எங்கு நோக்கினும் வரதட்சணையடா என்று இப்போது சொல்வதே பொருத்தம் என்று நான் நினைகிறேன் ,வரதட்சணை வாங்குவதும் கொடுப்தும் சட்ட படி குற்றம் என்று இந்த தேசத்தின் சட்டம் சொன்னாலும் இந்த சமூக மரமண்டைகளுக்கு ஏனோ இன்று வரை புரியவே இல்லை ,பொருளை சந்தையில் விற்பவன் கூட பொருள் கொடுத்து விட்டு பணத்தை பெற்று கொள்கிறான் .ஆனால் கல்யாண சந்தையில் பெண்ணை விற்கும் பொது பெண் உடன் பொண்ணும் பொருளும் கொடுக்கும் கேவல நிகழ்வு தொடர்ந்து நடை பெற்று வந்து கொண்டே இருக்கிறது .பணம் படைத்தவர்கள் சொல்கிறார்கள் எங்களுக்கு இருக்கிறது அதனால் கொடுக்கிறோம் என்று ,அப்படி என்றால் இல்லாத பெண்களின் பெற்றவகர்ளின் நிலை ? என்ன செய்வார்கள் அவர்கள் ?
முன்பு வரதட்சணை காரணம் காட்டி ஸ் டவ் வெடித்து பெண்கள் கொல்லபட்டார்கள் .இப்போது அந்த நிலமை இல்லை வேறு முறையில் வரதட்சணை கொடுக்க முடிய வில்லை என்றால் திருமணம் நிகழாது என்ற நிலமையை இந்த சமூகம் வகுத்து வைத்து இருக்கிறது .அப்படி திருமணம் செய்யாமல் இருந்து விடலாம் என்றால் அதற்கும் இந்த கேவல சமூகம் ஒரு போதும் சம்மதிப்பது இல்லை அப்படி திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்களை வாழ முடியாத படி செய்வதில் இந்த சமூகத்திற்கு என்ன ஒரு ஆனந்தம் ,இந்த சமூகம் ஏற்கனவே வகுத்து வைத்து இருக்கும் பல கீழ்மை சட்டம் மாற்றம் செய்ய வேண்டி குரல் கொடுக்கும் போது அங்கே வந்து நிற்கிறது சாதியும் மதமும் மத நூல்களையும் சாதி சட்டத்தையும் தூக்கி கொண்டு.தன் மகள், தங்கை ,அக்கா திருமணம் ஆக வாழ்க்கை முழுவதும் பெரும் கடனாளி ஆக ஆண்களையும் சில பெண்களையும் மாற்றி வைத்து இருக்கிறது இந்த நிகழ்வு .
வரதட்சணை கொடுக்க வேண்டாம் என்று அரசு சட்டம் போட்டு இருப்பதால் பெண்களுக்கு சொத்து உரிமைசட்டம் மூலம் சொத்துக்கான உரிமை கொடுக்க பட்டு உள்ளது ஆண் பெண் சமத்துவம் நிலை பெற வேண்டி,இதிலும் பெண்கள் திருமணம் முடியும் போது சொத்தில் பங்கு தேவை இல்லை என்று எழுதி வாங்கி போக்கு இப்போது நிகழ்கிறது .எப்படி பார்த்தாலும் சொத்து (பணம் ) ஆணின் கீழ் தான் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பெண் என்றும் தனை சார்ந்து வாழ்பவள் ஆவாள் என்று கீழ்மையான எண்ணம் மொத்த மூட சமூகத்திலும் பரவி இருப்பதே உண்மை .

சிறுவயது முதல் பள்ளிகளில் வரதட்சணை வாங்குவது கொடுப்பது தன்மானத்திற்கு எதிரானது என சொல்லி தர பட வேண்டும் , வரதட்சணை வாங்குபவரும் கொடுப்வரும் தான் தலை குனிய வேண்டும் அவமானத்தாலே ஒழிய வரதட்சணை கொடுக்காதவரும் பெறாதவரும் அல்ல ,தலை நிமிந்து நடங்கள் நாங்கள் வரதட்சணைக்கு எதிர் ஆனவர்கள் என்று
வாருங்கள் பெண் குழந்தைகள் கல்வி சொல்லி கொடுப்போம் அவர்களை சொந்த காலில் நிற்க வைப்போம் இந்த சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் சிறுவயது முதல் குடும்பம் ,பள்ளி ,பொது எடம் என எல்லா இடங்களிளும் விதைப்போம் .வரும் தலைமுறை வசந்தம் ஆகட்டும் .
Tweet | ||||
முன்பை விட வரதட்சணை குறைந்து விட்டது... முற்றிலுமாகவே மாறும் காலம் விரைவில்...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் பெண்களின் ஆழ்ந்த கல்வியால் மாறும்... மாற வேண்டும்... மாறியே தீரும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்
பதிலளிநீக்குஎனது மாவட்டத்தில் வரதட்சணை அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது உங்கள் தகவலுக்கு