செவ்வாய், 11 மார்ச், 2014

என் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )

சோர்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் தோழிகள்(தேவதைகள்) வானவனையும் இயல் இசை வல்லபியையும் குறித்து சிந்திக்கையில் மனதில் உடனடி நம்பிக்கை ,மகிழ்வு ஏற்படுவது எப்போதுமான நிகழ்வு ,எனது வாழ்வை குறித்த எண்ணத்தை மாற்றி  என் அளவில் நான் நிறைய மாறி இருக்க  என் இரு தோழிகளும்  ஒரு காரணம் ,நான் பார்த்து வியந்த அருமை தோழிகள் பற்றிய பதிவு தான் இது 

தசை சிதைவு நோயால் பாதிக்க பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி ,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவும் நோக்கில்  ஆதவா ட்ரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நிறுவி நடத்தி வருகின்றனர் .முகப்பின் மூலம் (face book ) தான் எங்கள் அறிமுகம் ஏற்பட்டது ,முதன் முதலில் chat box வழி தான் உரையாட தொடங்கினேன் வானவன் உடன் .இந்த உரையாடல் புத்தகம் ,சமூகம் என்று தொடந்து சென்று கொண்டு இருந்தது .ஏற்கனவே வானவன் மாதேவி மற்றும் இயல் இசை குறித்து எழுத பட்ட கட்டுரைகளை  படித்து விட்டதால் என் மானசிக தோழிகள் மேல் அளவு கடந்த அன்பில் நிறைந்து இருந்தேன் ,பின் ஒரு நாள் தொடர்பு எண் வாங்கி பேச தொடங்கினேன் , நிறைய நேரம் இந்த சமூகமும் புத்தகமும் குறித்து பேசி கொண்டே இருப்போம் .எப்போது நேரில் பார்போம் என்று மனம் ஏங்க தொடங்கியது .அந்த நாளும் வந்தது 
விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன் ,நன் ஏற்கனவே வாக்களித்தபடி என் தோழிகளை சந்திக்கும் அந்த நாளும் வந்தது .நாகர்கோவிலில் இருந்து இரவு தனியார் பஸ் பிடித்து மறுநாள் காலை சேலம் வந்து இறங்கினேன் .தொலைபேசி வழி வானவனை அழைத்தேன் .தொலைபேசியை எடுத்த வானவன் தம்பி நாகராஜை அனுப்புவதாக சொன்னாள் .நானும் என் அண்ணனும் பேருந்து நிலையத்தில் எதிர்புறம் காத்து இருந்தேன் ,தம்பி நாகராஜ் வந்து சேந்தான் ,நலம் வசாரிப்புகள் முடிந்த பின்பு அவன் பைக்கில் பின்புறம் அமர்ந்து கொண்டு என் தேவதைகளை சந்திக்க பயணம் ஆனேன் .என் தேவதைகளின் இல்லம் அடைந்தேன் .முக மலர்வுடன் என்னை வரவேற்று ஜானி எப்படி இருக்க என்றாள் என் தேவதை .அப்போது தான் முதன் முதலில் நேரில் பார்த்த படியால் ஒரு நிமிடம் என்  கண்ணை என்னால் நம்ப முடிய வில்லை. வாழ்வின் ஓவ்வொரு நாளோடும் போட்டி போட்டு கொண்டு என் தேவதைகள்  வாழ்ந்து வருகிறார்கள் ,வெற்றி என்றும் என் தேவதைகள் பக்கமே 






சுவையான காலை உணவு உண்ட பின் பேச ஆரம்பித்தோம் ,ஒரு நாள் முழுவதும் பேசினோம் ஒரு நாள் ஏன் அவளவு வேகமாக நகர்கிறது என்று நினைக்கும் படி நேரம் மிக வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது .உடலால் ஒடுங்கி போய் இருந்தாலும் வார்த்தையால் முக மலர்ச்சியால் அவர்களின் உற்சாகம் என்னுள்ளும் பற்றி கொண்டது .சிறு வயதிலே ஒருவர் அடுத்து மற்றவர் நோய் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவம் பார்த்து என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் இறுதியாக  மாற்று மருத்தவம் நாடி அதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்கலாம் என்று கண்டு இப்போது தனை போல் வாழும் எத்தனையோ மக்களை விடுவிக்க என்றும் போராடி கொண்டு இருகிறார்கள் என் தோழிகள். தங்கள் வாழ்வு முடங்கி விட்டது என்று வீடுகளில் அடைந்து கிடந்த தொடக்க காலத்தில் அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி சமூகம் குறித்து சிந்திக்க செய்ததில் புத்தகங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு .உண்மையில் புத்தகவாசிப்பின் மூலமே இந்த பேருலக்தின் கதவு அவரகளுக்கு திறக்க பட்டதும் ,சமூக சிந்தனை அதிகம் வெளி பட்டதும் ,காந்தியை குறித்து அதிகம் வாசித்து விவாதித்த படியால் மிக எளிமையாக வாழ்வது எப்படி என்று கற்று அதன் படி தான் வாழ்கின்றனர் ,பெரிதாக எதுவும் ஆசைகள் இல்லாவிட்டலும் இந்த சமூகத்தின் நல வாழ்வு மீது பேராசை உண்டு என் தேவதைகளுக்கு எப்போதும் .புத்தகம் என்ன தான் செய்யமுடியும் என்று கேட்பவர்களுக்கு நான் உடனே கை காட்டுவேன் புத்தகம் எதுவும் செய்யும் என்று என் தேவதைகளை நோக்கி 





அடுத்து தேவதைகள் நடத்தும் சிறப்பு மாற்று மருத்துவம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டேன் ,என் தேவதைகள் செய்வது மிக சிறப்பான பணி ,அங்கு மாற்று மருத்தவம் பெற வருபவர்களின் முகத்தில் வாழ்வின் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள் .இந்த பணி தினமும் தொடர்கிறது .மேலும் இப்படி பட்ட சிறப்பு குழந்தைகளின்  வாழ்வின் நலனுக்கு வேண்டி அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள், உபகரணங்கள்  கொடுத்து இருக்கிறார்கள்,சிறப்பு குழந்தைகளை  மகிழுந்து மூலம் கூட்டி வந்து மருத்துவம் பார்த்து பிறகு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கின்றனர் .சிறப்பு குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்வுக்கு வேண்டி அவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு தொடங்கி இருக்கிறார்கள் .பல்வேறு ஊர்களில் மாற்று மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறார்கள் இன்னும் பல்வேறு பணிகள் ,இந்த நோய் ஏற்பட முக்கிய காரணம் சுற்று சூழல் சீர்கேடு அதற்கு எதிராக பல்வேறு போரட்டம் மற்றும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் மாற்று மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டு கொண்ட படியால் இந்த வருட இறுதியில் நடத்தி தர ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் .அநேகமாக டிசம்பர் இறுதியில் நான் பிறந்த மண்ணில்  நடந்த இருக்கிறோம் அதறகான  ஏற்பாடுகளை செய்ய வேண்டும் 



தன் வீட்டின் முன் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து இருக்கிறார்கள் அதில் இருக்கும் எல்லா புத்தகத்தையும் படித்து முடித்து எதை குறித்து கேட்டாலும் விவாதிக்க தயாரக இருப்பது 
என் தேவதைகளின் சிறப்பு. நான் விடை பெரும் மாலை வேளை வந்தது.அதே நேரம் ,என்னை  பேருந்து நிலையம் சேர்க்க ஆட்டோ அழைத்து இருந்தாள் வானா ,ஏற்கனவே தம்பி ....... தனியார் பேருந்தில் முன்பதிவும் செய்து இருந்தான் ,மொத்த மகிழ்வுடனும் பிரிகிறோம் என்ற சோகத்துடனும் விடை பெற்றேன் என் தேவதைகள் வசிக்கும் கூட்டில் இருந்து 

என் தேவதைகளை குறித்து ஏற்கனவே எழுத பட்டுள்ள கட்டுரைகள் 
1.மகத்தான சந்திப்பு
2.ஒளிவிடு ஒளியேற்று
3.ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி
4.வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.


ஒளிவிடு ஒளியேற்று என்று லோகோவில் வைத்து இருப்பதால் தான் என்னவோ எப்போதும் நமக்கு ஒளி தரும் சூரியன் போல் நம்பிக்கையின் கீற்றுகளை பொழிந்து கொண்டே இருகின்றனர். நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியா ஆனால் ஒன்றும் செய்யாவிட்டால் எதுவுமே இங்கு நடைபெறாது என்ற காந்தியின் வரிகள் படி வாழும் என் தேவதைகள் நீங்கள் என்ன செய்தாலும் அது பெரிய விடயம் இல்லை ஆனால் நீங்கள் அதை செய்து ஆக வேண்டும் ,நீங்களே செய்யாவிட்டால் யார் தான் செய்வார்கள் என்பது எத்தனை உண்மை என்பதை என் தேவதைகளை சந்திக்கும் எல்லோரும் கற்று கொள்ளலாம் .ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கும் ஆதவா டிரஸ்ட் முன் பல்வேறு பணிகள் காத்து இருக்கிறது,இதில் நமது பங்களிப்பு என்னவாக இருக்க போகிறது .............இப்போது நம் முன் இருக்கும் பணிகள் 

1. மருத்துவ உதவிகளை மாவட்டம்தோறும் வழங்கவும் நோய் குறித்த விழிப்புணர்வு வழங்கவும் ஒரு முகாம் நடத்த சுமார் 50,000 ரூபாய் செலவாகிறது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

2. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக தற்போது ஒரு வாகனம் வாங்கி இருக்கிறோம். அதற்கு இன்னும் சுமார் 50,000 ரூபாய் பணம் செலுத்தவேண்டியுள்ளது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

3. சிகிச்சை மையத்திற்கான மாத வாடகை ரூபாய் 4,500 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

4. இலவச கணினி பயிற்சி அளிக்க ஆகும் செலவு ரூபாய் 5000 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

5. மருத்துவமனையுடன் கூடிய இல்லம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் வாங்க சுமார் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

உங்கள் தீபங்களில் ஒளிரும் சுடர் போதும் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற!

உங்கள் நன்கொடைகளை " Aadhav Trust" என்ற பெயருக்கு Cheque / DD அனுப்பலாம்.

Bank Name : Canara Bank

SB Account Name: Aadhav Trust

Branch : Suramangalam,

Name : A/c No : 1219101036462

IFSC Code: CNRB0001219

MICR Code: 636015005

தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.


வாழ்நாளில் நீங்கள் என் தோழிகளை சென்று காணா விட்டால் நீங்கள் வாழ்த்த வாழ்கை அர்த்தம் அற்றது என்பதே என்கருத்து .ஒரு முறை சென்று காணுங்கள் வாழ்வை குறித்து உங்கள் எல்லா பதங்களும் அடித்து நொறுக்க படும் .உங்கள் வாழ்வில் நீங்கள் சமூக சிந்தனை உள்ள மனிதன் ஆக மாறி தான் போவீர்கள் ......
விரைவில் என் தேவதைகள் தங்கள் வாழ்கை குறித்து புத்தகம் எழுதுவார்கள் ,அதை படிக்க இப்போதே ஆவல் கொண்டு இருக்கிறேன் ....
தொடர்பு முகவரி 

ஆதவா டிரஸ்ட் 
489-B வங்கி அலுவலர் காலனி 
ஹஸ்தம் பட்டி 
சேலம் -636007
தமிழ் நாடு 
இந்தியா 
தொடர்பு எண் :00919976399403

சனி, 8 மார்ச், 2014

சமத்துவத்தின் பாதையில் ?

பெண்கள் தினம் 



இன்று மார்ச் 8 பெண்கள் தினம்.எத்தனையோ துறைகளில் இன்று 
பெண்கள் சாதனை படைத்தது கொண்டு தான் இருகின்றனர்.ஆனால் பெண்கள் 
வாழ தகுதி இல்லாத நாடாக மாறி விட்ட தேசத்தில் பிறந்த பிறகு நான் எப்படி 
சொல்வது வாழ்வின் சக தோழிகளின் திருவிழான பெண்கள் தினத்தின் வாழ்த்துகளை 

மகளிர் தின வரலாறு 



ன்று இருப்பது  போல் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாத சூழலில் 1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவற்றை  கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் போராட்டம் நடத்தினர் .அதன் பிறகு 1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. .  ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்று  ஜெர்மனியை சார்ந்த பெண் தலைவர்  க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அந்த   மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக அந்த  யோசனையை வரவேற்றனர். 1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது.1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



சமூக சிந்தனையாளர்கள் 

மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி''
என்று  முழங்கினான் பாட்டு கவி பாரதி .

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் மடமையை கொளுத்திடுவோம்’ 
என்றார் பாவேந்தர் பாரதிதாசன் 

‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நள்ளிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ 
என்றார் மகாத்மா காந்தி 

ஆண் பெண்கள் சமத்துவம் அடைய வேண்டி நம் தமிழகத்தில் ஈ.வெ.ரா மிகபெரும் போரட்டம் முன் எடுத்து நடத்தினார் ,பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள்  பெண்கள் .




இன்றும் 

காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களை சிதைத்து, உயிரைப் பறித்து தொழில் நுட்ப துறையில் வேலை செய்த கொன்று புதரில் வீச பட்ட உமா மகேஸ்வரி மேலும் 10 வயது புதுகோட்டை சிறுமி தூங்கி கொண்டு இருந்த போது கடத்த பட்டு வன்புணர்வு செய்ய பட்டு தூக்கில் தொங்க விட பட்ட சோகம்  இப்படி பட்ட கொடும் செயல் செய்தவர்கள் இன்னும் நம்முடன் வாழ்வது வேதனை (நமக்கு தெரியாதது எத்தனையோ?) 

.
எப்படி வாழ்வின் சக தோழியான பெண் இனத்தை இல்லாமல் செய்ய இவர்களுக்கு மனது வருகிறதோ என்று தெரிய வில்லை.சரி இவளவு நடந்தும் அரசு என்ன செய்கிறது .மக்கள் போராட்டம் பார்த்து பெயரளவுக்கு ஒரு கமிட்டி அமைக்க பட்டு அவர்களின் பரிந்துரை இன்று வரை நிறைவேற்ற பட வில்லை என்பது தான் இங்க நிசம்.மேலும் பத்திரிக்கை,ஊடகம் ,போலிஸ், கோர்ட்,மருத்துவ மனை இவர்கள் எல்லாம் ஆணதிக்க வெறியில் தான் இன்றும் இயங்குகிறார்கள் 

தொடக்க காலத்தில் இருந்தே பெண்களை ஒடுக்க என்னவெல்லாம் இந்த சமூகத்தில் கட்டமைக்க முடியுமோ (அன்றைய உடன் கட்டை ஏறுதல் முறை தொடங்கி  இன்று வரை சொல்லப்படும் பெண்களின் உடலில் கற்பு உள்ளது என்பது வரை) அதை மிக சிறப்பாக இந்த சமூகம் செய்து  வந்து கொண்டே இருக்கிறது. அன்று தாசி முறையாக இருந்ததை இன்று விபச்சார விடுதியாக மாற்றியது தான் நவீனத்துவம் .சமூகத்தை கட்டமைத்து ஆண் தான் .இங்கு எல்லாவற்றிலும் முதல் உரிமை ஆணுக்கு தான் .ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை இன்று வரை இல்லை என்பது தான் நிதர்சனம்.ஒரு பெண் இப்படி தான் வளர வேண்டும் என்றும், இப்படி தான் மணம் முடிக்க வேண்டும் என்று வகுத்தவன் ஆண் ,ஆனால் ஆண் எப்படி வேண்டும் என்றாலும் வளரலாம் . காலம் காலமா பெண்களுக்கு அந்த மனநிலை ஊட்டி வளர்க்க பட்டு வந்துள்ளது .அதுவே இன்று பெண்ணை அடக்கவும் பயன் படுகிறது .மேலும் கற்பு என்ற சொல்லை பெண் மேல் திணித்து அவர்களை ஒடுக்கிய கூட்டம் இன்னும் ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்று சொல்லி ஒடுக்கி வருவது தான் இங்கு நாம் காண கிடைப்து ...............


பல பள்ளிகளில்,கல்லூரிகளில் ஒழுங்கான கழிப்பிட வசதி இன்று வரை ஏறப்படுத்த 
படவில்லை,அரசு செய்யுமா எனபதும் கேள்விக்குறியே.பெண்களுக்கு கழிப்பிட வசதி கூட அமைத்து தராத அரசா பெண்களை காக்க போகிறது என்றால் விடை இல்லை.இதனால் பெண்களுக்கு உடல் அளவில் பல பிரச்னைகள். நிறைய படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்களைக் கூட திருமணத்தின்போது ஆண் 50 பவுன், 100 பவுன் என்று வாங்கிக்கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் ஒரே நிலையில் இருக்கும்போது கூட ஆணுக்கு வரதட்சனை தந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழலை ஏன் பெண் ஏற்றுக்கொள்கிறாள்பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கையின் உன்னதமான, உயர்ந்தபட்ச இலக்காகச் இந்த மூட சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. 


"பெண்களுக்கு குறைவான ஊதியம், பணியிடங்களில் மோசமான முறைகளில் நடத்துதல்
பிரச்சனை ஏற்படுகையில் பெண் உடலை வைத்து தாக்குவது ....இப்படி பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், கொடுமைகள்  இனி ஒரு நாளும் அனுமதியோம் என்று ஒவ்வொரு ஆணும் ஏன்? ஒவ்வொரு பெண்ணும் கூட சபதம் எடுத்துக்கொள்ள இந்த நாளில் முன்வருவோம்.



கருணை, பாசம், இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும் ஆணிடமும் பெண்மை இருக்கிறது, பல சமயங்களில் பெண்களிடமும் ஆண்மை வெளிப்படத்தான் செய்கிறது, பெண்களில் நல்ல பெண்கள், கெட்ட பெண்கள் என்று உண்டு, ஆனால் பெண்மை என்றுமே உயர்வானது .பெண்மையை மதிப்போம் அவர்களும் நமை போல ஒரு சக உயிர் தான் .நமக்கு உள்ள எல்லா உரிமையும் அவர்களும் பெற பெண்களோடு இணைந்து போராடுவோம் .

செவ்வாய், 4 மார்ச், 2014

தமிழர்கள் இனவெறியர்களா ?




இன்றைய தமிழ் இந்து பத்திரிக்கை பதிப்பில் தோழர் சமஸ்  தமிழகத்தின் ஏழு மண்டேலாக்கள் தலைப்பில் எழுதிய கட்டுரை தமிழர்களை இன வெறியர்கள் என்று சுட்டி காட்டுவதால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த கட்டுரை தோழர் சம்ஸ் எழுதிய கட்டுரை படிக்க (அதன் லிங்) http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5747725.ece

ராஜீவ் கொலை குற்றவாளிகள் என்று அரசால் குற்றம் சாட்ட பட்ட தமிழர்கள் ஆன சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் தமிழகத்தின் ஏழு மண்டேலாக்கள் என்று சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்  தாம் அறிந்து கொண்டதாகவும் ஆனால் அவர்கள் கொலை குற்றவாளிகள் என்றும் இப்போது மன்னிப்பு வேண்டி மனிதாபிமான அடிப்படையில்  சிறை விட்டு வெளிவர காத்து இருப்பதாகவும் இங்கு தமிழ் நாட்டில் போராடும்  சிலர் அவர்களை போற்றி நோட்டிஸ் அடித்து இருப்பதாகவும் அவர்கள் பல்வேறு வன்முறை சம்பவத்தில் ஈடு படுவதால் தான் வடக்கே ஊடக துறையில் இருப்பவர்கள் எல்லாம் நமை இன வெறியர்கள் என்று குறிக்கிறார்கள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறார் 



தோழர் சம்ஸ்க்கு தெரியாதது அல்ல ராஜீவ் கொலை வழக்கை விசாரணனை செய்து  வாக்குமூலம் எடுத்த அன்றய அதிகாரிகளின் இன்றய தன் வாக்குமூலம்: தொடக்கத்தில் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் ஒன்று, அவர் ‘பெல்ட் பாம்’ தயாரிப்பில் உதவினார் என்பது. ஆனால், “‘பெல்ட் பாம்’ செய்தது யார் என்று தெரியவில்லை” என்று சமீபத்தில் சொன்னார், விசாரணை அதிகாரி ரகோத்தமன். “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே தண்டனை அனுபவித்து விட்டார்கள்; அவர்களது மரண தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய வேண்டும்” என்று அடுத்து வேண்டுகோள் விடுத்தார், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்கு தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ். இப்போது “பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யவில்லை; அவருக்கு ராஜீவ் கொலைபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று, தான் நம்புவதாகச் சொல்லியிருக்கிறார் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தியாகராஜன்.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும்,திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில்  வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை இன்றுவரை 

ராஜீவ் காந்தி மே 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் திருமதி மரகதம் சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்கிற விஷயம் மே 18ந்தேதி தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மே 17ந்தேதியே “தினத்தந்தி” செய்தித்தாளில்
ராஜீவ் காந்தி 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் பேசப்போகிறார் என்கிற செய்தி வெளி வந்து விட்டது – எப்படி ? தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாத விஷயம்
தினத்தந்தி நிருபருக்கு தெரிந்தது எப்படி ?
19ந்தேதி விஷயம் தெரிந்த பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த கூட்டம் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறார்.அதையும் மீறி, மரகதம் சந்திரசேகரின் செல்வாக்கில் இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று  உயர்மட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு  உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த கூட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த போலீசிடம் அனுமதிவாங்கினார்கள்.  ஆனால் மரகதம் சந்திரசேகர்இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பள்ளிக்கூடத்திற்கு பதிலாக, கோவில் மைதானம் என்று மாற்றி விட்டார்-அது ஏனோ ?இடம் மாற்றப்பட்ட விஷயம் போலீசிடம் சொல்லி புதிதாய் அனுமதி பெறப்படவில்லை. அந்த மைதானத்திற்கு சரியான பாதுகாப்பும்  போடப்படவில்லை.அந்த கூட்டத்தில்  டெரில் பீட்டர் என்கிற பிஸினஸ்மேன் ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து போனார்.அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரதுபெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில் பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப்  பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார் !இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு, எப்படி சம்பந்தப்பட்டிருந்தார் ?அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, விசாரணையில்சரியாக ஒத்துழைக்கவில்லை. ஒரிஜினல் டூர் ப்ரொக்ராமை அவர்கள் விசாரணையின்போது கொடுக்கவே இல்லை. பின்னர் திரும்ப திரும்ப நினைவூட்டப்பட்டபிறகு நவம்பர் 28ந்தேதி - 6 மாதங்கள் கழித்து தான் -அதுவும் திருத்தப்பட்டதைத் தான் கொடுத்தார்கள் அது ஏன் ?
தனுவுடன் பக்கத்தில் ராஜீவுக்கு மாலை போடுபவர்க்ளுடன் நின்றிருந்த லதா கண்ணனின் கணவர் கண்ணன் 4வது கிரேடில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளி. கொலை நடந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவர்  சொந்தமாக ஒரு லாரி வாங்கினார். அவருக்கு அவ்வளவுபணம் கிடைத்தது எப்படி ? இதை விசாரிக்காமல் விட்டது எப்படி ?டிஐஜி ஸ்ரீகுமார் விசாரணைக்காக லண்டன் சென்றுவந்தார். அவர் அங்கு விசாரணையில் கண்டுபிடித்ததுஎன்ன என்று ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை.அவர் விசாரணைக்கு அழைக்கப்படவும் இல்லை.அவர் லண்டனில் இருந்தபோது முக்கியமான ஆவணங்கள்அடங்கிய ஒரு சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால் -இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை !
ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக கேபினட் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். ஆனால் -
இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில் சேர்க்கப்படவில்லை.எஸ் ஐ டி கஸ்டடியில்  இருந்தபோது, ஷண்முகம் என்கிறசிறுவகைக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தார்.அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை. மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக, தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்தன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.இந்த தகவலை,திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த்முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி)அண்மையில் வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது, கோர்ட்டில் அவர் இந்த விவரத்தை தெரிவிக்கவில்லை.சிவராஜனின் டைரியையும் ஆவணமாக ஒப்படைக்கவில்லை !
சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுததன்பின்னணியைப் பற்றி, சிபிஐ விசாரிக்காதது ஏன் ? தனுவும், சிவராஜனும் மரகதம் சந்திரசேகர்குடும்பத்திற்கு எப்படி அறிமுகம் ஆனார்கள் என்பதைசிபிஐ எங்கும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும்
லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு இலங்கைத் தமிழர் வேறு !
சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும், சென்னை
வந்து சேரும் நேரமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம் யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம் ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.முதலில் இருந்தே கண்ணுக்குத் தெரியாத “கை” ஒன்று இதில் தொடர்பு கொண்டு இருக்கிறது.
எஸ் ஐ டி இந்த கோணங்களில் விசாரிக்காதது ஏன் ?சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன் போபாலுக்குச்(மத்திய பிரதேசம்) சென்றதும், TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய் கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டுஉள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த பணப்பரிமாற்றம் நடந்தது என்றும் எஸ் ஐ டி தீவிரமாகவிசாரிக்கவில்லை.  இதைத் தீவிரமாக விசாரித்திருந்தால், உண்மையான குற்றவாளிகளின்முகம் தெரிய வந்திருக்கும்.
இந்த பணம் செக்காக கொடுக்கப்படவில்லை. மொத்த பணமும் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 8, 1991 தேதியிட்ட டைரி குறிப்பு - இது குறித்து மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தில்உள்ள ஒரு விலாசத்தையும் கொண்டிருக்கிறது.ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆதிரை என்கிற பெண் செப்டம்பர் 25, 1992 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமாக தான் சில விவரங்கள் கூற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.அதை  யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும், ஜூலை 29ந்தேதியன்று, பங்களூர் போலீஸ்,சிவராஜனும் அவரது கூட்டாளிகளும், இந்திரா நகரில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்கிற தகவலை எஸ்.ஐ.டி க்கு தெரிவித்தது. அன்றே அந்த வீட்டைகமாண்டோ படை வளைத்திருந்தால், சிவராஜன் உட்ப்டஅத்தனை பேரையும் உயிருடன் பிடித்திருக்கலாம்.ஆனால் எஸ்.ஐ.டி. இதற்கு 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.சிவராஜன் உடல் கிடந்த இடத்தில், ஒரு  AK-47ரைபிளும், ஒரு 9mm பிஸ்டலும் இருந்தது. அவை எப்படி அங்கே வந்தன என்பதற்கு இன்று வரை சரியானவிளக்கம் இல்லை.வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலைதுவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.

ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று “இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம் இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள்இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதை யாரும் விசாரிக்கவில்லை.சம்பவம் நடந்த இடத்தில் 3 வீடியோபுகைப்படக்காரர்கள் எடுத்த வீடியோக்கள் சிதைக்கப்பட்டும்,சில் இடங்களில் அழிக்கப்பட்டும் இருந்தன.அவற்றை கையாளும்போது தவறுதலாக இவை நிகழ்ந்து விட்டன என்று போலீஸ் தரப்பு பின்னர் கூறியகாரணங்கள்  ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.சுப்பிரமணிய சாமி ,சந்திரா சாமி இவர்கள் ராஜீவ் கொலையில் பங்கு விசாரிக்க படவே இல்லை 

தவறுகள்  செய்தவர்களை கண்டு பிடித்து தண்டிக்க முடியாமல் அப்பாவி ஏழு தமிழர்களை கொலை கயிற்றின் வாயிலில் 24 ஆண்டுகள் தவிக்க விட்ட பிறகும் அவர்கள் விடுதலை வேண்டி போராடுகிற சக தமிழனை இனவெறியர்கள் என்று சொல்வது மிக பெரிய அயோக்கியத்தனம் .ஆந்திரத்தில் ராஜீவ் சிலை தகர்த்த போது எழுதி இருந்தீர்களா? ஆந்திரன் இனவெறியன் என்று அப்படி ஆந்திரத்தில் எழுதி விட்டு அங்கு பிழைக்க முடியாது என்பது நீங்களும் நாங்களும் அறிந்தது தான் ,அனால் தமிழன் அப்படி இல்லை இந்த இனத்தை என்ன செய்தாலும் அமைதியாக தான் இருப்பான் ,எம்  இனம் தமிழ் ஈழத்தில் அழிக்க பட்ட போது  இந்த தேசம் அதற்கு உடந்தை ஆக இருந்த போதும் கண்ணீரை தவிர வேறு எதுவும் பெரிதாக செய்து விட வில்லை தமிழன் .என் அண்ணன் முத்து குமரன் தன் உயிரை கொடுத்து இந்த இனத்தின் உணர்ச்சி மீது கேள்வி கேட்டதும் என் அக்கா செங்கொடி எரி நெருப்புக்கு தன் உயிர் கொடுத்து இந்த இனத்தை போரடிய தூண்டிய பின் தான் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடு பட்டான் தமிழன் ,தன் இனம் அழிக்க இந்த தேசம் உடந்தை ஆக இருந்த போதும் இந்த தேசம் தேவை இல்லை என்பதை கூட தமிழன் ஒத்து கொள்ள மாட்டான் ,ஏன் என்றால் ஒருமைப்பாடு பெரிது என்று எண்ணுபவன் தான் தமிழன், அப்படி பட்ட தமிழனை நீங்கள் இனவெறியர்கள் என்று எழுதி அதுவும் தமிழ் நாட்டில் விற்கிறீர்கள் என்றால் தமிழன் எவளவு பொறுமை வாய்ந்தவன் என்பதற்கு இதை விட வேறு செயலை சொல்லி விட முடியுமா என்ன ?


திங்கள், 3 மார்ச், 2014

இன்றைய கல்வியும் பின் நம் பிள்ளைகளும்





இன்று கோலாகலமாக தொடங்குகிறது பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தமிழ்நாட்டில் ,

இது தான் முக்கியமான தேர்வு இதில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் மேல் படிப்பு படிக்க நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதால் எல்லா பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடைசி நேர Tension  உடன் காணப்படுகின்றனர் .அதற்கு ஏற்ற தயாரிப்புகள் எல்லா வீடுகளிலும் ஜோராக நடக்கிறது . 

பள்ளிகளில் தயாரிப்பு பற்றி சொல்லி கொண்டே  செல்லலாம்.இங்கு நாமக்கல் கோழி பண்ணை பள்ளிகள் பிரபலம் .நமது பள்ளியையும் எப்படியாவது அந்த நாமக்கல்கோழி பண்ணை பள்ளி போல் ஆக்கி விட வேண்டும் என்று முயன்று வருகின்றனர் மற்ற எல்லா பள்ளி உரிமையாளர்களும் .அதற்கு வேண்டி கோழி முப்பது நாளில் எப்படி அதிக எடை வர உணவை வாய் வழி குத்தி குத்தி அமுக்குகிறார்களோ அப்படி குழந்தைகளை  மார்க் எடுக்க கொடுமை படுத்தும் போக்கு தொடர்வது வேதனை 

முன்பு (2002) நான் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் போது கூட இப்படி எல்லாம் இல்லை ,எப்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து அவர்கள் பள்ளிகள் தொடங்கி மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தங்கள் பள்ளிகளில் ஈர்க்க என்ன செய்யலாம் என்று ரூம்போட்டு யோசித்து கண்டு பிடித்த காரியத்தால் வந்த வினை தான் இது ,எல்லா குழந்தைகளையும் ஒருங்கே நல்ல எடையுடன் வளரும் கோழிகள் ஆக நினைத்து குழந்தைகள் மூளையில் பாடத்தின் பதில்களை இறக்கிகொண்டிருக்கின்றனர்  மிக கொடூரமாக  இங்கு உண்மை என்ன என்றால்  எல்லா குழந்தை சித்திக்கும் ஆற்றலும் மூளையில் பதியும் ஆற்றலும் ஓன்று அல்ல .ஓவ்வொருவரும் தனித்துவம் கையில் உள்ள பெருவிரல் ரேகை போல்  



நான் இன்றய கல்வி முறை குறித்து மாணவர்களிடம் உரையாடிய போது பலருக்கு இந்த கல்வி முறை மீது துளி கூட மகிழ்வு இருந்ததாக தெரியவில்லை ,சிறை சாலை பள்ளிகள் இரண்டும் இங்கு ஓன்று தான்  ,இப்படி பட்ட பள்ளிகள் அதிகம் ஆகி கொண்டு இருப்பதே வேதனை .இந்த கல்வி முறை மாற்ற பட வேண்டும் என்பதே பல மாணவ மாணவியர் கருத்து .ஆனால் அதற்கு ஒரு காலும் தொழிற்துறை சம்மதிக்காது 

நாம் நினைப்போம் நாம் எல்லாம் படிப்பது நமது நலனுக்கு என்று ,உண்மையில் நாம் எல்லாம் படிப்பது பெருமுதலாளிகளின் நலனுக்கு ,அவர்களுக்கு எப்படி பட்ட வேலையாள் தேவை என்று நினைகிறார்களோ அப்படி பட்ட வேலையாட்களை  (இயந்திரம்) தயாரித்து கொடுக்கும் ஒரு தொழிற்சாலை கூடம் தான் இன்றய கல்வி சாலைகள் .



பெருமுதலாளிகளின் நலனுக்கு  இந்த கல்வி முறையில்  பல சீர்திருத்தம் கொண்டு வர பட்டுள்ளது .குழந்ததைகள்  ஒரு இயந்திரம் அவன் ஒரு மனிதன் அல்ல என்ற முறையில் பள்ளிகள்  இன்று கையாளுகிறது .மதிப்பெண் எடுக்கா விட்டால் அவன் வாழ தகுதி இல்லாதவன் என்ற எண்ணத்தை சிறுவயதில் குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது ,மார்க் எடுக்க முடியாத  குழந்தைகள் தற்கொலை செய்து உயிர் மாய்த்து கொள்கின்றனர் .எல்லா விளையாட்டையும் தடைசெய்து பொழுது போக்குக்கு பெரிய பூட்டு போட்டு பூட்டி அவர்களை உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படும் படி செய்து விடுகிறது ,நீதி போதனை வகுப்பு இல்லை ,விடுமுறை என்பதே இல்லை ,இப்படி பல இல்லைகள் இங்கு ,எப்போதும் படிப்பு படிப்பு என்று மொத்தமாக பள்ளியை விட்டு வெளி வரும் போது அவர்கள் ஒரு இயந்திரம் ஆக மாறியே வருகின்றனர் .

இப்படி எல்லா தவறுகளையும் கல்வி நிறுவனம் மற்றும் பெற்றவர்கள் செய்து விட்டு அறமும் ,அன்பும் இரக்கமும் இல்லை இன்றைய இளையோரிடம் என்று மீண்டும் குறை சொல்வதே வாடிக்கை  ஆக போய் விட்டது ,இயந்திரத்திடம் எப்படி அன்பை ,அறத்தை சமூக சிந்தனையை ஏற்படுத்த முடியும் .நமக்கு முன் உள்ள வாய்ப்பு  இரண்டில் ஓன்று தான் இப்போது குழந்தைகளை இயந்திரம் ஆக்கும் இந்த கல்வி முறையை மாற்றுவது  அப்படி இல்லை இப்படியே பிள்ளைகள் சாகட்டும் என்று இருப்பது,தீர்வு நிம்மிடம் தான் ,என்னால் ஓன்று செய்ய முடியாது என்று சொல்லி விட்டு  அன்பை அறத்தை சமூக சிந்தனையை இளையோரிடம் எதிர்பார்க்காதீர்கள் 






ஞாயிறு, 2 மார்ச், 2014

மண்ணின் மைந்தர்கள் (என் பாசத்திற்குரிய தோழர்கள்)

இந்த பதிவு திருக்குறள் உணவகம் நடத்தும் அன்பு தோழர்கள் பற்றியது .இந்த உணவகம் PSG Tech இல் முதுகலை பட்டம் முடித்த Suresh Jegannathan மற்றும Dinesh Jayabal என்ற இரு இளைஞர்களால் தொடங்கபட்டுள்ளது.

நமது முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு "உணவே மருந்து" என்ற வாழ்வியல் முறையினை வகுத்து அதையே பின்பற்றி வளமாக வாழ்ந்து வந்தனர், ஆனால் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற போர்வையில் நாம் அந்த வாழ்வியல் முறையினை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி Fast food என்னும் பழக்கத்தில் விழுந்ததின் விளைவே இன்று நம் கண் முன் காணும் ஆரோக்கியமற்ற, அவசரமான இந்த வாழ்க்கை.



நாம் எல்லாம் படித்த பின்பு நமது தொழிலை நமக்கு பிடித்த விசயத்திலிருந்து தெரிவு செய்வோம் ஆனால் தோழர்கள் இருவரும் இந்த சமூகத்தில் அவர்களுக்கு பிடிக்காத , அவர்கள்  குறை பட்டுக் கொண்ட மாற வேண்டும் என்று அவர்களின்  விரும்பிய ஒன்றிலிருந்துதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் .சத்தான உணவுகள்  சென்னையில் கிடைக்கவில்லையே என்ற 6 வருட ஆதங்கத்தின் வெளிப்பாடே அவர்கள்  சென்னையில் தொடங்கி இருக்கும் "திருக்குறள் உணவகம்".

வெறும் நம்பிக்கையும் , உழைப்பும் மட்டுமே முதலீடாக கொண்டிருந்த அவர்களை  “Thirukkural Caters” ஆரம்பிக்க வைத்த சிறுதானிய ஆராய்ச்சியாளர் (Millet Scientist) சலோமி யேசுதாஸ் Salome Yesudasஅவர்களும் ,ஆரம்ப கால கடின நாட்களில் அவர்களோடு சேர்ந்து மாவு அரைத்து, காய்கறி நறுக்கி , கூட்டங்களுக்கு பரிமாறிய அறை நண்பர்கள்களுக்கும் . ஒவ்வொறு முறையும் அவர்களை ஊக்குவித்து ,  சிறுதானிய வகுப்பெடுத்து, இந்த உணவுகளை அறிய வைத்த, சிறுதானியங்களுக்காகவே தன் வாழ்வை அற்பணித்த Rajamurugan. அவர்களுக்கும் ,உதவி என்று கேட்டதும் (பணம் )உடன் தந்து உதவிய எங்கள் அருமை நண்பர்களுக்கும்  .ஆரம்பம் முதலே அவர்களுக்கு பெரும் ஆதரவும் தைரியமும் அளித்து வரும் சித்த மருத்துவர் "ஆறாம் திணை- சிவராமன்" சார். இன்னபிற நட்புகளுக்கும் நன்றிகளை பகிர்ந்து கொள்கிறார்கள் .

கடந்த ஜனவரி மாதம்  “திருவள்ளுவர் தினத்தில்” உதயமாகியது  அவர்களின்   “திருக்குறள் உணவகம்.அவர்கள்  உணவகத்தில் அவர்களே  சமையல் மாஸ்டராகவும் , சர்வராகவும் , சிறுதானிய விரிவுரையாளராகவும்  இருந்து வருகிறார்கள் .பணக்கார உணவாகிப் போன சிறுதானியங்களை சராசரி மக்களின் உணவாக மாற்றும் அவர்கள் முயற்சியின் முதல் படி இது என்று மகிழ்கிறார்கள் தோழர்கள்

திருக்குறள் உணவகத்தில் பரிமாறப்படும் உணவின் விலை பட்டியல் எல்லா உணவகத்தை விட குறைவு தரம் சிறப்பு

விலை பட்டியல் அறிமுகம் :

சிறுதானிய மினி டிபன் ( காலை ) - Rs.49 மட்டும்

கேழ்வரகு இட்லி , வரகு மிளகு பொங்கல் , சிறுதானிய கஞ்சி ,சுண்டல் , ப்ரூட் சாலட் / வெஜ் சாலட், சாம்பார் , மூலிகை சட்னி , தேங்காய் / தக்காளி சட்னி

சிறுதானிய மினி மீல்ஸ் ( மதியம் ) - Rs.49 மட்டும்

சாமை சாம்பார் சாதம் , குதிரவாலி தயிர் சாதம், சைவ ஆம்லெட் , வெஜ் சாலட் , சைவ ஆம்லெட் , தினை பாயாசம் , பழக்கூழ்

சிறுதானிய மினி டிபன் ( இரவு ) - Rs.49 மட்டும்

கேழ்வரகு / கம்பு இட்லி , சோள தோசை , சிறுதானிய கஞ்சி , அவல் சாலட் , சாம்பார் , மூலிகை சட்னி , தேங்காய் / தக்காளி சட்னி , வாழைப்பழம்

உணவகம் நடத்துவதோடு அல்லாமல் வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் உணவு தயாரித்து கொடுக்கும் பணியை செய்கிறார்கள் .கடந்த மாதம் நடந்த எனது வீட்டின் புதுமனை புகு விழாவில்  என் ஊருக்கு வந்து இரவு விழித்து இருந்து காய்கறி நறுக்கி அதிகாலை எழுந்து உணவு சமைக்க தயார் ஆனார்கள் ,சுவையான சத்தான உணவும் சமைத்து தந்து மகிழ்ச்சியில் எனை ஆழ்த்தினார்கள் .சிறுதானிய உணவை சமைத்து தந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் சிறப்புகளை எல்லா மக்களும் புரியும் படி உணவு பரிமாற பட்ட எல்லா பந்தியிலும் எடுத்துரைத்தார்கள் .



சிறுதானியங்களை சராசரி மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் நமது  பங்களிப்பு மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன். நாம் செய்ய வேண்டியது எல்லாம் மிகவும் எளிது ,நம் மண்ணின் உணவாகிய சிறுதானியம் மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வந்து நோய்களை ஒழிக்க முதலில் நாம் சிறுதானிய உணவு முறைக்கு மாறி நாம் குடும்பத்தையும் மாற்றுவோம் .நமது வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் உணவுக்கு  சிறுதானியம் அறிமுகம் செய்வோம் .வாருங்கள் நாம் தொலைத்த நம் பாட்டி தாத்தா உணவுகளை நாம் மீட்டெடுப்போம். நம் விவசாயிகளுக்கு தோள் கொடுப்போம்.

தோழர்களின் உணவகம் முகவரி

திருக்குறள் உணவகம் ,
2/32 ,பள்ளிக்கூட தெரு ,
விருகம்பாக்கம் ,
சென்னை - 92.

தோழர்களிடம் பேச 9789819533