சனி, 8 மார்ச், 2014

சமத்துவத்தின் பாதையில் ?

பெண்கள் தினம் 



இன்று மார்ச் 8 பெண்கள் தினம்.எத்தனையோ துறைகளில் இன்று 
பெண்கள் சாதனை படைத்தது கொண்டு தான் இருகின்றனர்.ஆனால் பெண்கள் 
வாழ தகுதி இல்லாத நாடாக மாறி விட்ட தேசத்தில் பிறந்த பிறகு நான் எப்படி 
சொல்வது வாழ்வின் சக தோழிகளின் திருவிழான பெண்கள் தினத்தின் வாழ்த்துகளை 

மகளிர் தின வரலாறு 



ன்று இருப்பது  போல் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாத சூழலில் 1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவற்றை  கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் போராட்டம் நடத்தினர் .அதன் பிறகு 1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. .  ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்று  ஜெர்மனியை சார்ந்த பெண் தலைவர்  க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அந்த   மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக அந்த  யோசனையை வரவேற்றனர். 1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது.1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



சமூக சிந்தனையாளர்கள் 

மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி''
என்று  முழங்கினான் பாட்டு கவி பாரதி .

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் மடமையை கொளுத்திடுவோம்’ 
என்றார் பாவேந்தர் பாரதிதாசன் 

‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நள்ளிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ 
என்றார் மகாத்மா காந்தி 

ஆண் பெண்கள் சமத்துவம் அடைய வேண்டி நம் தமிழகத்தில் ஈ.வெ.ரா மிகபெரும் போரட்டம் முன் எடுத்து நடத்தினார் ,பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள்  பெண்கள் .




இன்றும் 

காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களை சிதைத்து, உயிரைப் பறித்து தொழில் நுட்ப துறையில் வேலை செய்த கொன்று புதரில் வீச பட்ட உமா மகேஸ்வரி மேலும் 10 வயது புதுகோட்டை சிறுமி தூங்கி கொண்டு இருந்த போது கடத்த பட்டு வன்புணர்வு செய்ய பட்டு தூக்கில் தொங்க விட பட்ட சோகம்  இப்படி பட்ட கொடும் செயல் செய்தவர்கள் இன்னும் நம்முடன் வாழ்வது வேதனை (நமக்கு தெரியாதது எத்தனையோ?) 

.
எப்படி வாழ்வின் சக தோழியான பெண் இனத்தை இல்லாமல் செய்ய இவர்களுக்கு மனது வருகிறதோ என்று தெரிய வில்லை.சரி இவளவு நடந்தும் அரசு என்ன செய்கிறது .மக்கள் போராட்டம் பார்த்து பெயரளவுக்கு ஒரு கமிட்டி அமைக்க பட்டு அவர்களின் பரிந்துரை இன்று வரை நிறைவேற்ற பட வில்லை என்பது தான் இங்க நிசம்.மேலும் பத்திரிக்கை,ஊடகம் ,போலிஸ், கோர்ட்,மருத்துவ மனை இவர்கள் எல்லாம் ஆணதிக்க வெறியில் தான் இன்றும் இயங்குகிறார்கள் 

தொடக்க காலத்தில் இருந்தே பெண்களை ஒடுக்க என்னவெல்லாம் இந்த சமூகத்தில் கட்டமைக்க முடியுமோ (அன்றைய உடன் கட்டை ஏறுதல் முறை தொடங்கி  இன்று வரை சொல்லப்படும் பெண்களின் உடலில் கற்பு உள்ளது என்பது வரை) அதை மிக சிறப்பாக இந்த சமூகம் செய்து  வந்து கொண்டே இருக்கிறது. அன்று தாசி முறையாக இருந்ததை இன்று விபச்சார விடுதியாக மாற்றியது தான் நவீனத்துவம் .சமூகத்தை கட்டமைத்து ஆண் தான் .இங்கு எல்லாவற்றிலும் முதல் உரிமை ஆணுக்கு தான் .ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை இன்று வரை இல்லை என்பது தான் நிதர்சனம்.ஒரு பெண் இப்படி தான் வளர வேண்டும் என்றும், இப்படி தான் மணம் முடிக்க வேண்டும் என்று வகுத்தவன் ஆண் ,ஆனால் ஆண் எப்படி வேண்டும் என்றாலும் வளரலாம் . காலம் காலமா பெண்களுக்கு அந்த மனநிலை ஊட்டி வளர்க்க பட்டு வந்துள்ளது .அதுவே இன்று பெண்ணை அடக்கவும் பயன் படுகிறது .மேலும் கற்பு என்ற சொல்லை பெண் மேல் திணித்து அவர்களை ஒடுக்கிய கூட்டம் இன்னும் ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்று சொல்லி ஒடுக்கி வருவது தான் இங்கு நாம் காண கிடைப்து ...............


பல பள்ளிகளில்,கல்லூரிகளில் ஒழுங்கான கழிப்பிட வசதி இன்று வரை ஏறப்படுத்த 
படவில்லை,அரசு செய்யுமா எனபதும் கேள்விக்குறியே.பெண்களுக்கு கழிப்பிட வசதி கூட அமைத்து தராத அரசா பெண்களை காக்க போகிறது என்றால் விடை இல்லை.இதனால் பெண்களுக்கு உடல் அளவில் பல பிரச்னைகள். நிறைய படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்களைக் கூட திருமணத்தின்போது ஆண் 50 பவுன், 100 பவுன் என்று வாங்கிக்கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் ஒரே நிலையில் இருக்கும்போது கூட ஆணுக்கு வரதட்சனை தந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழலை ஏன் பெண் ஏற்றுக்கொள்கிறாள்பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கையின் உன்னதமான, உயர்ந்தபட்ச இலக்காகச் இந்த மூட சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. 


"பெண்களுக்கு குறைவான ஊதியம், பணியிடங்களில் மோசமான முறைகளில் நடத்துதல்
பிரச்சனை ஏற்படுகையில் பெண் உடலை வைத்து தாக்குவது ....இப்படி பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், கொடுமைகள்  இனி ஒரு நாளும் அனுமதியோம் என்று ஒவ்வொரு ஆணும் ஏன்? ஒவ்வொரு பெண்ணும் கூட சபதம் எடுத்துக்கொள்ள இந்த நாளில் முன்வருவோம்.



கருணை, பாசம், இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும் ஆணிடமும் பெண்மை இருக்கிறது, பல சமயங்களில் பெண்களிடமும் ஆண்மை வெளிப்படத்தான் செய்கிறது, பெண்களில் நல்ல பெண்கள், கெட்ட பெண்கள் என்று உண்டு, ஆனால் பெண்மை என்றுமே உயர்வானது .பெண்மையை மதிப்போம் அவர்களும் நமை போல ஒரு சக உயிர் தான் .நமக்கு உள்ள எல்லா உரிமையும் அவர்களும் பெற பெண்களோடு இணைந்து போராடுவோம் .

2 கருத்துகள்: