இது தான் முக்கியமான தேர்வு இதில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் மேல் படிப்பு படிக்க நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதால் எல்லா பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடைசி நேர Tension உடன் காணப்படுகின்றனர் .அதற்கு ஏற்ற தயாரிப்புகள் எல்லா வீடுகளிலும் ஜோராக நடக்கிறது .
பள்ளிகளில் தயாரிப்பு பற்றி சொல்லி கொண்டே செல்லலாம்.இங்கு நாமக்கல் கோழி பண்ணை பள்ளிகள் பிரபலம் .நமது பள்ளியையும் எப்படியாவது அந்த நாமக்கல்கோழி பண்ணை பள்ளி போல் ஆக்கி விட வேண்டும் என்று முயன்று வருகின்றனர் மற்ற எல்லா பள்ளி உரிமையாளர்களும் .அதற்கு வேண்டி கோழி முப்பது நாளில் எப்படி அதிக எடை வர உணவை வாய் வழி குத்தி குத்தி அமுக்குகிறார்களோ அப்படி குழந்தைகளை மார்க் எடுக்க கொடுமை படுத்தும் போக்கு தொடர்வது வேதனை
முன்பு (2002) நான் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் போது கூட இப்படி எல்லாம் இல்லை ,எப்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து அவர்கள் பள்ளிகள் தொடங்கி மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தங்கள் பள்ளிகளில் ஈர்க்க என்ன செய்யலாம் என்று ரூம்போட்டு யோசித்து கண்டு பிடித்த காரியத்தால் வந்த வினை தான் இது ,எல்லா குழந்தைகளையும் ஒருங்கே நல்ல எடையுடன் வளரும் கோழிகள் ஆக நினைத்து குழந்தைகள் மூளையில் பாடத்தின் பதில்களை இறக்கிகொண்டிருக்கின்றனர் மிக கொடூரமாக இங்கு உண்மை என்ன என்றால் எல்லா குழந்தை சித்திக்கும் ஆற்றலும் மூளையில் பதியும் ஆற்றலும் ஓன்று அல்ல .ஓவ்வொருவரும் தனித்துவம் கையில் உள்ள பெருவிரல் ரேகை போல்
நான் இன்றய கல்வி முறை குறித்து மாணவர்களிடம் உரையாடிய போது பலருக்கு இந்த கல்வி முறை மீது துளி கூட மகிழ்வு இருந்ததாக தெரியவில்லை ,சிறை சாலை பள்ளிகள் இரண்டும் இங்கு ஓன்று தான் ,இப்படி பட்ட பள்ளிகள் அதிகம் ஆகி கொண்டு இருப்பதே வேதனை .இந்த கல்வி முறை மாற்ற பட வேண்டும் என்பதே பல மாணவ மாணவியர் கருத்து .ஆனால் அதற்கு ஒரு காலும் தொழிற்துறை சம்மதிக்காது
நாம் நினைப்போம் நாம் எல்லாம் படிப்பது நமது நலனுக்கு என்று ,உண்மையில் நாம் எல்லாம் படிப்பது பெருமுதலாளிகளின் நலனுக்கு ,அவர்களுக்கு எப்படி பட்ட வேலையாள் தேவை என்று நினைகிறார்களோ அப்படி பட்ட வேலையாட்களை (இயந்திரம்) தயாரித்து கொடுக்கும் ஒரு தொழிற்சாலை கூடம் தான் இன்றய கல்வி சாலைகள் .
பெருமுதலாளிகளின் நலனுக்கு இந்த கல்வி முறையில் பல சீர்திருத்தம் கொண்டு வர பட்டுள்ளது .குழந்ததைகள் ஒரு இயந்திரம் அவன் ஒரு மனிதன் அல்ல என்ற முறையில் பள்ளிகள் இன்று கையாளுகிறது .மதிப்பெண் எடுக்கா விட்டால் அவன் வாழ தகுதி இல்லாதவன் என்ற எண்ணத்தை சிறுவயதில் குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது ,மார்க் எடுக்க முடியாத குழந்தைகள் தற்கொலை செய்து உயிர் மாய்த்து கொள்கின்றனர் .எல்லா விளையாட்டையும் தடைசெய்து பொழுது போக்குக்கு பெரிய பூட்டு போட்டு பூட்டி அவர்களை உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படும் படி செய்து விடுகிறது ,நீதி போதனை வகுப்பு இல்லை ,விடுமுறை என்பதே இல்லை ,இப்படி பல இல்லைகள் இங்கு ,எப்போதும் படிப்பு படிப்பு என்று மொத்தமாக பள்ளியை விட்டு வெளி வரும் போது அவர்கள் ஒரு இயந்திரம் ஆக மாறியே வருகின்றனர் .
இப்படி எல்லா தவறுகளையும் கல்வி நிறுவனம் மற்றும் பெற்றவர்கள் செய்து விட்டு அறமும் ,அன்பும் இரக்கமும் இல்லை இன்றைய இளையோரிடம் என்று மீண்டும் குறை சொல்வதே வாடிக்கை ஆக போய் விட்டது ,இயந்திரத்திடம் எப்படி அன்பை ,அறத்தை சமூக சிந்தனையை ஏற்படுத்த முடியும் .நமக்கு முன் உள்ள வாய்ப்பு இரண்டில் ஓன்று தான் இப்போது குழந்தைகளை இயந்திரம் ஆக்கும் இந்த கல்வி முறையை மாற்றுவது அப்படி இல்லை இப்படியே பிள்ளைகள் சாகட்டும் என்று இருப்பது,தீர்வு நிம்மிடம் தான் ,என்னால் ஓன்று செய்ய முடியாது என்று சொல்லி விட்டு அன்பை அறத்தை சமூக சிந்தனையை இளையோரிடம் எதிர்பார்க்காதீர்கள்
Tweet | ||||
உண்மைகள்... இது போல் தொடருங்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்
பதிலளிநீக்குநிலமை மாறிவருகிறது தோழா..
பதிலளிநீக்குநான் பார்த்த வரையில் அப்படி ஒன்றும் பெரிதும் மாறியதாக தெரியவில்லை ,நிலைமை மோசம் ஆகி கொடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன் ,உங்கள் வாத படி நிலைமை மாறி வருகிறது என்பது உண்மையானால் மிகவும் மகிழ்வு .
பதிலளிநீக்குஉலகமே பொருள்சார்ந்த வாழ்க்கையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்வித் துறையும் அப்படியே இருப்பதால் வேறு என்ன மாற்றம் வரும்?
பதிலளிநீக்குகல்வி பொருள் தேட வேண்டி வடிவமைக்க பட்டுள்ளது தான் வேதனை
நீக்கு