் வேண்டி போராடினர் .1927இல் சவ்தார் குளம் நீர் எடுக்கும் போரட்டம் மற்றும் கலாரம் கோயில் நுழைவு போரட்டம் நடத்தி வெற்றி கண்டார் .1928இல் பம்பாய் சட்ட பேரவைக்கு தேர்வு செய்ய பட்டார் அப்போது சிறுபிள்ளை கல்வி ,தாய்மார்களின் மகப்பேறு காலஉதவி ,விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவற்றை ஏற்படுத்தினார். விவசாய அடிமை முறை ஒழிப்பு ,தீண்டாமை எதிரான சட்டம்,தொழிலாளர் எட்டு மணி நேர வேலை ,அவசர கால ,ஓய்வு கால உதவி போன்றவற்றை நடைமுறை படுத்தினார் .  1930 லண்டன் வட்ட மேசை மாநாடு கிளம்பும் முன் என் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் அதேபோல் சுயராஜ்யம் வேண்டியும் போரடுவேன் என்றார் .தாழ்த்த பட்ட அனைத்து சாதிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசரத்தை உணர்த்தினார் ஆனால் அண்ணலின் எண்ணம் இன்று வரை நிறைவேற வில்லை .

இரண்டாம் வட்ட மேசை மாநாடும் பூனா உடன்படிக்கையும் .

இரண்டாம் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடை பெற்றது .அங்கு தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்க பட்டது அங்கு தாழ்த்த பட்டவர்களுக்கு தனி வாக்குரிமை ,விகிதாசாரா பிரதிநிதித்துவம் இரண்டும் வேண்டி அண்ணல் குரல் கொடுத்தார் .ஆனால் மகாத்மா காந்தி தனி வாக்குரிமை (தாழ்த்த பட்ட மக்களுக்கான தொகுதியில் தாழ்த்த பட்ட மக்கள் மட்டுமே வாக்கு செலுத்த இயலும் )கடுமையாக எதிர்த்தார் .ஆங்கில அரசு அண்ணல் கேட்ட உரிமை வழங்கியது ,இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்த படியால் எரவாடா சிறையில் அடைக்க பட்டார் இதனால் நாட்டில் குழப்பம் நேர்ந்தது .நிறைய தலைவர்கள் அண்ணல் உடன் பேசியதன் விளைவாக அண்ணல் மாகத்மா காந்தியை சந்தித்து பேசி 19321 செப்டம்பர் 24 அன்று பூனா ஒப்பந்தம் கை எழுத்து ஆனது இதன் விளைவாக தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்க படும் அதில் எல்லா மக்களும் வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்ய பட்டது .இந்த நிகழ்வால் மனம் வெதும்பிய அண்ணல் காந்தியை மிக கடுமையாக விமர்சித்தார் "காந்திஜி உண்ணாவிரதம்கடுமையான ஆயுதம் தான் ஆனால் அதை அடிக்கடி கையில் எடுக்க வேண்டாம் ,ஆயுதம் மழுங்கி விடும் நீங்களும்  இருக்க மாட்டீர்கள், நீங்கள் இந்த தேசத்திற்கு தேவை படலாம்.மேலும் காந்தியை துறவி என்றும் மகாத்மா என்றும் அழைக்காதீர்கள் அவர் ஒரு சந்தர்ப்ப அரசியல்வாதி ,சீசனுக்கு சீசன் அவர் குணம் ஆதரவு மாறும் ஆனல் தலித் எனது மதத்தில் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் மாறாது  என்றார் .இன்றும் அண்ணலையும் மகாத்மாவையும் எதிர் எதிர் நிறுத்தி காந்தியை துரோகி என்று விமர்சனம் நடை பெறுகிறது ஆனால் முதல் சட்ட அமைச்சர் ஆன அண்ணல் தனி வாக்குரிமை கோரவே இல்லை மேலும் ஏற்கனவே இருந்த முஸ்லிம் மற்றும் சீக்கிய தனி வாக்குரிமை  தடை செய்து சட்டம்  இயற்றி அதன் காரணத்தை விளக்கி அரசியல் நிர்ணய குழுவில்  உரையாற்றினார்  ,இதுவே நகை முரண் .

இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் பங்கு 

இந்திய சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டை வழி நடத்த புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் குழுவுக்கு மிக சிறந்த அறிவாளி ஆன அண்ணல் நேரு மற்றும் காந்தியின் எண்ணத்தின் பேரில் நியமனம் செய்ய பட்டார் .உடன் நியமிக்க பட்ட வரைவு குழுவின் உறுப்பினர் பின் வாங்கினாலும் கையால் முழுவதும் எழுத பட்ட உலகின் சிறந்த அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்தார் அண்ணல். 26 நவமபர் 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்று கொள்ள பட்டது .தாழ்த்த பட்ட சாதிகள் ,பழங்குடிகள் ஆகியோருக்கு அரசு வேலை கல்வி இடஒதுக்கீடு கொண்டு வந்து சம தர்ம சமூகம் உருவாக வலி செய்தார் .மேலும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆகவும் நியமனம் செய்யபட்டு சிறப்பாக  பட்டார் ,அண்ணல் அவர்களால் எழுத பட்ட அரசியல் சாசனம் மிக சிறந்த சமூக ஆவணம் என்று இன்று வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கின்றனர் .இந்து நெறியியல் சட்டத்தை ஏற்படுத்த நேரு கால தாமதம் எடுத்து கொண்டதால் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார் ,ஆனாலும் நேரும் சட்டத்தை தனி தனியாக உடைத்து நிறைவேற்றினார்  ,அண்ணல் எதிர் கட்சியில் அமர்ந்து இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார் .அண்ணல் பதவி விலகினாலும்  தாழ்த்த பட்ட ஒடுக்க பட்ட மக்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றம் உள்ளும் வெளியே சமூகத்திலும் போராடினார் .

அண்ணல் 1921 ஆண்டு வரை தொழில் முறை பொருளாதர நிபுணர் ஆக பணி செய்த போது பொருளாதாரம் குறித்து மூன்று புத்தகங்களை எழுதினார் .

1.கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் மற்றும் நிதியும் 
2.பிரித்தானிய இந்தியாவின் மகாணங்களில் நிதியின் பரிமாணம் 
3.ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும் 

கில்டன் யங் ஆணையத்திடம் 1934இல் அண்ணல் கூறிய கருத்துகள் அடிப்படையில் தான் ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கபட்டது இந்தியாவில்   

இன்று இந்தியாவில் பல்வேறு தாழ்த்த பட்ட மக்கள் சமூக முன்னேற்றம் பெற அண்ணல் கொண்டு வந்த இட ஒதுக்கீடு முக்கியமானது ,அவராலே இன்று பலர் படித்து உள்ளனர் ,ஆனால் அண்ணல் தொடங்கி வைத்த போரட்டம் தொடர வில்லை என்பதும் இங்கு நிதர்சனமாய் இருக்கிறது 




யார் சூத்திரர்கள் ? சாதி ஒழிப்பு ,இந்துசியத்தின் தத்துவம் ஆகியவை அண்ணல் சாதிக்கு எதிராக எழுதிய  முக்கிய நூல்கள் .புத்த மதத்தின் கொள்கைகளால் கவரபட்டு எல்லா மக்களையும் பார்ப்பணிய இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தில் இணைத்து சாதி இழிவு அகற்ற வழி சமைத்தார் .இலங்கையில் நடை பெற்ற புத்த சமய துறவிகள் அறிவு ஜீவிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். 1955 ஆண்டில் பாரதிய பௌத்த மகாசபை தோற்றுவித்தார். 1956 ஆண்டு புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதினார் .புத்தர் அல்லது காரல் மார்க்ஸ் என்ற புத்தகம் நிறைவு பெற வில்லை .நான் இந்துவாக பிறந்தேன் இந்துவாக மரிக்க மாட்டேன் என்று முன்பு அண்ணல் சொன்ன படி 1956  அக்டோபர் 26 இல் நாக்பூரில் விழா எடுத்து புத்த சமயம் மாறினார் .அவருடன் இலச்சகணக்கான மக்களும் புத்த மதம் மாறினார் .

இறுதி காலம் 

1948 இல் இருந்து அண்ணல் நீரழிவு நோயால் பாதிக்க பட்டு இருந்தார் அதன் காரணமாய் சாப்பிட்ட மருந்துகளால் கண் பார்வை குறைந்தது .1955 உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது .புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாளுக்கு பிறகு 1956 டிசம்பர் 6 டெல்லியில் இரவு தூக்கத்தில் அண்ணல் உயிர் துறந்தார் .1990 இல் அண்ணலுக்கு இந்த தேசத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க பட்டது .

ஒடுக்க பட்ட சமூகத்தில் பிறந்து இந்த தேசத்தின் விடுதலை அரசியல் சாசனத்தை வரைந்த மாபெரும் சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்  அரசியல் ,பொருளாதரம் ,சட்டம் என்ற அனைத்து துறையிலும் மேதை ஆக விளங்கினார் .இந்திய சாதியின் பழமை வாத ஒடுக்குமுறை பக்கங்களை கிழித்து எரிந்த மாமேதை அண்ணல் ,ஈடு இணையற்ற சமூக போராளி ,எல்லோருக்குமான ஆதர்ச பிம்பம் .அண்ணலை வாழ்கையில் ஏந்துவோம் .


இறுதியாக வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குகா எழுதிய வரிகளோடு முடிப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைகிக்றேன். "திரைக்கதை எழுத்தாளருக்கும்   ஐதீகம் சமைப்பவருக்கு வேண்டும் என்றல் ஒரே ஒரு காதாநாயகன் தேவை படலாம் ,ஆனால் வரலாற்று ஆசிரியனுக்கு அத்தகைய கட்டு பாடுகள் இல்லை ,தலித் சுதந்திர போரட்ட வரலாறு என்பது இன்னமும் முடிவு பெறாததும் பெரும்பாலன பகுதிகள் இன்னும் எழுத படாத ஒன்றும் ஆகும் ,ஒன்றுக்கு மேற்பட்ட கதையின் நாயகர்கள் அதில் இருப்பார்கள் அதில் அண்ணலும் ,மாகாத்மாவும் மிக சிறப்பான தொடக்கம் ஆக அமைவர் அப்படி இந்த தேசத்தின் ஒரு கதாநாயகன் ஆகிய அண்ணல் பிறந்த நாள் இன்று   


1 கருத்து:

  1. the indian with the most impact of the 20th century. not gandhi.not nehru. it is ambedkar. i bow before in respect awe and humility. india is lucky to have had ambedkar as one of its sons.

    பதிலளிநீக்கு