புதன், 7 மே, 2014

கல்வி என்ன விபச்சாரமா ?

ஒவ்வொரு கல்வி சாலை திறக்கப்படும் போதும்  சிறை கதவுகள் மூட படுகின்றன என்றான் ஒரு அறிஞன் . இது எவளவு உண்மையான தேவ வார்த்தை .கல்வி சாதி இழிவை போக்கி மனித வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருகிறது என்பதும் நிதர்சனம் இங்கு  .நாம் கல்வி கற்கிறோம் என்பதன் பயனே மனித தன்மையுடன் வாழ செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் .ஒரு நாடு மதிக்கப் படுகின்றது என்றால் அதற்கு காரணம் அந்த நாட்டின் கற்றவர்களின் அளவை பொறுத்தது தான் .

நம் இன்றைய கல்வியின் நிலை என்ன ?மொத்த மக்களும் ஒரே சமமான கல்வியை தான் படிக்கிறோமா ? இங்கு தமிழ் வழி பள்ளிகளும் ,மெட்ரிக் பள்ளிகளும் ,சி பிஎஸ் ஈ பள்ளிகளும்  என்று  பல வழிகளில் கல்வி சொல்லி தர படுகிறது .முதலில் காமராஜர் காலத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சமத்துவம் வேண்டும் என்பதற்காக உடை ,செருப்பு ,மதிய உணவு என எல்லோருக்கும் சமம் ஆக வழங்க பட்டது ,ஒரே முறை கல்வியும் வழங்க பட்டது அதனால் சமத்துவமும் இருந்தது ,


இப்படி நடைபெற்ற சுதந்திர தமிழகத்தின் தொடக்க கால கல்வி அந்த சமத்துவ பாதையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பித்தது இந்தியாவில் அமல் படுத்த பட்ட தாராளம் மயமாக்கல் கொள்கைக்கு பிறகு ,ஆங்கில வழி கல்வி ஒன்றே ஒரே வழி ,அந்த வழியில் கல்வி பெறாதவர்கள் எல்லாம் வேலை பந்தயத்தில் வீழ்ந்து போவர் என்ற பிரச்சாரம் மிக வேகமாக பரப்ப பட்டது ,மக்கள் மெல்ல மெல்ல காசு சம்பாதிக்க வக்கில்லாத தாய் மொழியை படித்து என்ன பிரயோஜானம் என்று என்ன தொடங்கினர் .


இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகள் பணம் உண்டாக்க ஏற்கனவே சமூகத்தை கெடுத்த சாராயம்  காய்ச்சி விற்கும் தொழிலில் இருந்து வெளி வந்து கல்வி சாலை அமைக்கும் தொழிலில் தாங்கள் மது விற்று சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஆங்கில வழி கல்வியை உருவாக்கினர் ,தமிழ் நாட்டின் குக் கிராமத்திலும் கூட ஆங்கில வழி கல்வி சாலைகள் அமைந்தன.அதுவரை நடந்தோ அல்லது அரசு பேருந்தில் தான் கல்வி சாலை சென்று வந்தனர். ஆங்கில கல்வி சாலை ஆரம்பம் செய்த பிறகு எல்லா குக்கிராமத்திலும் பள்ளி பேருந்துகள் சென்று வர தொடங்கியது ,தினமும் சூ அணிதல் , டை கட்டுதல் ,என்று பல வெளி புற அடையாளம் மூலம் ஆங்கில கல்வி மோகம் மிக வேகமா பரவியது .

இந்த நிலையில் அரசு மெல்ல மெல்ல எல்லோருக்கும் கல்வி கொடுக்கும் தனது பொறுப்பில் இருந்து விலக தொடங்கியது .அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு செய்யாமல் இருப்பது  ,காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பது ,எல்லாவற்றிகும் மேல் பெண் குழந்தைகள் படிக்கும்  பள்ளிகளில் கூட கழிவறை கட்ட மறுப்பது மேலும் குடி தண்ணீர் அமைப்பு ஏற்படுத்ததா நிலை என்று அரசு  கல்வி சாலைநடத்தும் தனது பொறுப்பில்  இருந்து வெளியேறி கொண்டு இருந்தது .இதே நேரம் காசு இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்கில கல்விசாலை நோக்கி நடை போட தொடங்கினர் .

தமிழ் நாட்டில் எல்லோருக்கும் சம கல்வி கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு பக்கம் ,எல்லோருக்கும் இலவச கல்வி என்று மறுபக்கம் போரட்டம் இப்படி பட்ட சூழ் நிலையில் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி அமல் படுத்த பட்டது ,இரு  அரசியல் கட்சிகளின் சொந்த சண்டையால் சமசீர் கல்வி அமல் படுத்தவே பல சிக்கல் இங்கு  ,இந்த நிலையில் மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் ரூம் போட்டு யோசித்து பயனாக எல்லோரும் சி பிஎஸ் ஈ முறைக்கு மாறினார் .அதனால் தாங்கள் கல்விச்சாலை தொழில் தடை இன்றி  செழித்து வளர்ந்தது .

இப்படி பட்ட நிலையில் தான் அரசின் மிக முக்கிய பிளான் கல்வியில் இருந்து வெளியேற வகுக்க பட்டது . அது அரசின் மிக சிறந்த திட்டம் என்று விபச்சார ஊடகங்களால் முன் மொழிய பட்டது ,அது எல்லா தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய பட வேண்டும் என்ற அற்புத திட்டம் .பல்வேறு கட்ட தொடர் பேச்சுவார்த்தை பிறகு தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புகொண்டது .இதில் உச்ச காமெடி என்ன வென்றால் பல இடங்களில் 25 சதவீத பிள்ளைகள் கூட அரசு பள்ளியில் இப்போது கல்வி பெற வில்லை ,அப்படி என்றால் அரசு பள்ளிகளை பூட்ட வேண்டியது தானோ ?


இப்படி தமிழ் நாட்டில் கல்வி சென்று கொண்டு இருந்த நிலையில் இரண்டு தினம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்மைப்பு  சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் 25 கோடி அரசு கழிந்த வருடம் தர வேண்டும் அதை தரவில்லை அதனால் இந்த வருடம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெனாவெட்டாக கூறியது .மேலும் அரசுக்கும் தனியார் பள்ளி கூட்டமைப்புக்கு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தையில்  அரசு 25 கோடி தர ஒப்புகொண்டாதல் தனியார் பள்ளிகள் இந்த வருடமும் குழந்தைகளை சேர்க்கும் என்று நேற்று அறிவித்து உள்ளது அதை அரசின் வெற்றி என்று ஊடகம் நீட்டி முழக்கி வாசிக்கிறது .எவனுக்கும் வெட்கம் இல்லை இங்கு .

இந்த 25 கோடி இருந்தால் எத்தனை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு ,ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் இப்படி எத்தனை நன்மைகளை செய்ய முடியும் .ஆனால் அரசுக்கும் அதை குறித்து சிறிது கூட கவலை இல்லை ,கல்விசாலை நடத்த சொன்னால் அது அரசு வேலை இல்லை எல்லா மக்களையும் மடையர்கள் ஆக்கும் குவாட்டர் கடை நடத்துவதே அரசின் வேலை என்று அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது கல்வி விடயத்தில்  . இங்கு இருக்கும் விபச்சார ஊடகம் காசு வாங்கி கொண்டு கூவுகிறது தனியாருக்கு ஆதரவாக .


உண்மையில் எவனுக்கும் குழந்தைகளில் கல்வி குறித்த அக்கறை இல்லை ,இவர்கள் நடத்துவது விபச்சார விடுதிகள் தானே .காசு கொண்டு வந்தால் புணர்ந்து விட்டு போ என்பது மாதிரி காசு கொண்டு வந்தால் மட்டுமே படித்து விட்டு போ என்கிறது இன்றைய பள்ளிகள் .நாமும் தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வி ஒன்றே முன்னேற ஒரே வழி என்று ஆழ் மனதில் பதிந்து வைத்து இருக்கிறோம் .நீங்கள் கேட்கலாம் என்னிடம் பணம் இருக்கிறது  எனக்கு பிடித்த பள்ளியில் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் உனக்கு என்ன என்று .நீங்கள் கேட்பது உங்களை பொறுத்தவரை நியாயம் என்றாலும் ஏறி வரும் கல்வியின் விலையில் அரசு முழுவதும் வெளி வந்த பிறகு நம்மால் படிக்க வைக்க முடியா நிலையில் கல்வி கட்டண கொள்ளை வந்து நிற்கும் காசு கொடுக்க முடிய வில்லை என்றால் படிக்க வேண்டாம் என்பான் தனியார் பள்ளிகள் இன்றே பல இடங்களில் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது ,மேலும் மக்கள் திரள் மீது பல முறையில் இந்த சமத்துவம் இல்லா கல்வி மிக பெரிய பிளவை கொண்டு வரும் ,ஏற்கனவே சாதி மத பிளவில் சம படுத்த முடியா நிலையில் சென்று கொண்டு இருக்கிறோம் ,இன்னும் அதிக பிளவை தாங்கும் சக்தி இந்த மக்கள் திரளுக்கு இல்லை .இங்கு தேவை எல்லோருக்கும் ஒரே மாதரியான சமத்துவ கல்வி அதுவும் அரசே அதை இலவசமாக வழங்க வைக்க போராடுவது தான் ஒன்றே முடிவு  ,அப்படி நாம் இன்று போராட விட்டால் அடுத்த தலைமுறை கட்டண கொள்ளை தாங்க முடியாமல் ரோட்டில் இறங்கி போராடும் ,அப்போது அந்த  தலமுறை மாணவர்கள் சுட்டு வீழ்த்த படும் நடு ரோட்டில் ,உலகின் பல நாடுகளில் கட்டண கொள்ளை எதிரான மாணவர் போரட்டம் இதை தான் தெளிவு படுத்தி உள்ளது .கரம் கோர்ப்போம் ,இன்றே போரடுவோம்  நாளையை வரும் தலைமுறை கல்வி கனவு நலம் ஆகட்டும் .

திங்கள், 5 மே, 2014

சமத்துவத்தை நேசித்தவன் ................


"உலக தொழிலாளர்களே ஓன்று படுங்கள் 
நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை 
அடிமைதனத்தை தவிர 
ஆனால் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது" 

என்று கூறிய மக்களின் மேதை மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .

பிறப்பும் வாழ்கையும் 

இன்றைய ஜெர்மனியில் ஒரு பகுதியான புருசியாவின் டிரையர் நகரில்  1818 ,மே மாதம் 5ம் தேதி யூத குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் தொழில் செய்த தந்தைக்கு   மூன்றாம் பிள்ளையாக பிறந்தார் மார்க்ஸ் .தன் 17 வயதில் பள்ளி படிப்பை முடித்த மாக்ர்ஸ் சட்டம் பயில பான் பல்கலைகழகம் சென்றார் .வரலாறு ,மெய்யியல் அகிய துறைகளை பெர்லின் பல்கலைகழகத்திலும் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தை யெனா பல்கலைகழகத்தில் பெற்றார் .
1841 பட்டம் பெற்ற மார்க்ஸ் தொடக்கத்தில் இதழியல் துறையில் பணி செய்தார் .ஆனால் அவரின் தீவிர அரசியல் கருத்துகளால் பணியில் தொந்தரவு ஏற்படவே மார்க்ஸ் பாரீஸ் சென்றார் .அங்கு தான் இந்த உலகத்தின்  வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சம்பவம் ஏற்பட்டது .1844 மார்க்ஸ் ஏங்கெல்சை சந்திக்கிறார் .ஒரு தூய நட்பு அப்போது தான் துளிர் விட்டது . இந்த இருவருக்கும் ஆன நட்பே மூலதனம் மற்றும் கம்னியுஸ்ட் அறிக்கை போன்ற வரலாற்றின் போக்கை மாற்றிய நூல்கள் ஏற்பட காரணம் காரணம் ,அந்த தூய நட்பு மார்க்சின் மரணம் வரை அவரை காப்பாற்றவும் செய்தது .

பெர்லின் பல்கலைகழகத்தில் ஆய்வு மாணவர்கள் என்ற சங்கம் நிறுவி வரலாறு மற்றும் பொருளாதர வாதம் பற்றி விவாதம் செய்து வந்தார் மார்க்ஸ் .முதல் நாள் கேட்கபடும் கேள்விக்கு அடுத்த நாள் பதில் தருவார் அவர் பதிலால் எதிர்த்தவர்கள் வாயடைத்து போவர் .படித்து களைத்து உறங்கா விழிகள் ,வாரப்படாத கேசம் ,தாடியை நீவி கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது ,பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது என்று அவரை பற்றி பல்கலைகழகமே பேச வைத்தது.


காதல் என்னும் அற்புத சக்தி 

லூத்விகான்  வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடி பிரமுகர் ,அவர் குடும்பமும் மார்கஸ் குடும்பமும் நட்புடன் பழகி வந்தனர் .அந்த உயர் குடியில் தோன்றிய தங்க மங்கையே ஜென்னி .மார்கஸ் கண்கள் மட்டுமன்று  கேசம், தோல் எல்லாமே கருப்பு நிறம் ஜெர்மானியர் வெருப்புடன் நோக்கும் யூத இனம் வேறு ஆனால் ஜென்னி ரைன் லாந்தின் மிக சிறந்த அழகி பிரபுக்கள் வம்சம் . இவ்விருவரையும் வாழ்வில் இணைத்தது சேக்ஸ்பியர் கவிதைகளே .மார்க்ஸ் எல்லா சேக்ஸ்பியரின் கவிதைகளை மனனம் செய்தவர் . ஜென்னியின் தந்தையும் மார்க்சும் சேக்ஸ்பியரின் கவிதைகளை பற்றி எப்போதும் வியந்து பேசுவர் .இதனால் ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும் .அப்படி கவிதை மார்க்சிடம் இருந்து வீறு கொண்டு எழும் அந்த நிலையில் தான் ஜென்னிக்கு மார்க்ஸ் மீது காதல் அரும்பியது .ஜென்னி அகங்காரம் அற்ற அறிவும் தன்னலம் அற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவம் ஆணின் அழகு என்று எண்ணி இருந்தார் அந்த அழகு மார்க்சிடம் நிறைந்து இருந்தது .இவர்கள் காதல் திருமணத்தில் கை கூட எட்டு வருடம் காத்து இருக்க வேண்டி வந்தது .தன் காதல் தேவதை குறித்து மார்க்ஸ் உலகின் மிக சிறந்த பூ ஓன்று இருக்கும் ஆனால் அது கூட தோற்று போய் விடும் அவள் முன்னால் மேலும் ஒரு எரிமலையின் இதயத்தில் வடா மலர் போன்றவள் ஜென்னி என்றார் .,அப்படி பட்ட பெண் தன் வாழ்வில் வர வேண்டும் என்ற எண்ணம் தன அவர் டாக்டர் பட்டம் பெற மூல காரணம் .




என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல அவனை மறந்து விடு என்று மார்க்ஸ் பெற்றோர் கூறிய வார்த்தைகள் ஜென்னியை துன்பத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில் மார்க்ஸின் காதல் கடிதம் ஜென்னியை அடைந்தது அதை தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள் கண்ணில் நீர் ததும்பியதால் எழுத்துகள் மங்கலாக தெரிந்தது ,கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்தது அதற்கு காரணம் ஆன அற்புத வரிகள் "இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி ,ஜென்னி என்றால் காதல் "

தொழில் 

 பட்ட படிப்பை முடித்து ரைன் கெஜட் பத்திரிக்கை  வேலைக்கு சேர்ந்த பத்து மாதத்தில் அதன் ஆசிரியர் ஆக பொறுப்பு ஏற்றுகொண்டார் .மார்க்ஸ் எழுத்துகள் ஜெர்மானியர் மத்தியில் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சின,பத்திரிக்கை வியாபாரம் எகிற ஆரம்பித்தது .  மார்க்ஸ் இடதுசாரி சிந்தனை படைத்வர் ஆக மாறி கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் தந்தை அவரை குறித்து கவலை கொண்டு இருந்தார் . 1840ல் தத்துவ ஞனி கெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்து கொண்டார் .அவர்களில் மார்க்சின் கருத்துக்கு ஆதரவு கிட்டியது .கிறிஸ்தவ மதம் அறநெறி அற்றது .மனிதனுக்கு விரோதம் ஆன சக்திகள் மனிதனை ஆளுகின்ற மனித தன்மை அற்ற உலகத்தில் உண்டாக்க பட்டதே மதம் என்றார் மார்க்ஸ் .

மோசஸ் கோஸ் என்பவர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் ,அவர் மிகவும் இளம் வயதுகாரர் .அவர் மத்திய கால தத்துவ ஞானத்திற்கு இறுதி அடி கொடுப்பார்.கூர்மையான நகைச்சுவை உணர்வை ஆழமான தத்துவசெறிவுடன் இணைக்கிறார் .ரூசோ ,வால்டேர் ,கோல்பார்க் ,லஸ்லிங்க் ,கெய்னே ,ஆகியோரின் இணைந்த வடிவமே மார்க்ஸ் .மோசஸ் ஏசு நாதர் வருவார் என்று முன் கூட்டி சொன்னது போல் கம்யூனிசப் புரட்சி வர போகிறது என்று முன் கூட்டி சொன்னவர் தான் மார்க்ஸ் என்று எழுதி உள்ளார் . 

புரட்சி 

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் ஒரே வர்க்கம் சேர்ந்தவனே ,அவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்தால் அனைத்து தொழிலாளர் வாழ்வில் மகிழ்வு கிட்டும் என்று கூறியதோடு அல்லாமல் அவர்களை எல்லாம் ஓன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் .அதை பற்றி எழுத அவர் தொடங்கிய பத்திரிக்கை பெயர் "முன்னேற்றம்" அதனால் அந்த பத்திரிக்கை தடையும் செய்ய பட்டது .இதனால் அவர் நாடு கடத்த பட்டார்,அவருக்கு ஒரே வாய்ப்பு அளிக்க பட்டது ,அது மன்னிப்பு கேட்பது ,ஆனால் மார்க்ஸ் அதை செய்ய வில்லை , 

சில நாட்களுக்கு பின் மார்க்ஸ் பெல்ஜியதில் குடியேறினர் அதனால் அந்த அரசு நடுங்க ஆரம்பித்தது  அப்போது மார்க்ஸ் வயது 27 தான் அந்த இளையவரை பார்த்து ஒரு நாடு நடுங்கியது என்றால்   அவரின் எழுத்து சிந்தனை எத்தனை வீரம் உடையது .நீங்கள் பேனாவை தொட்டால் சிறையில் தள்ள படுவீர் என்று எச்சரிக்கை செய்தது அரசு .அந்த நிலமையில் மார்க்சும் எங்கல்சும் இணைந்து பொதுவுடைமை சங்கத்தை உருவாக்கினர் ,இதில் இருந்த தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொண்டனர் . 

லண்டன் மாநகரில் பிரமாண்டம் ஆன முதல் கம்யூனிஸ்டு சங்கம் உருவானது ,தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உற்சாகம் அடைந்தது ,மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரும் மக்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தனர் . 1848 பிப்ரவரி 24 பாரிஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது .மன்னன் லூயி பிலிப் தப்பி ஓடினார் .அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் 
நாட்டு மன்னன் தன் பாதுகாப்பை பல படுத்தி மார்க்சையும் ஜென்னியையும் சிறையில் அடைத்தான் .ஜென்னியை அந்த நாட்டின் தேக விற்பனை செய்யும் பெண் கைதிகளுடன் அடைத்தான் ,அந்த இரவு ஜென்னிக்கு நரகம் ஆக இருந்தது  ,பலமுறை பிரான்சு ,ஜெர்மனி ,இத்தாலி என்று நாடு கடத்த படும் பொது மார்க்ஸ் உதிர்த்த வார்த்தைகள் 

"எல்லா நாடும் என் நாடே 
எல்லா மக்களும் என் மக்கள் 
நானோர் உலக மகன் "

வாழ்வின் சோதனை காலம் 

உலகின் எல்லா மக்களையும் நேசித்ததால் தானே என்னவோ வாழ்கை முழுவதும் சோதனையில் உழன்றார் மார்க்ஸ். வரலாற்று பாதையில் ஜென்னி என்றாவது ஒரு நாள் ஒரு அடி மாறி இருந்தாலும் வரலாறு திசை மாறி இருக்கும்,ஆனால் ஜென்னி தான் நேசித்த பெருமகனின் எண்ணம் ஈடேற தன் வாழ்கையை தந்தார் .பசி அவர் வீட்டில் எல்லோரையும் பிடுங்கி தின்றது .ஜென்னியின் மார்பில் பால் சுரக்காமல் நிற்க தொடங்கியது ,தாய் உண்டால் தானே பிள்ளைகளுக்கு பால் கிடைக்கும் ,ஜென்னியின் மார்பகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்தது,அப்போது ஓயதா அழுகை சத்தம் தான் மார்க்ஸ் ஜென்னியின் வீட்டில் எல்லாம் சக மனிதனை நேசிப்பதற்கு கிடைத்த பரிசு .   

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை கடன் கொடுத்தவர் ஜென்னியின் வீட்டில் இருந்து எல்லா பொருளையும் எடுத்து சென்றனர் அதோடு மூன்று பிள்ளைகளும்  மடிந்தனர் பசியால் .அப்போது ஜென்னி கூறிய வார்த்தை  என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை இறக்கும் போது சவப்பெட்டி வாங்க காசு இல்லை

இப்படி பட்ட காலத்தில் தான் மார்க்ஸ் உலக பொருளாதரம் பற்றி பல தொடர் கட்டுரை எழுதி வந்தார் .1867 செப்டம்பர் 14 மார்க்ஸ் எண்ணும் மண்ணின் மைந்தனின் எழுத்தில் அவன் உழைப்பின்  தியாகத்தில் உருவான மூலதனம் என்ற நூல் புத்தகம் ஆக வெளி வந்தது .அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் ஏங்கெல்சால் கொண்டு வர பட்டது.இன்றும் உலகத்தின் தலைசிறந்த புத்தகத்தில் ஒன்று மூலதனம் ஆகும் .

மூல தனம் நூலின் தேவை :

நமக்கு ஒரு பென்சில் தேவை அதை நாமே சுயமாக உற்பத்தி  செய்ய நீண்ட நேரம் கடின உழைப்பும் தேவை ஆனால் இந்த தொல்லை இல்லாமல் ஒரு விலை கொடுத்து அந்த பென்சிலை கடையில் இருந்து வாங்கி கொள்கிறோம் .நாம் அந்த பென்சிலை வாங்க வில்லை அந்த பென்சிலை தாயரிக்க பயன் படும் உழைப்பிற்க்கு  விலையை கொடுக்கிறோம் .அனால் அந்த பணம் உழைப்பை கொடுத்த தொழிலாளிக்கு கொடுக்க படவில்லை முதல் போட்டதால் முதலாளி மற்றும் வாங்கி விற்கும் வியாபரிக்கு அதன் பலன் கிடைக்கிறது .ஆனால் உழைப்பவன் தன்னை சுரண்டி கொழுக்கும் முதலாளியை கடவுள் என்று எண்ணுகிறான் .ஆனால் வியாபர போட்டியில் முதலாளி பென்சில் விலை குறைபதால் ஏற்படும் நஷ்டம் மீண்டும் தொழிலாளி மீது சுமத்தி மேலும் மேலும் அழுத்துகிறான் .இதை தான் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உலக தொழிலாளர் அனைவரும் ஓன்று பட வேண்டியதன்  அவசியத்தை  தனது நூலின் மூலம்  உலகுக்கு எடுத்துஉரைத்தார் .

இறுதி காலம் 

புகை பிடிப்பதும் பால் கலக்காத காபி குடிப்பதும் மாலை நேர நடை பயிற்சி இவை தான் மார்க்சிற்க்கு  பிடித்த விடயம்.பிச்சை போடாமல் பசியோடு உள்ளவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மனிதர் அவர் .

1881 டிசம்பர் மாதம் ஜென்னி என்ற அற்புத மலர் காலம் எல்லாம் இந்த மண்ணின் மக்களுக்கு வேண்டி சிந்தித்த மார்க்சை தாங்கிய  அந்த பெரும் நெருப்பு அணைந்தது .1883 மார்ச் 14 ல் 
தன் 61 வயதில் மக்களுக்காக எந்நாளும் வாழ்ந்த சிந்தித்த மார்க்ஸ் என்னும் மனிதர்களின் இதயம் தனது மூச்சை தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த படி தன் தந்தை ,மனைவி மற்றும் மகள்களின் புகை படத்தை கையில் வைத்து கொண்டு இந்த உலகத்தை விட்டு அகன்றது .

அவர் 

"யூதனாக பிறந்தார் 

கிறிஸ்தவன்  ஆக வாழ்த்தார் 

மனிதன் ஆக இறந்தார் 

காலங்கள் தோறும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் "



புதன், 23 ஏப்ரல், 2014

மாற்றத்தின் திறவுகோல்


இன்று உலக புத்தக தினம். ஏழை விவசாய தொழிலாளி மகன் ஆக பிறந்த சேக்சுபியர் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணம் ஆக  முறையான கல்வி கற்க முடியாமல் பள்ளியில் இருந்து நிறுத்த பட்டார் .ஆனால்  அவர் தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்துக்கு கொடுத்துள்ளார் .இது மிக பெரும் சாதனை  அவரின் இயற்கை எய்த நாள் ஆனா 23 ஏப்ரல் உலக புத்தக தினம் ஆக கொண்டாடபடுகிறது 



மனிதனின் ஆக சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான் ,வரலாற்றை மாற்றியதில் புத்தகங்களுக்கு இருக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியா .ஒரு நல்ல புத்தகம் மிக சிறந்த நண்பன் .மிக கடினமான நேரங்களில் நமது மனதை சரி படுத்த புத்கம் வாசிப்பது மிக சிரப்பானது.நாம் வாழும் இந்த வாழ்கையில் சக மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ,சக மனிதனை நேசிக்க நமது வாழ்வை சரி படுத்த புத்தக வாசிப்பு மிக முக்கியம். 

ஒரு புத்தகத்தை நாம் வாசிக்கும் போது நமது கற்பனை வளம் கூடி நம் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது .நமக்கு புதிய அனுபவம் ஓவ்வொரு புத்தகம் படிக்கும் போதும் ஏற்படுகிறது .புத்தகம் இல்லாமல் என்னால் வாழவே முடியா .மிக சிக்கலான தருணங்களில் உற்ற தோழர் போல் உடன் வந்துள்ளது .கண் இருப்பதே புத்தகம் படிக்க தானே .


இதுவரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் இனியாவது தொடங்கலாம் தோழமைகளே .அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்று இன்றே புத்தகம் வாங்கி வாசிக்கும் பழக்கம் ஆரம்பியுங்கள் .புத்தகத்தையும் காற்றை போல் சுவாசிப்போம் .


உலகை மாற்றிய  அறிவாளிகளின்  புத்தகம் மீதான காதல் :

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகம் அருகில் உள்ளதோ அங்கே என்றாறாம் 
                                                     .டாக்டர் அம்பேத்கர் 

நான் ஒரு போராளி உடன் பேசி கொண்டு இருக்கிறேன் முடித்து விட்டு வருகிறேன் அதன் பின் தூக்கில் இடுங்கள் என்றார் .
                                                         பகத்சிங்  

ஓவ்வொரு படம் நடிக்கும் முன் நூறு டாலருக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவர் 
                                                       சார்லி சாப்ளின் 

எங்கே நல்ல புத்தகம் எரிக்க படுகிறதோ அங்கே விரைவில் மனிதர்களும்  எரிக்க படுவர்  என்றார் 
                                                       சேகுவேரா 

ஒரு புத்தகம் திறக்க படும் போது உலகை நோக்கிய சன்லை திறக்கிறோம் என்றார் 

                                                   சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 

உலகின் தலைசிறந்த புத்தகத்தை உங்களிடம் இருந்து திருடி செல்பவர் உங்கள் நண்பர்கள் தான் என்றார் 
                                                 வால்டேர் 

ஒரு கோடி கிடைத்தால் நூலகம் அமைப்பேன் என்றார் 
                                                 காந்தி 

தனிமை தீவில் தள்ள பட்டால் புத்தகம் உடன் மகிழ்வாக காலம் கழிப்பேன் என்றார் 
                                                 நேரு 

இங்கு ஒரு புத்தக புழு உறங்குகிறது என்று தனது கல்லறையில் எழுத சொன்னவர் 
                                       பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் ஆக சிறந்த கண்டு பிடிப்பு புத்கம்  என்றார் 
                                   ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  

பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுங்கள் என்றார் 
                                  பெரியார் 

உண்ணாவிரதம் இருந்து சிறையில் புத்தகம் வாசிக்கும் அனுமதி பெற்றவர் 
                                  நெல்சன் மண்டேலா 

புத்தகமே பயங்கர போரட்ட ஆயுதம் என்றார் 
                               மார்டின் லூதர்கிங் 

புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளியில் தேடுங்கள் என்றார் 
                                     எங்கெல்ஸ் 

ஒரு நாட்டின் சந்ததியினர் தேடி அடைய வேண்டிய செல்வம் புத்தகம் 
                                 கென்றி தோரா 



வாழ்வோம் புத்தகங்கள் உடன் மகிழ்வாக 

வியாழன், 17 ஏப்ரல், 2014

மதமும் இந்த தேசத்தின் மக்களும்



இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பில் செயல் படும் டீஸ்டா  செடல்வாட் அவர்களின் நேர்காணல் படித்தேன் .இந்த தேசத்தில் மத கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வில்லை இதுவரை என்று வேதனை உடன் குறுப்பிட்டு இருந்தார் ,மனிதத்தின் ஆதரசுருதியான நீதியை காக்கும் முயற்சியில் தொடந்து பாடு பட்டு வருகிறார் .மத அடிப்படைவாதிகளிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது ,இருப்பினும் சமூக அமைதி மற்றும் நீதிகான போரட்டம் தொடர்ந்து  நடத்தி கொண்டு வருகிறார் .


இந்த தேசத்தின் முதல் மத கலவரத்தை ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என்று பிரித்து ஆரம்பித்து வைத்தனர் .அந்த கலவரத்தில் கொல்ல பட்ட மக்கள் எராளம் .வன்புணர பட்டு வீச பட்ட பெண்களும் ரயிலில் கொன்று அனுப்ப பட்ட மக்களும் ஏரளாம். வன் புணரபட்ட பெண்களை ஏற்று கொள்ள கூட இந்த சமூகம்  தயார் இல்லை.பெண்கள் கதரும் போதும் துடிக்க துடிக்க வெட்ட படும் போதும் கதறிய கதறல் மட்டும் இந்த உலகத்தை படைத்தான் என்று இந்த தேசத்தின் மிக பெரும்பான்மை மக்கள் நம்பும் செவிட்டு கடவுளுக்கு கேட்கவே இல்லை அது ஏன் என்று தெரியவுமில்லை கல்லுக்கும் இல்லாத ஒருவனுக்கும் எப்படி கேட்கும் ? இந்த தேசத்தின் தந்தை என்று போற்ற படும் காந்தி நான் ஒரு இந்து ,நான் ஒரு முஸ்லிம் ,நான் ஒரு கிறிஸ்தவன் ,நான் ஒரு சீக் நான் எல்லா மதமும் ஆனவன் என்று சொன்னார் ,ஏன் என்றால் அவர் எல்லா மத நூல்களையும் அறிவுபெருமக்கள் மதம் குறித்து எழுதிய பல்வேறு நூல்களை உள்வாங்கி படித்து இருந்தார் ,அவருக்கு முன்னும் பின்னும் இந்த தேசத்தில் எவருமே எல்லா மதமும் எனக்கு ஒன்றே என்று எண்ணியதில்லை ,செயல்பட்டதில்லை .காந்தி மதம் அரசியலில் ஒரு காலம் கலக்க கூடாது மதம் என்பது தனி மனித விடயம் ,நான் சர்வாதிகாரி ஆக இருந்தால் இரண்டுக்கும் இடையே கோடு கிழித்து பிரித்து வைப்பேன் என்றார் ,காந்திக்கு தெரியவில்லை இந்த தேசம் மதவெறியர்களின் தேசம் என்று .அந்த மத வெறிக்கே அவர் உயிரும் பறிக்க பட்டது என்பதே வரலாறு .

அதற்கு பின்னும் மத கலவரம் இன்று வரை நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது ,ஆனாலும் மக்களில்  மத அடிப்படை வாதிகள் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறார்கள் .சில கலவரம் பட்டியல் 
  • குஜராத் வன்முறை 2002
  • கோத்ரா தொடருந்து எரிப்பு 
  • பாபர் மசூதி இடிப்பு 
  • பாகல்பூர் கலவரம் 
  • முசாபர் நகர் கலவரம் 
  • மொராதபாத் கலவரம் 
  • மும்பாய் கலவரம் 
  • மண்டைகாடு கலவரம்  இன்னும் பல 

இன்று வரை நடந்த எந்த கலவரத்திலும் குற்ற செய்தவர்கள் தண்டிக்க பட வில்லை .சுதந்திரம் பெற்ற பிறகு கலவரம் மூலம்  அதிக உயிர்  இழப்பு ஏற்படுத்திய ஆண்டும் இடமும் ஆட்சி செய்தவர்களும்   


எண்வருடம்இடம்உயிரிழப்புஆண்ட கட்சிமுதலமைச்சர்
11967ஹாதியா ராஞ்சி183ஜன கிராந்தி தளம்எம்.பி.சின்ஹா
21969அகமதாபாத்512காங்கிரஸ்ஹிதேந்திரகே தேசாய்
31970ஜல் காவ்100காங்கிரஸ்வசந்தராவ் நாயக்
41979ஜம்ஷேட்பூர்120ஜனதா கட்சிகர்பூரி தாகூர்
51980மொராதாபாத்1500காங்கிரஸ்வி.பி.சிங்.
61983நெலே, அஸ்ஸாம்1819ஜனாதிபதி ஆட்சி
71984பிவந்தி146காங்கிரஸ்வசந்ததா பட்டில்
81984டில்லி2733காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்)-
91985அகமதாபாத்300காங்கிரஸ்எம்.எஸ்.சோலன்கி
101989பகல்பூர்1161காங்கிரஸ்எஸ்.என்.சிங்
111990டில்லி100யூனியன் பிரதேசம்
121990ஹைதராபாத்365காங்கிரஸ்சென்னா ரெட்டி
131990அலிகர்150ஜனதாதளம்முலாயம் சிங்
141992சூரத்152காங் + ஜனதா தளம்சிமன்பாய் படேல்
151992கான்பூர்254ஜனாதிபதி ஆட்சி
161992போபால்143ஜனாதிபதி ஆட்சி
171993மும்பை872காங்கிரஸ்சுதாகர் ராவ் நாயக்
182002குஜராத்1267பி.ஜே.பி.நரேந்திர மோடி



மன்னித்து கொள்ளுங்கள் ,நான் பேரரசன் ஆக விரும்பவில்லை அது என் வேலை அல்ல நான் யாரையும் ஆளவோ வெற்றி கொள்ளவே விரும்ப வில்லை முடிந்தால் அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறேன்,யூதர் கருப்பினத்தவர்,வெள்ளையினத்தவர் உதவவே விரும்புகிறேன் . நநாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் நாம் மனிதர்கள் ,இங்கு ஒருவர் அடுத்தவர் மகிழ்ச்சியை ஆதாரம் ஆக கொண்டு தான் வாழ வேண்டும் துன்பத்தை ஆதாரம் ஆக கொண்டு அல்ல .நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியது இல்லை ,இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது என்றார் சக மனிதன் மனிதம் மீதான அன்பை காலம் எல்லாம் தன் படைப்பு வழி சொன்ன சார்லி சாப்ளின் .

ஆனால் நாம் எல்லோரும் நமது மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை ,எனது இறைவன் ஏக இறைவன் .எனது மார்க்கம் மட்டுமே உண்மையான மதம் /மார்கம் என்று எண்ணி கொண்டு தான் வாழ்கிறோம் ,என்ன ஓன்று அடிப்டை வாதிகள் தாங்கள் இறைவன் தான் உண்மையானவன் என்று மத கலவரம் மூலம் அடிக்கடி நிருபிக்கின்றனர்.அனால் சாதரண மனிதர்கள் என்று சொல்ல படுவோர் அதை நிருபிக்க வில்லை ,ஆனாலும் தங்கள் மதம் உண்மை இல்லை என்பதை எந்த மத மக்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . மனிதன் உண்டாக்கிய மதம் மனிதனை பிரித்து வைக்கவே பயன்படுகிறது ,உன்னையும் என்னையும்  இந்து ,கிறிஸ்தவன் ,முஸ்லீம் ,சீக் ,புத்தம் என்று பிரித்து வைத்தது இந்த மத அமைப்பு தானே ,இன்று வரை எனறாவது நாம் கேள்வி கேட்டு இருக்கிறோமா ? மனிதர்கள் ஆக அடையாள படுத்த பட வேண்டிய நாம்  நாம் ஏன்மதங்களால் பிரிந்து அடையாள படுத்த படுகிறோம் என்று .

இங்கு எல்லோருக்கும் இல்லாத ஒருவன் தேவை பட்டு கொண்டு இருக்கிறான் மனிதம் இருந்து விட்டால் இல்லாத ஒருவன் துணை நமக்கு தேவை இல்லை ,நமது எல்லா நேரத்திலும் உடன் வர சக மனிதம் உள்ள மனிதன் இருப்பான் ,ஆனால் இங்கு அப்படி இல்லையே ,யார் கடவுள் உண்மையானவன் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது ,மத அடிப்படை நாடுகள் அமைய வேண்டும் என்ற குரல் தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர  மனிதம் அடிப்படையான நாடுகள் அமைப்போம் என்று குரல் ஒலிக்கவில்லை இங்கு .


இங்கு எல்லா மதமும் ஓன்று தான் என்று சொல்ல பட்டாலும் அது உண்மை இல்லை ,மிக சிறந்த உதாரணம் திருமணம் ,ஆணும் பெண்ணும் இயல்பாக இணையும் நிகழ்வு ,இந்த நிகழ்வில் வேறு வேறு மதம் சார்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒருவர் ஆவது அடுத்தவர் மதத்திற்கு மதம் மாறி தான் திருமணம் செய்ய முடியும் .அது கூட சுலபம் இல்லை ,எப்படி சாதி தூய்மை எல்லா சாதி மக்கள் கலப்பு மூலம் கெட்டு விடும் என்று எண்ணும் சாதி வெறியர்கள் போல தான் மத வெறியர்களும் மத தூய்மை கெட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருகின்றனர் .இதற்கு விதி விலக்காக சில குடும்பங்கள் மொத்த தேசத்திலும் இருக்கலாம் மீதி உள்ள அத்தனை மத நம்பிக்கை ஆளர்களும் மதம் இல்லாமல் போய் விட கூடாது என்றும் அதனால் மனங்கள் இணைய கூடாது  என்று அரிவாள் உடன் இடையே நிற்கின்றனர் ,எப்படி சாதி எதிர்த்து மணம் புரிவோர் சாதி வெறியர்களால் கொல்லபடுகிறார்களோ அது போல மதம் எதிர்த்து மணம் செய்வோரும் கொல்ல படுகின்றனர் .



எல்லா மத கலவரத்திலும் ஆண் என்பவன் தனது ஆண்மையை  பெண்களை வன்புணர்வு செய்வதன் மூலம் தொடந்து நிரூபிக்க பட்டு கொண்டே வருகிறான் ,பெண்களை வன்புணர்வு செய்வது ஆண்மையா ?மத கலவரம் மூலம் அதிகம் பாதிக்க படுவது சாதரண மக்களும் பெண்களும் தான் .ஆனால் மதம் உடன் அதிகம் பிணைக்க பட்டுள்ளதும் சாதரண மக்களும் பெண்களும் தான்.அவர்கள் முடிவு இல்லாமல் இருக்கிறான் என்று தொடந்து வழிபடும் சர்வ வல்லமை நிறைந்த இறைவன் அவர்கள் கதறும் போது எங்கு போய் இருப்பான் என்று தான் இன்றுவரை தெரியவில்லை .இறைவனை காண வில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும் .ஆனாலும் மக்கள் இன்றுவரை ஓன்றும் செயல்படாமல் கல்லாய் உருவம் இல்லாதவனாய் இருப்பவனை  விட்டுவிட தயார் இல்லை ,மதம் இல்லாமல் ஆக்க யாரும் தயார் இல்லை ,மதம் இறைவன் இருப்பதால் தானே மத கலவரம் நடக்கிறது .மதம் இருக்கும் வரை மதத்தினால் கலவரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் .பெண்களும் சாதரண மக்களும் கொடுமை படுத்த பட்டு கொண்டு தான் இருப்பார் .....மதத்திற்கு முடிவு இல்லை என்றல் மத கலவரத்திற்கும்  முடிவு இல்லை 

மதம் இல்லா உலகு மனிதம் சூழ் உலகு அழகானது ..........................


செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வானம் வசப்படட்டும்



இன்று வாழ்வின் சக தோழிகள் ஆன திருநங்கைகள் தினம் .

பெயர்காரணம்: 

திருநங்கை என்று அழைக்க படும் தோழிகள் பிறப்பால் ஆண் என்று அடையாள படுத்த பட்டு பின் தன்னை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவரை குறிக்கும் சொல்லாக இன்று பயன் படுகிறது .

திருநங்கைகள் தினம் தொடங்கிய விதம்: 

உலகம் முழுவதும் சமத்துவம் ,விடுதலை ,சகோதரத்துவம் வேண்டி பல்வேறு விழாக்கள் கொண்டாட படுகிறது ,அப்படி திருங்கைகளின் சமத்துவம் சம உரிமை ,சம வாய்ப்பு இவை போல  மற்றும் பல உரிமை வேண்டி 2008ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்க பட்டது தமிழ்நாட்டில்.ஏப்ரல் 15ம் தேதி ,அதே  தினத்தை தமிழக அரசு அரசாணை மூலம் 2011ம் அண்டு முதல் திருநங்கை தினம் ஆக அறிவித்தது .அன்று முதல் தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம் கடை பிடிக்க படுகிறது .



சமூக நோக்கில் திருநங்கைகள் : 

இன்றைய காலத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு அளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை என்றாலும் மிக அதிக இடங்களில் இன்னும் திருநங்கைகள் 
கேவல படுத்தபட்டு ஒடுக்க பட்டே வருகின்றனர் என்பது கண்கூடு.திருங்கைகள் குறித்த புரிதல் நமது வீடுகளில் இருந்து தொடங்கி ஆக வேண்டும் ,வீடுகள் முதலில் ஏற்றால் தான் சமூகம் ஏற்க்கும் .ஆனால் மிக பெரும்பான்மையாக குடும்பங்கள் நிராகரிக்கின்றன்ர்  .அதனால் பெற்றவர் உறவினர் பிரிந்து கண்ணீர் விடும் திருநங்கைகள் இன்று ஏராளம். குடும்ப அரவணைப்பு அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்யும், இதனால்  திருநங்கைகள் தங்கள் வாழ்வில் சிறந்த இடம் அடைய முயற்சித்து வெற்றி பெறுவர்.பெற்றவருக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே .அந்த எண்ணம் எல்லா பெற்றவர்களிடம் வந்தாக வேண்டும் .உறவுகளும் மதிக்க வேண்டும் .

முழு சமூக அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையிலும் கலைத்துறை ,எழுத்து துறை ,ஊடகம் மற்றும் சமூக பணி ,சொந்த தொழில் செய்து வந்தாலும் பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் அல்லது கடை கேட்டல் என்னும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதே இன்று காண கிடைப்பது. பாலியல் அடையாள சிக்கல் காரணம் ஆக இவர்களுக்கு எந்த ஒரு சமூக நீதியும் இங்கு நடப்பாக்கவில்லை இந்த தேசம் .இப்படி செய்து விட்டு இந்த சமூகம் திருநங்கைகளை குறை வேறு சொல்கிறது ,தவறை தன் மேல் வைத்து கொண்டு தான் ஒடுக்கும் இனத்தின் மீது தவறை சமைக்கும் கேவல எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த பாலின ஒடுக்குமுறை .



இனி செய்ய வேண்டியவை:

 நெடும் காலமாக புறக்கணிக்க பட்டு வந்த சமூகம் ஆன திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தார வேண்டும்,அது போல் தனியார் துறையிலும் திருநங்கைகள் பணிவாய்ப்பு அளிக்க பட வேண்டும் ,வேலை செய்யும் இடங்களில் பாலின வேற்றுமை களைய பட வேண்டும் இது தான் முக்கியம் திருநங்கைகள் வாழ்வை முன்னேற்றம் 
செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் .  பல்வேறு வெளிநாட்டு நிறுவனம் பல நாடுகளில் திருநங்கைகளை பணி வாய்ப்பு வழங்கி இருக்கிறது,இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் .




ஊடகம் எப்போதும் திருநங்கைகளை மிக கேவலமாக சித்தரிப்பு செய்தே வருகிறது ,பெண்களை போக பொருள் போல் சித்தரிப்பு செய்யும் ஊடகம் திருங்கைகளை கேவலமாக சித்தரிப்பு செய்வதில் வியப்பு இல்லை என்றாலும் சமத்துவம் வேண்டி போராடும் எல்லோரும் இவ்விடயத்தில் ஒன்றாக வேண்டியதும்  எதிர்க்க வேண்டியதும் அவசியம் . 

இதுவரை கனடா நாட்டில் மட்டுமே திருநங்கைகள் எல்லா உரிமையும் பெற்று சமத்துவ வாழ்க்கை வாழுகின்றனர் ,அந்த நிலமை நமது தேசத்தில் வர உறுதி எடுக்க பட வேண்டும் .




என் தெரிந்த அளவில் சமூக போரட்டம் செய்யும் திருநங்கைகள் 

1.கல்கி சுபிரமணியன் 

சகோதரி அமைப்பின் நிறுவனர் .தன் வாழ்வை போராட்டத்தை லிவிங் ஸ்மைல் வித்யா என்ற நூல் மூலம் சமூகத்துக்கு சொன்ன எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்,நடிகை ,திருநங்கைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு பதிவு செய்தவரில் ஒருவர்  .சமூக போராளி 

2.ரோஸ் வெங்கடேசன் 

விஜய் தொலைகாட்சி இப்படிக்கு ரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் ,பாப் ஆல்பமும் வெளியிட்டு உள்ளார் .

3.ரேவதி 

மிக சிறந்த எழுத்தாளர் ,திருங்கைகளை பற்றி உணர்வும் உருவகமும் என்ற நூலை எழுதி உள்ளார் .சமூக போராளி 

4.பிரியா பாபு 

கண்ணாடி அமைப்பின் நிறுவனர் மற்றும் மிக சிறந்த சமூக போராளி 

5.நர்த்தகி நடராஜ் 

பிரபல பரத நாட்டிய கலைஞர்,முதல் பெண் என்று  இந்திய கடவு சீட்டு பெற்ற முதல் நபர் .பல்வேறு விருதுகளுக்கு சொந்தகாரர் .   

6.பாரதி கண்ணம்மா 

தனது பாரதி கண்ணம்மா அமைப்பு மூலம் திருநங்கைகள் பொருளாதரம் உயர வேண்டி போராடும் சமூக போராளி ,மதுரையின் சுயேட்சை வேட்பாளர் (எம் பி ஏலக்சன் )

7.சுவப்னா கார்த்திக் 

அருமை தங்கை மிக சிறந்த சமூக போராளி,மதுரையின் எல்லா மக்கள் நல போராட்டத்திலும் உடன் நிற்கும் சகோதரி .தேர்வு எழுதும் உரிமையை போராடி பெற்று முதல் வகுப்பில் தேர்வு செய்ய பட்ட அன்பு தங்கை ,மாவட்ட ஆட்சியர் ஆவர் என்று எதிர்பார்க்க படுகிறவள் .

சமத்துவம் வேண்டி நாம் திருநங்கைகள் உடன் நிற்போம் ,சமத்துவம் படைப்போம் ,இந்நாள் அதை நமக்கு சொல்லவே ஏற்படுத்த பட்ட பொன்நாள் . 

சனி, 12 ஏப்ரல், 2014

வரலாறை உருவாக்கியவர்


மனித குலத்தின் பெரும்பான்மைக்ககாக பாடுபட கூடிய ஒரு செயலை செய்ய நாம் தீர்மானம் செய்து கொண்டால் எவளவு பெரிய சுமையும் நமை வளைத்து விடாது  காரணம் நாம் செய்யும் அந்த செயல் இந்த பெரிய மனித குலத்தின் மீட்பிற்கு வேண்டி இருக்கிறபடியால் .அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்வு முடிவு இல்லாததும் அகங்காரம் அற்றதும் ஆகும்.அந்த மகிழ்வு இந்தமொத்தமக்கள் திரளின்  மகிழ்வு ஆகும் ,அப்படி இந்த மொத்த மக்கள் திரளின் மகிழ்வு சமத்துவம் வேண்டி தன் வாழ்நாள் எல்லாம்  உழைத்த மாபெரும் புரட்சியாளர் இந்தியாவின் ஒரு முகம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (14-04-1891)

பிறப்பு :

இன்றைய மத்தியபிரதேசத்தில் உள்ள "மாவ் " என்னும் ஊரில் ராம்ஜீ மாலோஜி சக்பாலுக்கும் 
பீமாபாயிக்கும் பதிநான்காவது  குழந்தையாக 11-04-1989 அன்று அண்ணல் பிறந்தார் .அவர் தந்தை ராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி செய்து கொண்டு இருந்தார் .

இளமையும் கல்வியும் :

தாழ்த்த பட்ட சாதிகளில் ஒன்றான மகர் சாதியில் பிறந்ததினால்  சிறு வயது முதலே சாதி இந்துகளின் கொடுமைகளை அனுபவித்தார் .1900 ஆண்டில் சத்ராவில் தனது தொடக்க கல்வி பயின்றார் ,அங்கு தாழ்த்த பட்ட மாணவர்கள் தனியே அமர வேண்டும் அவர்கள் யார் உடனும் பேச விளையாட கூடாது .அவர்கள் புத்தகம் குறிப்பேடு ஆகியவற்றை யாரும் தொட மாட்டார்கள் ,கேள்வி கேட்க கூடாது .தரையில் அமர கோணி பை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் ,தண்ணீர் குடிக்க யாராவது ஊற்றினால் மட்டுமே கையால் தண்ணீரை ஏந்தி குடிக்க வேண்டும் ,வடமொழி கற்க தடை ,மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொது தாழ்ந்த சாதி என்று சொல்லி குப்பை கொட்டுவது போல் ரோட்டில் வண்டியில் இருந்து அண்ணலையும் அவர் அண்ணனையும்  கொட்டியது ,இப்படி பல்வேறு கொடுமைகள்,அந்த பிஞ்சு மனதில் தன்னை போல் ஒடுக்க படும் கோடான கோடி மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வைத்தது .இப்படி பல கொடுமைகள் நடந்தாலும் மகாதேவ் அம்பேத்கர்  என்ற பிராமண ஆசிரியர் அண்ணல் மேல் அன்பும் அக்கறையும் எடுத்து கவனித்து கொண்ட படியால் தன் பெயரில் அம்பேத்கர் என்ற தனது பிரமாண ஆசிரியர் பெயரை இணைத்து கொண்டார் அண்ணல் ..


1904 ஆண்டு மும்பையில் குடியேறியது அம்பேத்கர் அவர்களின் குடும்பம் அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலை பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார் அண்ணல் .தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் சாதி இந்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மிக்க மனவேதனை அடைந்தார் .ஆனாலும் 1907 ஆண்டு நடந்த மெட்ரிக் தேர்வில்  வெற்றி பெற்றதன் மூலம் தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த முதல் மாணவர் என்ற பெருமையை பெருமையை பெற்றார் .அர்ஜீன் கோலுஸ்கர் என்ற ஆசிரியர் அண்ணலை பாராட்டி  புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை பரிசளித்தார் ,அந்த புத்தகம் தான் அண்ணலின் பின்நாள் சிந்தனை புரட்சியின் அடித்தளம் .




1908இல் ராமாபாய் அவர்கள் உடன் அண்ணல் திருமணம் நடைபெற்றது .அதன் பின் அண்ணல் கல்லூரி படிக்க பரோடா மன்னர் உதவி செய்ததால் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்த்தார் .அங்கும் சாதி கொடுமைகள் தொடர்ந்தாலும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்பும் அரவணைப்பும் அண்ணலுக்கு கிட்டியது .1912 பொருளாதரம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்ற பின் ஏற்கனவே அளித்து இருந்த வாக்குறுதி படி பரோடா மன்னர் அரசில் பணியில் சேர்ந்தார் .அங்கும் சாதி கொடுமை தொடந்தது ,ஆனாலும் அவர் அறிவு பசி அடங்க வில்லை அடுத்த  ஆண்டு உதவி தொகை பெற்று அமெரிக்கா சென்று பொருளாதரத்தில் எம் ஏ பட்டம் 1915 பெற்றார்.இந்திய லாபபங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு அண்ணலுக்கு கொலம்பிய பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது,அடுத்து 1921 ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவல் ஆக்குதல் என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும் 1923 ஆண்டு ரூபாயின் பிரச்னை என்ற ஆய்வுக்கு டி எஸ் ஈ பட்டமும் பெற்றார் .

அரசியல் மற்றும் சமூக பணிகள் .

மக்கள் பயன் அடையும் விதமாக பீப்பிள் எடிகேசன் சொசைட்டி என்ற அமைப்பை நிறுவி உயர்நிலை பள்ளி ,தொழிற்கல்லூரி ,கலை கல்லூரி ஏற்பட வழி செய்தார் .சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் வழிமுறைகளை  பயில எதிர்கால பிரதிநிதிகளுக்காக ஒரு கல்லூரி தோற்றுவித்தார் . அண்ணலின் கல்வி மற்றும் புத்தக வாசிப்பு ,வெளிநாட்டு பயணம் அவர் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தின .பரோடா சமஸ்தானத்தின் முதலீட்டு ஆலோசகர் ஆகவும் ராணுவ செயலர் ஆகவும் சிறிது காலம் பணி செய்து விட்டு பின் மும்பையில் உள்ள கல்லூரியில் பொருளியல் பேரசிரியர் ஆக பணி செய்தார் .அவரால் தொடர்ந்து ஒரு இடத்திலும்  நிலையாய் இருக்க முடிவதில்லை காரணம் சாதி அடுக்குமுறையின் கோரங்கள்  அதனால் தான் அண்ணல் அந்த சாதியை களைய ஒடுக்க பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் எல்லாம் போரடினார் .

1919 அரசியல் அமைப்பை ஆய்வு செய்ய ஆங்கில அரசு சௌத்பாரோ கமிட்டி நியமனம் செய்தது .அதில் அண்ணலும் ஆங்கில அரசால் அழைக்க பட்டு இருந்தார் .தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதி முறை தேவை என்று உரத்து தன் குரலை பதிவு செய்தார் .தாழ்த்த பட்ட மக்கள் நலன் வேண்டி "மூக் நாயக் " பத்திரிக்கை ஏற்படுத்தி பணி செய்தார் .1920 இல் அரசியலில் நுழைந்தார் .கூட்டம் ,மாநாடு மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .ஒதுக்க பட்ட பாரதம்  பத்திரிக்கையும் நடத்தினார் .1924 ஒடுக்க பட்ட மக்களின் முன்னேற்றம் வேண்டி "பகிஸ்கிருத கிதாகரணி சபா " என்ற அமைப்பை நிறுவி கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் வேண்டி போராடினர் .1927இல் சவ்தார் குளம் நீர் எடுக்கும் போரட்டம் மற்றும் கலாரம் கோயில் நுழைவு போரட்டம் நடத்தி வெற்றி கண்டார் .1928இல் பம்பாய் சட்ட பேரவைக்கு தேர்வு செய்ய பட்டார் அப்போது சிறுபிள்ளை கல்வி ,தாய்மார்களின் மகப்பேறு காலஉதவி ,விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவற்றை ஏற்படுத்தினார். விவசாய அடிமை முறை ஒழிப்பு ,தீண்டாமை எதிரான சட்டம்,தொழிலாளர் எட்டு மணி நேர வேலை ,அவசர கால ,ஓய்வு கால உதவி போன்றவற்றை நடைமுறை படுத்தினார் .  1930 லண்டன் வட்ட மேசை மாநாடு கிளம்பும் முன் என் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் அதேபோல் சுயராஜ்யம் வேண்டியும் போரடுவேன் என்றார் .தாழ்த்த பட்ட அனைத்து சாதிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசரத்தை உணர்த்தினார் ஆனால் அண்ணலின் எண்ணம் இன்று வரை நிறைவேற வில்லை .

இரண்டாம் வட்ட மேசை மாநாடும் பூனா உடன்படிக்கையும் .

இரண்டாம் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடை பெற்றது .அங்கு தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்க பட்டது அங்கு தாழ்த்த பட்டவர்களுக்கு தனி வாக்குரிமை ,விகிதாசாரா பிரதிநிதித்துவம் இரண்டும் வேண்டி அண்ணல் குரல் கொடுத்தார் .ஆனால் மகாத்மா காந்தி தனி வாக்குரிமை (தாழ்த்த பட்ட மக்களுக்கான தொகுதியில் தாழ்த்த பட்ட மக்கள் மட்டுமே வாக்கு செலுத்த இயலும் )கடுமையாக எதிர்த்தார் .ஆங்கில அரசு அண்ணல் கேட்ட உரிமை வழங்கியது ,இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்த படியால் எரவாடா சிறையில் அடைக்க பட்டார் இதனால் நாட்டில் குழப்பம் நேர்ந்தது .நிறைய தலைவர்கள் அண்ணல் உடன் பேசியதன் விளைவாக அண்ணல் மாகத்மா காந்தியை சந்தித்து பேசி 19321 செப்டம்பர் 24 அன்று பூனா ஒப்பந்தம் கை எழுத்து ஆனது இதன் விளைவாக தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்க படும் அதில் எல்லா மக்களும் வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்ய பட்டது .இந்த நிகழ்வால் மனம் வெதும்பிய அண்ணல் காந்தியை மிக கடுமையாக விமர்சித்தார் "காந்திஜி உண்ணாவிரதம்கடுமையான ஆயுதம் தான் ஆனால் அதை அடிக்கடி கையில் எடுக்க வேண்டாம் ,ஆயுதம் மழுங்கி விடும் நீங்களும்  இருக்க மாட்டீர்கள், நீங்கள் இந்த தேசத்திற்கு தேவை படலாம்.மேலும் காந்தியை துறவி என்றும் மகாத்மா என்றும் அழைக்காதீர்கள் அவர் ஒரு சந்தர்ப்ப அரசியல்வாதி ,சீசனுக்கு சீசன் அவர் குணம் ஆதரவு மாறும் ஆனல் தலித் எனது மதத்தில் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் மாறாது  என்றார் .இன்றும் அண்ணலையும் மகாத்மாவையும் எதிர் எதிர் நிறுத்தி காந்தியை துரோகி என்று விமர்சனம் நடை பெறுகிறது ஆனால் முதல் சட்ட அமைச்சர் ஆன அண்ணல் தனி வாக்குரிமை கோரவே இல்லை மேலும் ஏற்கனவே இருந்த முஸ்லிம் மற்றும் சீக்கிய தனி வாக்குரிமை  தடை செய்து சட்டம்  இயற்றி அதன் காரணத்தை விளக்கி அரசியல் நிர்ணய குழுவில்  உரையாற்றினார்  ,இதுவே நகை முரண் .

இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் பங்கு 

இந்திய சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டை வழி நடத்த புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் குழுவுக்கு மிக சிறந்த அறிவாளி ஆன அண்ணல் நேரு மற்றும் காந்தியின் எண்ணத்தின் பேரில் நியமனம் செய்ய பட்டார் .உடன் நியமிக்க பட்ட வரைவு குழுவின் உறுப்பினர் பின் வாங்கினாலும் கையால் முழுவதும் எழுத பட்ட உலகின் சிறந்த அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்தார் அண்ணல். 26 நவமபர் 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்று கொள்ள பட்டது .தாழ்த்த பட்ட சாதிகள் ,பழங்குடிகள் ஆகியோருக்கு அரசு வேலை கல்வி இடஒதுக்கீடு கொண்டு வந்து சம தர்ம சமூகம் உருவாக வலி செய்தார் .மேலும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆகவும் நியமனம் செய்யபட்டு சிறப்பாக  பட்டார் ,அண்ணல் அவர்களால் எழுத பட்ட அரசியல் சாசனம் மிக சிறந்த சமூக ஆவணம் என்று இன்று வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கின்றனர் .இந்து நெறியியல் சட்டத்தை ஏற்படுத்த நேரு கால தாமதம் எடுத்து கொண்டதால் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார் ,ஆனாலும் நேரும் சட்டத்தை தனி தனியாக உடைத்து நிறைவேற்றினார்  ,அண்ணல் எதிர் கட்சியில் அமர்ந்து இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார் .அண்ணல் பதவி விலகினாலும்  தாழ்த்த பட்ட ஒடுக்க பட்ட மக்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றம் உள்ளும் வெளியே சமூகத்திலும் போராடினார் .

அண்ணல் 1921 ஆண்டு வரை தொழில் முறை பொருளாதர நிபுணர் ஆக பணி செய்த போது பொருளாதாரம் குறித்து மூன்று புத்தகங்களை எழுதினார் .

1.கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் மற்றும் நிதியும் 
2.பிரித்தானிய இந்தியாவின் மகாணங்களில் நிதியின் பரிமாணம் 
3.ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும் 

கில்டன் யங் ஆணையத்திடம் 1934இல் அண்ணல் கூறிய கருத்துகள் அடிப்படையில் தான் ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கபட்டது இந்தியாவில்   

இன்று இந்தியாவில் பல்வேறு தாழ்த்த பட்ட மக்கள் சமூக முன்னேற்றம் பெற அண்ணல் கொண்டு வந்த இட ஒதுக்கீடு முக்கியமானது ,அவராலே இன்று பலர் படித்து உள்ளனர் ,ஆனால் அண்ணல் தொடங்கி வைத்த போரட்டம் தொடர வில்லை என்பதும் இங்கு நிதர்சனமாய் இருக்கிறது 




யார் சூத்திரர்கள் ? சாதி ஒழிப்பு ,இந்துசியத்தின் தத்துவம் ஆகியவை அண்ணல் சாதிக்கு எதிராக எழுதிய  முக்கிய நூல்கள் .புத்த மதத்தின் கொள்கைகளால் கவரபட்டு எல்லா மக்களையும் பார்ப்பணிய இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தில் இணைத்து சாதி இழிவு அகற்ற வழி சமைத்தார் .இலங்கையில் நடை பெற்ற புத்த சமய துறவிகள் அறிவு ஜீவிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். 1955 ஆண்டில் பாரதிய பௌத்த மகாசபை தோற்றுவித்தார். 1956 ஆண்டு புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதினார் .புத்தர் அல்லது காரல் மார்க்ஸ் என்ற புத்தகம் நிறைவு பெற வில்லை .நான் இந்துவாக பிறந்தேன் இந்துவாக மரிக்க மாட்டேன் என்று முன்பு அண்ணல் சொன்ன படி 1956  அக்டோபர் 26 இல் நாக்பூரில் விழா எடுத்து புத்த சமயம் மாறினார் .அவருடன் இலச்சகணக்கான மக்களும் புத்த மதம் மாறினார் .

இறுதி காலம் 

1948 இல் இருந்து அண்ணல் நீரழிவு நோயால் பாதிக்க பட்டு இருந்தார் அதன் காரணமாய் சாப்பிட்ட மருந்துகளால் கண் பார்வை குறைந்தது .1955 உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது .புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாளுக்கு பிறகு 1956 டிசம்பர் 6 டெல்லியில் இரவு தூக்கத்தில் அண்ணல் உயிர் துறந்தார் .1990 இல் அண்ணலுக்கு இந்த தேசத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க பட்டது .

ஒடுக்க பட்ட சமூகத்தில் பிறந்து இந்த தேசத்தின் விடுதலை அரசியல் சாசனத்தை வரைந்த மாபெரும் சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்  அரசியல் ,பொருளாதரம் ,சட்டம் என்ற அனைத்து துறையிலும் மேதை ஆக விளங்கினார் .இந்திய சாதியின் பழமை வாத ஒடுக்குமுறை பக்கங்களை கிழித்து எரிந்த மாமேதை அண்ணல் ,ஈடு இணையற்ற சமூக போராளி ,எல்லோருக்குமான ஆதர்ச பிம்பம் .அண்ணலை வாழ்கையில் ஏந்துவோம் .


இறுதியாக வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குகா எழுதிய வரிகளோடு முடிப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைகிக்றேன். "திரைக்கதை எழுத்தாளருக்கும்   ஐதீகம் சமைப்பவருக்கு வேண்டும் என்றல் ஒரே ஒரு காதாநாயகன் தேவை படலாம் ,ஆனால் வரலாற்று ஆசிரியனுக்கு அத்தகைய கட்டு பாடுகள் இல்லை ,தலித் சுதந்திர போரட்ட வரலாறு என்பது இன்னமும் முடிவு பெறாததும் பெரும்பாலன பகுதிகள் இன்னும் எழுத படாத ஒன்றும் ஆகும் ,ஒன்றுக்கு மேற்பட்ட கதையின் நாயகர்கள் அதில் இருப்பார்கள் அதில் அண்ணலும் ,மாகாத்மாவும் மிக சிறப்பான தொடக்கம் ஆக அமைவர் அப்படி இந்த தேசத்தின் ஒரு கதாநாயகன் ஆகிய அண்ணல் பிறந்த நாள் இன்று   


செவ்வாய், 11 மார்ச், 2014

என் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )

சோர்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் தோழிகள்(தேவதைகள்) வானவனையும் இயல் இசை வல்லபியையும் குறித்து சிந்திக்கையில் மனதில் உடனடி நம்பிக்கை ,மகிழ்வு ஏற்படுவது எப்போதுமான நிகழ்வு ,எனது வாழ்வை குறித்த எண்ணத்தை மாற்றி  என் அளவில் நான் நிறைய மாறி இருக்க  என் இரு தோழிகளும்  ஒரு காரணம் ,நான் பார்த்து வியந்த அருமை தோழிகள் பற்றிய பதிவு தான் இது 

தசை சிதைவு நோயால் பாதிக்க பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி ,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவும் நோக்கில்  ஆதவா ட்ரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நிறுவி நடத்தி வருகின்றனர் .முகப்பின் மூலம் (face book ) தான் எங்கள் அறிமுகம் ஏற்பட்டது ,முதன் முதலில் chat box வழி தான் உரையாட தொடங்கினேன் வானவன் உடன் .இந்த உரையாடல் புத்தகம் ,சமூகம் என்று தொடந்து சென்று கொண்டு இருந்தது .ஏற்கனவே வானவன் மாதேவி மற்றும் இயல் இசை குறித்து எழுத பட்ட கட்டுரைகளை  படித்து விட்டதால் என் மானசிக தோழிகள் மேல் அளவு கடந்த அன்பில் நிறைந்து இருந்தேன் ,பின் ஒரு நாள் தொடர்பு எண் வாங்கி பேச தொடங்கினேன் , நிறைய நேரம் இந்த சமூகமும் புத்தகமும் குறித்து பேசி கொண்டே இருப்போம் .எப்போது நேரில் பார்போம் என்று மனம் ஏங்க தொடங்கியது .அந்த நாளும் வந்தது 
விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன் ,நன் ஏற்கனவே வாக்களித்தபடி என் தோழிகளை சந்திக்கும் அந்த நாளும் வந்தது .நாகர்கோவிலில் இருந்து இரவு தனியார் பஸ் பிடித்து மறுநாள் காலை சேலம் வந்து இறங்கினேன் .தொலைபேசி வழி வானவனை அழைத்தேன் .தொலைபேசியை எடுத்த வானவன் தம்பி நாகராஜை அனுப்புவதாக சொன்னாள் .நானும் என் அண்ணனும் பேருந்து நிலையத்தில் எதிர்புறம் காத்து இருந்தேன் ,தம்பி நாகராஜ் வந்து சேந்தான் ,நலம் வசாரிப்புகள் முடிந்த பின்பு அவன் பைக்கில் பின்புறம் அமர்ந்து கொண்டு என் தேவதைகளை சந்திக்க பயணம் ஆனேன் .என் தேவதைகளின் இல்லம் அடைந்தேன் .முக மலர்வுடன் என்னை வரவேற்று ஜானி எப்படி இருக்க என்றாள் என் தேவதை .அப்போது தான் முதன் முதலில் நேரில் பார்த்த படியால் ஒரு நிமிடம் என்  கண்ணை என்னால் நம்ப முடிய வில்லை. வாழ்வின் ஓவ்வொரு நாளோடும் போட்டி போட்டு கொண்டு என் தேவதைகள்  வாழ்ந்து வருகிறார்கள் ,வெற்றி என்றும் என் தேவதைகள் பக்கமே 






சுவையான காலை உணவு உண்ட பின் பேச ஆரம்பித்தோம் ,ஒரு நாள் முழுவதும் பேசினோம் ஒரு நாள் ஏன் அவளவு வேகமாக நகர்கிறது என்று நினைக்கும் படி நேரம் மிக வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது .உடலால் ஒடுங்கி போய் இருந்தாலும் வார்த்தையால் முக மலர்ச்சியால் அவர்களின் உற்சாகம் என்னுள்ளும் பற்றி கொண்டது .சிறு வயதிலே ஒருவர் அடுத்து மற்றவர் நோய் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவம் பார்த்து என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் இறுதியாக  மாற்று மருத்தவம் நாடி அதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்கலாம் என்று கண்டு இப்போது தனை போல் வாழும் எத்தனையோ மக்களை விடுவிக்க என்றும் போராடி கொண்டு இருகிறார்கள் என் தோழிகள். தங்கள் வாழ்வு முடங்கி விட்டது என்று வீடுகளில் அடைந்து கிடந்த தொடக்க காலத்தில் அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி சமூகம் குறித்து சிந்திக்க செய்ததில் புத்தகங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு .உண்மையில் புத்தகவாசிப்பின் மூலமே இந்த பேருலக்தின் கதவு அவரகளுக்கு திறக்க பட்டதும் ,சமூக சிந்தனை அதிகம் வெளி பட்டதும் ,காந்தியை குறித்து அதிகம் வாசித்து விவாதித்த படியால் மிக எளிமையாக வாழ்வது எப்படி என்று கற்று அதன் படி தான் வாழ்கின்றனர் ,பெரிதாக எதுவும் ஆசைகள் இல்லாவிட்டலும் இந்த சமூகத்தின் நல வாழ்வு மீது பேராசை உண்டு என் தேவதைகளுக்கு எப்போதும் .புத்தகம் என்ன தான் செய்யமுடியும் என்று கேட்பவர்களுக்கு நான் உடனே கை காட்டுவேன் புத்தகம் எதுவும் செய்யும் என்று என் தேவதைகளை நோக்கி 





அடுத்து தேவதைகள் நடத்தும் சிறப்பு மாற்று மருத்துவம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டேன் ,என் தேவதைகள் செய்வது மிக சிறப்பான பணி ,அங்கு மாற்று மருத்தவம் பெற வருபவர்களின் முகத்தில் வாழ்வின் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள் .இந்த பணி தினமும் தொடர்கிறது .மேலும் இப்படி பட்ட சிறப்பு குழந்தைகளின்  வாழ்வின் நலனுக்கு வேண்டி அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள், உபகரணங்கள்  கொடுத்து இருக்கிறார்கள்,சிறப்பு குழந்தைகளை  மகிழுந்து மூலம் கூட்டி வந்து மருத்துவம் பார்த்து பிறகு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கின்றனர் .சிறப்பு குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்வுக்கு வேண்டி அவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு தொடங்கி இருக்கிறார்கள் .பல்வேறு ஊர்களில் மாற்று மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறார்கள் இன்னும் பல்வேறு பணிகள் ,இந்த நோய் ஏற்பட முக்கிய காரணம் சுற்று சூழல் சீர்கேடு அதற்கு எதிராக பல்வேறு போரட்டம் மற்றும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் மாற்று மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டு கொண்ட படியால் இந்த வருட இறுதியில் நடத்தி தர ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் .அநேகமாக டிசம்பர் இறுதியில் நான் பிறந்த மண்ணில்  நடந்த இருக்கிறோம் அதறகான  ஏற்பாடுகளை செய்ய வேண்டும் 



தன் வீட்டின் முன் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து இருக்கிறார்கள் அதில் இருக்கும் எல்லா புத்தகத்தையும் படித்து முடித்து எதை குறித்து கேட்டாலும் விவாதிக்க தயாரக இருப்பது 
என் தேவதைகளின் சிறப்பு. நான் விடை பெரும் மாலை வேளை வந்தது.அதே நேரம் ,என்னை  பேருந்து நிலையம் சேர்க்க ஆட்டோ அழைத்து இருந்தாள் வானா ,ஏற்கனவே தம்பி ....... தனியார் பேருந்தில் முன்பதிவும் செய்து இருந்தான் ,மொத்த மகிழ்வுடனும் பிரிகிறோம் என்ற சோகத்துடனும் விடை பெற்றேன் என் தேவதைகள் வசிக்கும் கூட்டில் இருந்து 

என் தேவதைகளை குறித்து ஏற்கனவே எழுத பட்டுள்ள கட்டுரைகள் 
1.மகத்தான சந்திப்பு
2.ஒளிவிடு ஒளியேற்று
3.ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி
4.வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.


ஒளிவிடு ஒளியேற்று என்று லோகோவில் வைத்து இருப்பதால் தான் என்னவோ எப்போதும் நமக்கு ஒளி தரும் சூரியன் போல் நம்பிக்கையின் கீற்றுகளை பொழிந்து கொண்டே இருகின்றனர். நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியா ஆனால் ஒன்றும் செய்யாவிட்டால் எதுவுமே இங்கு நடைபெறாது என்ற காந்தியின் வரிகள் படி வாழும் என் தேவதைகள் நீங்கள் என்ன செய்தாலும் அது பெரிய விடயம் இல்லை ஆனால் நீங்கள் அதை செய்து ஆக வேண்டும் ,நீங்களே செய்யாவிட்டால் யார் தான் செய்வார்கள் என்பது எத்தனை உண்மை என்பதை என் தேவதைகளை சந்திக்கும் எல்லோரும் கற்று கொள்ளலாம் .ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கும் ஆதவா டிரஸ்ட் முன் பல்வேறு பணிகள் காத்து இருக்கிறது,இதில் நமது பங்களிப்பு என்னவாக இருக்க போகிறது .............இப்போது நம் முன் இருக்கும் பணிகள் 

1. மருத்துவ உதவிகளை மாவட்டம்தோறும் வழங்கவும் நோய் குறித்த விழிப்புணர்வு வழங்கவும் ஒரு முகாம் நடத்த சுமார் 50,000 ரூபாய் செலவாகிறது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

2. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக தற்போது ஒரு வாகனம் வாங்கி இருக்கிறோம். அதற்கு இன்னும் சுமார் 50,000 ரூபாய் பணம் செலுத்தவேண்டியுள்ளது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

3. சிகிச்சை மையத்திற்கான மாத வாடகை ரூபாய் 4,500 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

4. இலவச கணினி பயிற்சி அளிக்க ஆகும் செலவு ரூபாய் 5000 
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

5. மருத்துவமனையுடன் கூடிய இல்லம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் வாங்க சுமார் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதற்கு வேண்டி உதவி செய்யலாம் 

உங்கள் தீபங்களில் ஒளிரும் சுடர் போதும் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற!

உங்கள் நன்கொடைகளை " Aadhav Trust" என்ற பெயருக்கு Cheque / DD அனுப்பலாம்.

Bank Name : Canara Bank

SB Account Name: Aadhav Trust

Branch : Suramangalam,

Name : A/c No : 1219101036462

IFSC Code: CNRB0001219

MICR Code: 636015005

தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.


வாழ்நாளில் நீங்கள் என் தோழிகளை சென்று காணா விட்டால் நீங்கள் வாழ்த்த வாழ்கை அர்த்தம் அற்றது என்பதே என்கருத்து .ஒரு முறை சென்று காணுங்கள் வாழ்வை குறித்து உங்கள் எல்லா பதங்களும் அடித்து நொறுக்க படும் .உங்கள் வாழ்வில் நீங்கள் சமூக சிந்தனை உள்ள மனிதன் ஆக மாறி தான் போவீர்கள் ......
விரைவில் என் தேவதைகள் தங்கள் வாழ்கை குறித்து புத்தகம் எழுதுவார்கள் ,அதை படிக்க இப்போதே ஆவல் கொண்டு இருக்கிறேன் ....
தொடர்பு முகவரி 

ஆதவா டிரஸ்ட் 
489-B வங்கி அலுவலர் காலனி 
ஹஸ்தம் பட்டி 
சேலம் -636007
தமிழ் நாடு 
இந்தியா 
தொடர்பு எண் :00919976399403