இந்த பதிவு திருக்குறள் உணவகம் நடத்தும் அன்பு தோழர்கள் பற்றியது .இந்த உணவகம் PSG Tech இல் முதுகலை பட்டம் முடித்த Suresh Jegannathan மற்றும Dinesh Jayabal என்ற இரு இளைஞர்களால் தொடங்கபட்டுள்ளது.
நமது முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு "உணவே மருந்து" என்ற வாழ்வியல் முறையினை வகுத்து அதையே பின்பற்றி வளமாக வாழ்ந்து வந்தனர், ஆனால் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற போர்வையில் நாம் அந்த வாழ்வியல் முறையினை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி Fast food என்னும் பழக்கத்தில் விழுந்ததின் விளைவே இன்று நம் கண் முன் காணும் ஆரோக்கியமற்ற, அவசரமான இந்த வாழ்க்கை.
நாம் எல்லாம் படித்த பின்பு நமது தொழிலை நமக்கு பிடித்த விசயத்திலிருந்து தெரிவு செய்வோம் ஆனால் தோழர்கள் இருவரும் இந்த சமூகத்தில் அவர்களுக்கு பிடிக்காத , அவர்கள் குறை பட்டுக் கொண்ட மாற வேண்டும் என்று அவர்களின் விரும்பிய ஒன்றிலிருந்துதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் .சத்தான உணவுகள் சென்னையில் கிடைக்கவில்லையே என்ற 6 வருட ஆதங்கத்தின் வெளிப்பாடே அவர்கள் சென்னையில் தொடங்கி இருக்கும் "திருக்குறள் உணவகம்".
வெறும் நம்பிக்கையும் , உழைப்பும் மட்டுமே முதலீடாக கொண்டிருந்த அவர்களை “Thirukkural Caters” ஆரம்பிக்க வைத்த சிறுதானிய ஆராய்ச்சியாளர் (Millet Scientist) சலோமி யேசுதாஸ் Salome Yesudasஅவர்களும் ,ஆரம்ப கால கடின நாட்களில் அவர்களோடு சேர்ந்து மாவு அரைத்து, காய்கறி நறுக்கி , கூட்டங்களுக்கு பரிமாறிய அறை நண்பர்கள்களுக்கும் . ஒவ்வொறு முறையும் அவர்களை ஊக்குவித்து , சிறுதானிய வகுப்பெடுத்து, இந்த உணவுகளை அறிய வைத்த, சிறுதானியங்களுக்காகவே தன் வாழ்வை அற்பணித்த Rajamurugan. அவர்களுக்கும் ,உதவி என்று கேட்டதும் (பணம் )உடன் தந்து உதவிய எங்கள் அருமை நண்பர்களுக்கும் .ஆரம்பம் முதலே அவர்களுக்கு பெரும் ஆதரவும் தைரியமும் அளித்து வரும் சித்த மருத்துவர் "ஆறாம் திணை- சிவராமன்" சார். இன்னபிற நட்புகளுக்கும் நன்றிகளை பகிர்ந்து கொள்கிறார்கள் .
கடந்த ஜனவரி மாதம் “திருவள்ளுவர் தினத்தில்” உதயமாகியது அவர்களின் “திருக்குறள் உணவகம்.அவர்கள் உணவகத்தில் அவர்களே சமையல் மாஸ்டராகவும் , சர்வராகவும் , சிறுதானிய விரிவுரையாளராகவும் இருந்து வருகிறார்கள் .பணக்கார உணவாகிப் போன சிறுதானியங்களை சராசரி மக்களின் உணவாக மாற்றும் அவர்கள் முயற்சியின் முதல் படி இது என்று மகிழ்கிறார்கள் தோழர்கள்
திருக்குறள் உணவகத்தில் பரிமாறப்படும் உணவின் விலை பட்டியல் எல்லா உணவகத்தை விட குறைவு தரம் சிறப்பு
விலை பட்டியல் அறிமுகம் :
சிறுதானிய மினி டிபன் ( காலை ) - Rs.49 மட்டும்
கேழ்வரகு இட்லி , வரகு மிளகு பொங்கல் , சிறுதானிய கஞ்சி ,சுண்டல் , ப்ரூட் சாலட் / வெஜ் சாலட், சாம்பார் , மூலிகை சட்னி , தேங்காய் / தக்காளி சட்னி
சிறுதானிய மினி மீல்ஸ் ( மதியம் ) - Rs.49 மட்டும்
சாமை சாம்பார் சாதம் , குதிரவாலி தயிர் சாதம், சைவ ஆம்லெட் , வெஜ் சாலட் , சைவ ஆம்லெட் , தினை பாயாசம் , பழக்கூழ்
சிறுதானிய மினி டிபன் ( இரவு ) - Rs.49 மட்டும்
கேழ்வரகு / கம்பு இட்லி , சோள தோசை , சிறுதானிய கஞ்சி , அவல் சாலட் , சாம்பார் , மூலிகை சட்னி , தேங்காய் / தக்காளி சட்னி , வாழைப்பழம்
உணவகம் நடத்துவதோடு அல்லாமல் வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் உணவு தயாரித்து கொடுக்கும் பணியை செய்கிறார்கள் .கடந்த மாதம் நடந்த எனது வீட்டின் புதுமனை புகு விழாவில் என் ஊருக்கு வந்து இரவு விழித்து இருந்து காய்கறி நறுக்கி அதிகாலை எழுந்து உணவு சமைக்க தயார் ஆனார்கள் ,சுவையான சத்தான உணவும் சமைத்து தந்து மகிழ்ச்சியில் எனை ஆழ்த்தினார்கள் .சிறுதானிய உணவை சமைத்து தந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் சிறப்புகளை எல்லா மக்களும் புரியும் படி உணவு பரிமாற பட்ட எல்லா பந்தியிலும் எடுத்துரைத்தார்கள் .
சிறுதானியங்களை சராசரி மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் நமது பங்களிப்பு மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன். நாம் செய்ய வேண்டியது எல்லாம் மிகவும் எளிது ,நம் மண்ணின் உணவாகிய சிறுதானியம் மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வந்து நோய்களை ஒழிக்க முதலில் நாம் சிறுதானிய உணவு முறைக்கு மாறி நாம் குடும்பத்தையும் மாற்றுவோம் .நமது வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் உணவுக்கு சிறுதானியம் அறிமுகம் செய்வோம் .வாருங்கள் நாம் தொலைத்த நம் பாட்டி தாத்தா உணவுகளை நாம் மீட்டெடுப்போம். நம் விவசாயிகளுக்கு தோள் கொடுப்போம்.
தோழர்களின் உணவகம் முகவரி
திருக்குறள் உணவகம் ,
2/32 ,பள்ளிக்கூட தெரு ,
விருகம்பாக்கம் ,
சென்னை - 92.
தோழர்களிடம் பேச 9789819533

Tweet | ||||
சேவைகள் தொடரட்டும்...தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்
நீக்கு