இன்று வாழ்வின் சக தோழிகள் ஆன திருநங்கைகள் தினம் .
பெயர்காரணம்:
திருநங்கை என்று அழைக்க படும் தோழிகள் பிறப்பால் ஆண் என்று அடையாள படுத்த பட்டு பின் தன்னை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவரை குறிக்கும் சொல்லாக இன்று பயன் படுகிறது .
திருநங்கைகள் தினம் தொடங்கிய விதம்:
உலகம் முழுவதும் சமத்துவம் ,விடுதலை ,சகோதரத்துவம் வேண்டி பல்வேறு விழாக்கள் கொண்டாட படுகிறது ,அப்படி திருங்கைகளின் சமத்துவம் சம உரிமை ,சம வாய்ப்பு இவை போல மற்றும் பல உரிமை வேண்டி 2008ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்க பட்டது தமிழ்நாட்டில்.ஏப்ரல் 15ம் தேதி ,அதே தினத்தை தமிழக அரசு அரசாணை மூலம் 2011ம் அண்டு முதல் திருநங்கை தினம் ஆக அறிவித்தது .அன்று முதல் தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம் கடை பிடிக்க படுகிறது .
சமூக நோக்கில் திருநங்கைகள் :
இன்றைய காலத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு அளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை என்றாலும் மிக அதிக இடங்களில் இன்னும் திருநங்கைகள்
கேவல படுத்தபட்டு ஒடுக்க பட்டே வருகின்றனர் என்பது கண்கூடு.திருங்கைகள் குறித்த புரிதல் நமது வீடுகளில் இருந்து தொடங்கி ஆக வேண்டும் ,வீடுகள் முதலில் ஏற்றால் தான் சமூகம் ஏற்க்கும் .ஆனால் மிக பெரும்பான்மையாக குடும்பங்கள் நிராகரிக்கின்றன்ர் .அதனால் பெற்றவர் உறவினர் பிரிந்து கண்ணீர் விடும் திருநங்கைகள் இன்று ஏராளம். குடும்ப அரவணைப்பு அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்யும், இதனால் திருநங்கைகள் தங்கள் வாழ்வில் சிறந்த இடம் அடைய முயற்சித்து வெற்றி பெறுவர்.பெற்றவருக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே .அந்த எண்ணம் எல்லா பெற்றவர்களிடம் வந்தாக வேண்டும் .உறவுகளும் மதிக்க வேண்டும் .
முழு சமூக அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையிலும் கலைத்துறை ,எழுத்து துறை ,ஊடகம் மற்றும் சமூக பணி ,சொந்த தொழில் செய்து வந்தாலும் பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் அல்லது கடை கேட்டல் என்னும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதே இன்று காண கிடைப்பது. பாலியல் அடையாள சிக்கல் காரணம் ஆக இவர்களுக்கு எந்த ஒரு சமூக நீதியும் இங்கு நடப்பாக்கவில்லை இந்த தேசம் .இப்படி செய்து விட்டு இந்த சமூகம் திருநங்கைகளை குறை வேறு சொல்கிறது ,தவறை தன் மேல் வைத்து கொண்டு தான் ஒடுக்கும் இனத்தின் மீது தவறை சமைக்கும் கேவல எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த பாலின ஒடுக்குமுறை .
இனி செய்ய வேண்டியவை:
நெடும் காலமாக புறக்கணிக்க பட்டு வந்த சமூகம் ஆன திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தார வேண்டும்,அது போல் தனியார் துறையிலும் திருநங்கைகள் பணிவாய்ப்பு அளிக்க பட வேண்டும் ,வேலை செய்யும் இடங்களில் பாலின வேற்றுமை களைய பட வேண்டும் இது தான் முக்கியம் திருநங்கைகள் வாழ்வை முன்னேற்றம்
செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் . பல்வேறு வெளிநாட்டு நிறுவனம் பல நாடுகளில் திருநங்கைகளை பணி வாய்ப்பு வழங்கி இருக்கிறது,இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் .
ஊடகம் எப்போதும் திருநங்கைகளை மிக கேவலமாக சித்தரிப்பு செய்தே வருகிறது ,பெண்களை போக பொருள் போல் சித்தரிப்பு செய்யும் ஊடகம் திருங்கைகளை கேவலமாக சித்தரிப்பு செய்வதில் வியப்பு இல்லை என்றாலும் சமத்துவம் வேண்டி போராடும் எல்லோரும் இவ்விடயத்தில் ஒன்றாக வேண்டியதும் எதிர்க்க வேண்டியதும் அவசியம் .
இதுவரை கனடா நாட்டில் மட்டுமே திருநங்கைகள் எல்லா உரிமையும் பெற்று சமத்துவ வாழ்க்கை வாழுகின்றனர் ,அந்த நிலமை நமது தேசத்தில் வர உறுதி எடுக்க பட வேண்டும் .
என் தெரிந்த அளவில் சமூக போரட்டம் செய்யும் திருநங்கைகள்
1.கல்கி சுபிரமணியன்
சகோதரி அமைப்பின் நிறுவனர் .தன் வாழ்வை போராட்டத்தை லிவிங் ஸ்மைல் வித்யா என்ற நூல் மூலம் சமூகத்துக்கு சொன்ன எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்,நடிகை ,திருநங்கைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு பதிவு செய்தவரில் ஒருவர் .சமூக போராளி
2.ரோஸ் வெங்கடேசன்
விஜய் தொலைகாட்சி இப்படிக்கு ரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் ,பாப் ஆல்பமும் வெளியிட்டு உள்ளார் .
3.ரேவதி
மிக சிறந்த எழுத்தாளர் ,திருங்கைகளை பற்றி உணர்வும் உருவகமும் என்ற நூலை எழுதி உள்ளார் .சமூக போராளி
4.பிரியா பாபு
கண்ணாடி அமைப்பின் நிறுவனர் மற்றும் மிக சிறந்த சமூக போராளி
5.நர்த்தகி நடராஜ்
பிரபல பரத நாட்டிய கலைஞர்,முதல் பெண் என்று இந்திய கடவு சீட்டு பெற்ற முதல் நபர் .பல்வேறு விருதுகளுக்கு சொந்தகாரர் .
6.பாரதி கண்ணம்மா
தனது பாரதி கண்ணம்மா அமைப்பு மூலம் திருநங்கைகள் பொருளாதரம் உயர வேண்டி போராடும் சமூக போராளி ,மதுரையின் சுயேட்சை வேட்பாளர் (எம் பி ஏலக்சன் )
7.சுவப்னா கார்த்திக்
அருமை தங்கை மிக சிறந்த சமூக போராளி,மதுரையின் எல்லா மக்கள் நல போராட்டத்திலும் உடன் நிற்கும் சகோதரி .தேர்வு எழுதும் உரிமையை போராடி பெற்று முதல் வகுப்பில் தேர்வு செய்ய பட்ட அன்பு தங்கை ,மாவட்ட ஆட்சியர் ஆவர் என்று எதிர்பார்க்க படுகிறவள் .
சமத்துவம் வேண்டி நாம் திருநங்கைகள் உடன் நிற்போம் ,சமத்துவம் படைப்போம் ,இந்நாள் அதை நமக்கு சொல்லவே ஏற்படுத்த பட்ட பொன்நாள் .

Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக